மகாபாரதக் கதையை சிறு வயதிலிருந்து அறிந்திருந்தாலும் இப்போது வரும் டிவி சீரியல்களைப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது.
விஜய் டிவி யில் வந்து கொண்டிருந்த மகாபாரத சீரியல் முடிந்து விட்டது. சன் டிவியில் இன்னும் வந்து கொண்டிருக்கிறது.
நான் டிவி யில் ஒளி பரப்பாகும்போது நேரடியாகப் பார்க்க முடிவதில்லை. யூட்யூப்பில் வருவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விஜய் டிவியில் வரும் அனைத்து எபிசோடுகளும் யூட்யூபில் வந்து விட்டன.
ஆனால் சன் டிவியில் வரும் மகாபாரத எபிசோடுகள் 82 வது எபிசோடு வரைக்கும் யூட்யூபில் பிரசுரமாகியது. அதன் பின்னர் நின்று விட்டது. சாம் என்பவர் இதை செய்து வந்திருக்கிறார், காப்பிரைட் பிரச்சினையால் என்னால் தொடர முடியவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த சன் டிவி மகாபாரத சீரியல் வேறு எங்காவது கிடைக்கிறதா? பதிவுலக நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.
http://tamilo.com என்ற website ல் எல்லா தமிழ் தொடர்களையும் தேதி வாரியாக பார்க்கலாம்.
பதிலளிநீக்குமகாபாரதம் தொடர் link:
http://tamilo.com/mahabharathamsuntv.html
ராமராவ்
ஐயா! http://www.tamilo.com என்ற வலைப்பதிவில் அனைத்து தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் பதிவேற்றப்படுகின்றன. மகாபாரத தொடரின் கடைசி அங்கமான (Episode) 87 வரை (அதாவது நேற்று ஒளிபரப்பானது வரை ) கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளது .
பதிலளிநீக்குhttp://www.tamilo.com/mahabharathamsuntv.html
பார்த்து இரசிக்கவும்
Sir,
பதிலளிநீக்குIf you like the DD Telecast Old Mahaparatham
DVD is available in RAJ video Vision
http://rajvideovision.net/product_detail.php?id=714&sid=lahkib619s1epqg01naa2nhug4
You may try this link:
பதிலளிநீக்குhttp://www.tamilo.com/mahabharathamsuntv.html
இங்கு அதெல்லாம் பார்க்க நேரமில்லை....
பதிலளிநீக்குஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஐயா....
இதெல்லாம் எங்களைப்போன்ற கிழடுகளுக்கு ஆனது. நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.
நீக்குயார் சொன்னது மகாபாரதம் கிழடுகளுகானது என்று? இளைஞர் சமூகத்தை வழி நடத்த வேண்டிய உம்மிடமிருந்து இருந்து இவ்வாறு வார்த்தைகள் வருமானால் மகாபாரதம் சொல்லும் நீதி நெறிகளையும் பகவத்கீதையின் தார்பரியதையும் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே அர்த்தம். மகாபாரதம் கண்டிப்பாக வயது வேறுபாடின்றி மத வேறுபாடின்றி படிக்க வேண்டிய, பார்க்க வேண்டிய காவியம். அது இதிகாசம் மட்டுமல்ல ஒரு செவ்விலக்கியம்.
நீக்குமகாபாரதம் நீதிக்கதையா? அது ஒரு காவியம் மட்டுமேயாகும். பெண்டாட்டியை வைத்து சூதாடலாம். வெல்வதற்கு சூழ்ச்சி செய்யலாம். எந்த கருமத்தை வேண்டுமானாலும் பண்ணிவிட்டு "இதுவே இராஜ நீதியும் இராஜ தர்மமுமாகும்" என்று கூறலாம். இதுவே மகாபாரத நீதியாகும்.
நீக்குஇந்த வயதிலும் பதிவுலகில் புகுந்து இளைஞர்களுக்கு சவால் விடும் நீங்கள் கிழவர்களா? மனம் ஏற்றுகொள்ள மாறுகிறது. இணையத்தில் email அடிக்க தடுமாறும் பலர் உளர் ஐயா. இந்த வயதில் தளராத துணிவோடு இணையத்தில் போராடும் தாங்கள் இளைஞனே.
பதிலளிநீக்குவேகமான உலகம் இது. இதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க நேரமில்லை. உண்மைதான்.
பதிலளிநீக்குஅந்த காலத்தில் பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொண்டும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்கு எப்படி தீர்வுகள் வந்தன என்பதை கண் முன் கண்டுகொண்டும் இருந்ததால் உலகம் நன்றாக இருந்தது.
இந்த காலத்தில் சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி தொடர்களும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கெட்ட காரியங்களை வெளிச்சம் போட்டு காட்டி அரை மனதுடன் இருப்பவர்களையும் தப்[பு செய்ய தூண்டும் ஊடகங்களும்தானே.
இதற்கு மத்தியில் ஒரே குப்பையாக உள்ள தொலைக்காட்சிகளில் உருப்படியாக வந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான அறிவுரை கூறும் நல்லொழுக்கத்தை பறை சாற்றும் இதிகாச தொடர்களையும் பார்க்க நேரமில்லை என்றால் இந்த உலகை வருங்கால சமுதாயத்தை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
காயத்ரி மணாளன்
பெண்டாட்டியை வைத்து சூதாடி வெல்வதற்கு பொய் சூதுவாது செய்யும் இந்தக் கதைகள் நல்ல கதைகளா?
நீக்குதிருதராஷ்டிரனின் இராச்சியத்தை பாண்டுவும் விதுரனும் சேர்ந்து அபகரித்தனர். முடிசூடா பாண்டுவின் புத்திரர் துரியோதனனை கொன்றனர். நல்ல நீதி.
SIr I hope U are fine. Usually I share the story of Mahabharata to my Journalism students
பதிலளிநீக்குபல கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கியதுதான் மகாபாரதத்தின் சிறப்பம்சம்
பதிலளிநீக்கு