இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்
உண்மை கசப்பானது, அன்றாட நடைமுறை வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பது
கடினம் என்று வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனாலும் உண்மையாகவே வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
அத்தகைய ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு
உடலில் இருக்கும் சிறிய குறை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற போராட்டம்தான்
இந்தக் கதை.
இளம் பெண்ணின் பருவ மாற்றங்கள் அவளுள் ஏற்படுத்தும் தாக்கங்களை
அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். அந்த எண்ண அலைகள் படிப்பவர் மனத்திலும்
ஆழ்ந்த சோகத்தை தூண்டுகிறது. நம் கையாலாகாத்தனத்தை எண்ணி நம்மை தலை குனிய வைக்கிறது.
ஆணிடம் எப்பேர்ப்பட்ட குறைகள் இருந்தாலும் அதை மறைக்கும்
இந்த சமூகம் பெண்ணிடம் இருக்கும் குறைகளை மறைத்தால் மட்டும் ஒத்துக் கொள்வதில்லை. இது
அநியாயம் என்று தெரிந்தாலும் நாம் இந்த மனப்பானமையை விடுவதில்லை. காலம் மாறுமா?
ooooooooooooooooooooooooooo
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா, வணக்கம்.
தங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் சுருக்கமாகவும், சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.
தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
பதிலளிநீக்குஉண்மை கசக்கும் என்பதை விளக்கும் ‘உண்மை சற்றே வெண்மை’ என்ற திரு வைகோ அவர்களின் கதையைப் படித்தேன். கதையைப் படித்தபோது புரட்சிக் கவிஞரின் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா.’ என்ற கவிதை நினைவுக்கு வந்தது. திருமண வயதில் சொல்லமுடியாமல் தவிக்கும் பெண்களின் மன நிலையை வெகு அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் கதாசிரியர். மனதை தொட்ட கதையை எழுதிய திரு வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்களும்,அவரது கதையை படிக்க உதவிய உங்களுக்கு நன்றியும்!
//வே.நடனசபாபதி வியாழன், 4 டிசம்பர், 2014 8:09:00 முற்பகல் IST
நீக்குஉண்மை கசக்கும் என்பதை விளக்கும் ‘உண்மை சற்றே வெண்மை’ என்ற திரு வைகோ அவர்களின் கதையைப் படித்தேன். கதையைப் படித்தபோது புரட்சிக் கவிஞரின் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா.’ என்ற கவிதை நினைவுக்கு வந்தது. திருமண வயதில் சொல்லமுடியாமல் தவிக்கும் பெண்களின் மன நிலையை வெகு அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் கதாசிரியர். மனதை தொட்ட கதையை எழுதிய திரு வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்களும்,அவரது கதையை படிக்க உதவிய உங்களுக்கு நன்றியும்!//
Thanks a Lot, Sir.
- VGK