திங்கள், 5 நவம்பர், 2012

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் - 360 டிகிரி போட்டோ

கடந்த பல வருடங்களாக போட்டோகிராபியில் பல நூதன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அவைகளில் ஒன்றுதான் 360 டிகிரி போட்டோக்கள். கூகுள் மேப்பில் இந்த மாதிரியான படங்கள் உள்ளன.

இதில் என்ன விசேஷம் என்றால், நாம் ஒரு இடத்தில் இருந்து கொண்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தால் எந்த மாதிரி தெரியுமோ அது மாதிரி போட்டோவில் தெரியும். அம்புக்குறிகளையோ மவுஸையோ பயன்படுத்தி இந்த போட்டோக்களை சுற்ற வைக்கலாம்.

இது என்னமோ பெரிய இந்திர ஜால வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பொழுது போகாமல் கூகுளை மேய்ந்து கொண்டிருந்தபோது இதைப்பற்றி ஆராய்ந்தேன். இந்த மாதிரி செய்து கொடுப்பதற்கு ஒரு தளம் கண்ணில் பட்டது.

http://www.panomonkey.com/

இந்த தளத்தில் சொல்லியுள்ள மாதிரி போட்டோக்கள் எடுத்து அந்த தளத்தில் அப்லோடு செய்தால் 360 டிகிரி போட்டோ செய்து கொடுக்கிறார்கள். அப்படி செய்த ஒரு போட்டோவை இங்கு இணைத்திருக்குறேன். நான் இதை காசு கொடுத்து வாங்காகததால் முதல் 100 பேருக்கு மட்டும்தான் தெரியுமாம். பார்த்து நன்றாக இருக்கிறதென்று நீங்கள் கருதினால் காசு கொடுத்து வாங்கி விடுகிறேன்.வலது மேல் மூலையில் உள்ள Expand  அம்பை சுட்டினால் முழு ஸ்கிரீனிலும் தெரியும். நான் படித்து வேலை பார்த்து ஓய்வு பெற்று இன்று அமைதியான வாழ்க்கை வாழ உதவிய பல்கலைக்கழகம்.

18 கருத்துகள்:

 1. நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு

 2. நான் முதல் நூறு பேருக்குள் வந்து 360 டிகிரி படத்தைக் கண்டு மலிழ்ந்தேன். ப்ரமாதம் சார். ஆமாம் எப்போதும் ஏதாவது புதிதாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

  பதிலளிநீக்கு
 3. நம்ம காமிராவில் எடுக்கும் படத்திலேயே 360 டிகிரி பண்ண முடியுமா!! அடடா இதை நான் பெரிய கம்பசூத்திரம்னு இல்ல நினைச்சேன்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒண்ணும் கம்ப சூத்திரமே இல்லை. ஒரே இடத்தில் நின்றுகொண்டு ஒரு பதினைந்து படம் சுற்றிலும் எடுக்கவேண்டும். அவைகளை இந்த சைட்டில் கொடுத்தால் போதும். கொஞ்சம் முயற்சி வேண்டும். அவ்வளவுதான்.

   நீக்கு
 4. பணம் எவ்வளவு கட்ட வேண்டுமாம்? இப்போது பார்க்க முடியாது! காலை மகிழ்ச்சி மணித்துளிகளிதான் (happy hours - இலவச நேரம்!) பார்க்க முடியும்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு 360 டிகிரி படத்திற்கு ஏறக்குறைய இரண்டு அமெரிக்க டாலர் வேண்டுமாம்.

   நீக்கு
 5. தளத்தைக் குறித்து வைத்துக் கொண்டேன்!

  பதிலளிநீக்கு
 6. மிக மிக அருமையா இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு
 7. தங்களின் சிறப்பான முயற்சிக்கு நிறைவான பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 8. இவர் தான் உங்களுக்கு படியளக்கும் பகவானா? நன்னா மூக்கும் முழியுமா இருக்கார்! ஆத்தில இருந்தே சேவிச்சுக்க வசதியா பண்ணிட்டேளே!

  பதிலளிநீக்கு
 9. அருமையன் தகவல் தங்களது முயற்சிக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. நேரில் பார்த்த மகிழ்ச்சி
  மிக அருமை
  நன்றி

  பதிலளிநீக்கு
 11. நானும் பார்த்தேன். நல்லா இருக்கு. நம்ம வீட்டிலும் ஒரு நெருங்கிய சொந்தம் அங்கேதான் படிச்சு இப்போ அங்கேதான் வேலையும் செய்யறாங்க.

  பதிலளிநீக்கு
 12. தாங்கள் படித்து, வேலை பார்த்த, பல்கலைக் கழகத்தை 360 டிகிரியில் பார்த்து மகிழ்ந்தேன். மிக அருமை.

  பதிலளிநீக்கு