பழைய காலத்தில் கிராமங்களில் காலைக் கடனைக் கழிக்க ஊருக்கு வெளியில் பொட்டல் காட்டுக்கு செல்வார்கள். அப்படி ஒரு ஊரில் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரித்தோட்டம் இருந்தது. அந்த ஊரில் ஒருவன் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரிக்காயைப் பறித்து அதைத் தின்றுகொண்டே காலைக் கடனைக் கழித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியில் போன அந்த ஊர்க்காரன் ஒருவன் இவனைப் பார்த்து வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்கயைத் திங்கலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தவன் சொன்னான். "நான் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டால் உனக்கென்ன? "நான் வெள்ளரிக்காயை சும்மா சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்,அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், நீ யார் அதைக்கேட்க" என்றானாம். (இங்கு "அதில்" என்றால் எது என்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.
இது ஒரு கதை மட்டுமே. இந்தக் கதையை இங்கு சொல்வதற்கான காரண காரியங்களை யோசித்து உங்கள் மூளையை வீணாகக் கசக்கி வருத்தப்படவேண்டாம்.