சனி, 22 நவம்பர், 2014

VGK 11 ] நாவினால் சுட்ட வடு




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


விமர்சனம்.

தமிழ் நாட்டு சமூக வழக்கங்களில் ஒன்று, ஒரு வீட்டில் யாருக்காவது கல்யாணம் ஆகி இருந்தால் கல்யாணம் முடிந்து ஆறாவது மாதத்திலிருந்து “விசேஷம் ஒன்றும் இல்லையா” என்று பெண்ணைப் பெற்றவர்களையும் புகுந்த வீட்டிலுள்ளவர்களையும் துளைத்தெடுப்பது. இன்னும் சில ஜன்மங்கள் பெண்ணையே நேரில் கேட்டு அந்தப் பெண்ணின் மனதை நோகடிப்பார்கள். இது காலம் காலமாகத் தொடரும் வேதனைக் கதை.

இந்த நிலைக்கு பெண் மட்டுமே பொறுப்பு என்பது அநேகரின் கருத்து. ஆனால் ஆணும் இதற்கு பொறுப்பாகிறான் என்பது விஞ்ஞானம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும் இந்தக் கதையில் வரும் ஆண்மகன் தன் மனைவியை மட்டுமே பொறுப்பாக்குகிறான். இது இன்னும் வேதனைக்குரிய நிலை.

தவிர அவன் அவளை குழந்தைப் பாசம் என்னவென்று தெரியாது என்று குற்றம் சுமத்துமிடம் மனதுக்கு கஷ்டமாயிருக்கிறது. ஏதோ அவனுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருக்கிற மாதிரி அவன் பேசுகிறான். தவிர அவன் அவனுடைய முன்னாள் காதலியிடம் இன்னும் காதல் வைத்திருப்பது போல் கதாசிரியர் காட்டியிருக்கிறார். இந்த இரண்டு குணாதிசியங்களும் கதாநாயகனை மிகவும் கீழே தள்ளுகிறது. இந்த இடத்தில் ஆசிரியர் செய்தது முள்ளாக குத்துகிறது.


பழனி. கந்தசாமி.

10 கருத்துகள்:

  1. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் படிக்க ....... முள்ளாக குத்துகிறது. :)))))

    தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சென்றுள்ள இடங்களில் ஆலிவ் ஆயில் சலீசாக கிடைக்கும். கொஞ்சம் வாங்கி முள் குத்தின இடங்களில் தடவினால் இதமாக இருக்குமே. :)

      நீக்கு
    2. Respected & Dear Sir,

      Good Morning !

      //நீங்கள் சென்றுள்ள இடங்களில் ஆலிவ் ஆயில் சலீசாக கிடைக்கும். கொஞ்சம் வாங்கி முள் குத்தின இடங்களில் தடவினால் இதமாக இருக்குமே. :)//

      Aaah haa hhaah haa :)

      I am unable to type in Tamil here.

      athu Mikapperiya Kodumaiyaaka ULLathu Sir.

      Athu mattume enakku MuLLaay KuththukiRathu.

      athanaal thangkaLin vaarththaikaLaiye kashtappattu VETTI + OTTI pottuLLen. :)

      Anbudan VGK :)

      நீக்கு

  2. பதிவின் தலைப்புக்கு கீழே உள்ள வரிகளைப் படித்து வாய் விட்டு சிரித்தேன். திரு வைகோ அவர்களின் ‘நாவினால் சுட்ட வடு’ சிறுகதையைப் படித்தேன். அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது நமது மக்களின் தனிக் குணம். அதை அழகாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர். நமது ஆணாதிக்க சமுதாயத்தில் தங்களின் குறைகளை மறைத்து பெண்களின்மேல் பழி சுமத்துவது வழக்கம். அதையும் கோடிட்டு காட்டியிருக்கிறார் இந்த கதையில்.நீங்கள் சொன்னதுபோல் கதாநாயகனை கடைசியில் வில்லன் போல காட்டியது வருத்தமே என்றாலும் சில இடங்களில் அதுபோல் நடக்கிறது என்பது உண்மைதானே. தங்களின் மதிப்புரைக்கும் திரு வைகோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வே.நடனசபாபதி சனி, 22 நவம்பர், 2014 7:36:00 முற்பகல் IST

    // திரு வைகோ அவர்களின் ‘நாவினால் சுட்ட வடு’ சிறுகதையைப் படித்தேன். அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது நமது மக்களின் தனிக் குணம். அதை அழகாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர். நமது ஆணாதிக்க சமுதாயத்தில் தங்களின் குறைகளை மறைத்து பெண்களின்மேல் பழி சுமத்துவது வழக்கம். அதையும் கோடிட்டு காட்டியிருக்கிறார் இந்த கதையில்.நீங்கள் சொன்னதுபோல் கதாநாயகனை கடைசியில் வில்லன் போல காட்டியது வருத்தமே என்றாலும் சில இடங்களில் அதுபோல் நடக்கிறது என்பது உண்மைதானே. திரு வைகோ அவர்களுக்கும வாழ்த்துக்கள்!//

    Welcome Sir. Thanks a Lot Sir.

    - VGK from UAE 22.11.2014

    பதிலளிநீக்கு
  4. //மனஅலைகள்

    இந்தப் பதிவுகளை யாரும் காப்பியடித்துக் கொள்ளலாம். நன்றி சொல்ல வேண்டியதில்லை.//

    You are a Very Good Gentleman ! Good Comedian too !! I like you very much, Sir !!!

    பதிலளிநீக்கு
  5. நிச்சயம் உங்கள் “முக“ வரி களுக்குப் பொருத்தமானவர் அவர்தான் அய்யா,
    http://sivamindmoulders.blogspot.in/2014/09/blog-post_15.html

    பாருங்கள்!
    வை.கோ அவர்களின் சிறுகதையைப் பகிர்நதமைக்கு நன்றி

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை “
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி அய்யா!!

    பதிலளிநீக்கு
  6. அய்யா
    நான் உங்கள் தளத்தின் 600,000 ஆவது பார்வையாளன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம்... முள்ளாய் குத்தியதை இருவரும் நகைச்சுவையாய் பின்னூட்டமிட்டு அசத்தி விட்டீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு