சனி, 22 நவம்பர், 2014

VGK 11 ] நாவினால் சுட்ட வடு




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


விமர்சனம்.

தமிழ் நாட்டு சமூக வழக்கங்களில் ஒன்று, ஒரு வீட்டில் யாருக்காவது கல்யாணம் ஆகி இருந்தால் கல்யாணம் முடிந்து ஆறாவது மாதத்திலிருந்து “விசேஷம் ஒன்றும் இல்லையா” என்று பெண்ணைப் பெற்றவர்களையும் புகுந்த வீட்டிலுள்ளவர்களையும் துளைத்தெடுப்பது. இன்னும் சில ஜன்மங்கள் பெண்ணையே நேரில் கேட்டு அந்தப் பெண்ணின் மனதை நோகடிப்பார்கள். இது காலம் காலமாகத் தொடரும் வேதனைக் கதை.

இந்த நிலைக்கு பெண் மட்டுமே பொறுப்பு என்பது அநேகரின் கருத்து. ஆனால் ஆணும் இதற்கு பொறுப்பாகிறான் என்பது விஞ்ஞானம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும் இந்தக் கதையில் வரும் ஆண்மகன் தன் மனைவியை மட்டுமே பொறுப்பாக்குகிறான். இது இன்னும் வேதனைக்குரிய நிலை.

தவிர அவன் அவளை குழந்தைப் பாசம் என்னவென்று தெரியாது என்று குற்றம் சுமத்துமிடம் மனதுக்கு கஷ்டமாயிருக்கிறது. ஏதோ அவனுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருக்கிற மாதிரி அவன் பேசுகிறான். தவிர அவன் அவனுடைய முன்னாள் காதலியிடம் இன்னும் காதல் வைத்திருப்பது போல் கதாசிரியர் காட்டியிருக்கிறார். இந்த இரண்டு குணாதிசியங்களும் கதாநாயகனை மிகவும் கீழே தள்ளுகிறது. இந்த இடத்தில் ஆசிரியர் செய்தது முள்ளாக குத்துகிறது.


பழனி. கந்தசாமி.