ஞாயிறு, 2 நவம்பர், 2014

சன் டிவி மகாபாரதம்.மகாபாரதக் கதையை சிறு வயதிலிருந்து அறிந்திருந்தாலும் இப்போது வரும் டிவி சீரியல்களைப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது.

விஜய் டிவி யில் வந்து கொண்டிருந்த மகாபாரத சீரியல் முடிந்து விட்டது. சன் டிவியில் இன்னும் வந்து கொண்டிருக்கிறது.

நான் டிவி யில் ஒளி பரப்பாகும்போது நேரடியாகப் பார்க்க முடிவதில்லை. யூட்யூப்பில் வருவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  விஜய் டிவியில் வரும் அனைத்து எபிசோடுகளும் யூட்யூபில் வந்து விட்டன.

ஆனால் சன் டிவியில் வரும் மகாபாரத எபிசோடுகள் 82 வது எபிசோடு வரைக்கும் யூட்யூபில் பிரசுரமாகியது. அதன் பின்னர் நின்று விட்டது. சாம் என்பவர் இதை செய்து வந்திருக்கிறார், காப்பிரைட் பிரச்சினையால் என்னால் தொடர முடியவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த சன் டிவி மகாபாரத சீரியல் வேறு எங்காவது கிடைக்கிறதா? பதிவுலக நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.