இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்
உண்மை கசப்பானது, அன்றாட நடைமுறை வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பது
கடினம் என்று வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனாலும் உண்மையாகவே வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
அத்தகைய ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு
உடலில் இருக்கும் சிறிய குறை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற போராட்டம்தான்
இந்தக் கதை.
இளம் பெண்ணின் பருவ மாற்றங்கள் அவளுள் ஏற்படுத்தும் தாக்கங்களை
அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். அந்த எண்ண அலைகள் படிப்பவர் மனத்திலும்
ஆழ்ந்த சோகத்தை தூண்டுகிறது. நம் கையாலாகாத்தனத்தை எண்ணி நம்மை தலை குனிய வைக்கிறது.
ஆணிடம் எப்பேர்ப்பட்ட குறைகள் இருந்தாலும் அதை மறைக்கும்
இந்த சமூகம் பெண்ணிடம் இருக்கும் குறைகளை மறைத்தால் மட்டும் ஒத்துக் கொள்வதில்லை. இது
அநியாயம் என்று தெரிந்தாலும் நாம் இந்த மனப்பானமையை விடுவதில்லை. காலம் மாறுமா?