ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நான் படித்துக் கிழித்தவை



தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளீர்கள் என்று சத்தியமாக நம்புகிறேன்....:)

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் நான் SSLC முடித்துள்ளேன் என்பதை சத்தியமாக நம்புகிறார்களாம். அப்படி என்றால் நான் மற்ற படிப்புகளை முடித்தது பற்றி இப்படி சத்தியம் செய்ய முடியாது என்று அர்த்தம். அவர்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது ஒரு பதிவரின் கடமையல்லவா?

நான் SSLC முடித்தவுடன் இன்டர்மீடியட் படித்தேன். இரண்டு வருடம். கோவை அரசு கலைக்கல்லூரியில் 1951-53 ம் வருடங்கள். திரு.நமச்சிவாயம் அவர்கள் பிரின்சிபல். நான் பதிப்பதற்கு வெகு காலம் முன்பு இந்தப் படிப்பு முடித்தவர்களை Fellow of Arts (FA) என்று அழைப்பார்களாம். இங்கு சேர்வதற்கு கம்யூனிடி சர்ட்டிபிகேட் வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். அதற்காக வாங்கின சர்ட்டிபிகேட்.


என்னுடைய இன்டர்மீடியட் பாஸ் சர்டிபிகேட்.


அடுத்து கோவை விவசாயக் கல்லூரியில் மூன்று வருடம் (1953-56) படித்து B.Sc.(Ag.) பட்டம் மெட்ராஸ் சர்வ கலாசாலையில் வாங்கினேன். 


இந்தப் பட்டம் பிரபல துணைவேந்தர் டாக்டர் ஏ.லக்ஷ்மணசாமி முதலியார் கையெழுத்துப் போட்டதாக்கும்.

அடுத்து வேலையில் சேர்ந்து மூன்று வருடம் சர்வீஸ் போட்டபின் M.Sc.(Ag.)  பட்டம் 1961ல் மண்வளத்துறையில் வாங்கினேன். இதுவும் மெட்ராஸ் யூனிவர்சிடி பட்டம்தான். 


பிறகு வெகு நாள் கழித்து வேலையில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகள் செய்து தீசிஸ் எழுதி அமெரிக்காவிற்கு மூன்று எக்சாமினர்களுக்கு அனுப்பி, அவர்கள் ஒப்புதல் கொடுத்து Ph.D. பட்டம் 1976 ல் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் வாங்கினேன். டாக்டர் ஜி. ரங்கசாமி அவர்கள் துணைவேந்தர்.


பிறகு வேலையில் இருக்கும்போது மூன்று உள்நாட்டுப் பயிற்சிகளுக்கும் ஒரு வெளிநாட்டுப் பயிற்சிக்கும் சென்றிருக்கிறேன்.

முதல் பயிற்சி 
Soil Salinity Research Institute, Karnal, Hariyana State.

களர் மண்ணின் தன்மைகளைப் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


இரண்டாவது பயிற்சி.
கோவிந்த் வல்லப் பந்த் விவசாயப் பல்கலைக்கழகத்தில் மண்ணின் பௌதிகக் குணங்கள் பற்றி ஒரு மாதம் பயிற்சி.


மூன்றாவது பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் கதிர் வீச்சுகளின் காப்பு முறைகளைப் பற்றி பதினைந்து நாள் பயிற்சி.



பிலிப்பைன்சில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒன்றரை மாதம் நெல் பாசனம் பற்றிப் பயிற்சி.


அங்கேயே நடந்த இன்னொரு பயிற்சி.


இந்த சர்ட்டிபிகேட்டில் பிரபல சர்வதேச வேளாண் விஞ்ஞானி டாக்டர் M.S. சுவாமிநாதன் அவர்கள் கையெழுத்தைப் பாருங்கள்.

அதே ஆராய்ச்சி நிலையத்திற்கு மூன்று வருடம் கழித்து ஒரு சர்வதேச கருத்தரங்குல் கலந்து கொண்டபோது எடுத்த போட்டோ. உட்கார்ந்திருக்கும் வரிசையில் வலது கோடியில் இருப்பதுதான் அடியேன்.




தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள் என்று நன்னூலில் குறிப்பிட்ட ஒரு இடம் - தன்னைப் பற்றி அறியாதவர்களிடத்தில் தன் பெருமைகளைச் சொல்லிக்கொள்வது குற்றமல்ல. அந்த இலக்கணப்படி நான் செய்திருக்கிறேன். 

19 கருத்துகள்:

  1. முந்தைய பதிவையும் படித்தேன். ஆதாரங்களை அடுக்கி விட்டீர்கள். தங்கள் ஒரு அதிரடி பதிவர் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

  3. நீங்கள் சொன்னது தற்புகழ்ச்சி அல்ல. தற்பெருமையும் அல்ல. தங்களைப்பற்றியும் தங்களின் கல்வித்தகுதி பற்றியும் அறியாதவர்களுக்கு உங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறீர்கள். அவ்வளவே! எல்லா படிப்பும் கடினமானதுதான். ஆனால் பலருக்கு வேளாண் அறிவியல் படிக்கும் மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் எனத் தெரியாததால் அந்த படிப்பை வெகு சுலபமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மண்வளத்துறையில் முது நிலை பட்டமும், மேலும் அதில் முனைவர் பட்டம் பெறுவதும் ஒன்றும் எளிதான செயல் அல்ல. எனவே இதை சொல்ல நீங்கள் நன்னூலையெல்லாம் மேற்கோள் காட்டவேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  4. ஐயோ!
    சிங்கம் ஒன்று புறப்பட்டது என்ற ரீதியில் நமது ஐயா கந்தசாமி தான் படித்த படிப்பையும் பட்டங்களையும் பட்டியல் இட்டு பதிவு இட்டிருக்கிறார். இந்த வயசுக்கு மேல் வாசகர்களாகிய நாம் என்ன வேலையா கொடுக்கமுடியும். எதோ நம்மால் ஆனது தமிழ்மணம் ரேங்க் கொடுப்பது தான்.

    எப்படியோ கடவுள் புண்ணியத்திலும் நம்முடைய ஆதரவிலும் அவர் தமிழ்மணம் ரேங்க் 1 என்ற பட்டத்தையும் பெறுவாராக.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. அனைத்துக்கும் எமது வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. தாம் தற்புகழ்தல் தகும் புலவோர்க்கே...

    வியக்கிறேன் அய்யா!

    த ம 6

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான அத்தாட்சிகள். தங்களின் இத்தகைய பொறுமை என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

    அது சரி, ஒரே ஒரு சந்தேகம்:

    //உட்கார்ந்திருக்கும் வரிசையில் வலது கோடியில் இருப்பதுதான் அடியேன்.//

    தங்கள் அருகே அமர்ந்திருப்பவர் யாரோ ? அவர் பெயர் என்னவோ ? ஏதோ ஒரு ஆர்வம் மட்டுமல்ல, தங்களின் ஞாபகசக்தியை சோதிக்க விருப்பமும்கூட :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவிற்கு ஞாபக சக்தி எனக்கில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

      நீக்கு
  8. வாழ்த்தி வணங்குகிறோம்!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. எந்த வேலைக்கு அனுமதி வேண்டும் இந்த RESUME இல்லை சுயதம்பட்டமா.?

    பதிலளிநீக்கு
  10. தங்களது இந்தப் பதிவைப்
    பாராட்டும் விதமாக
    தமிழ்மணத்தில்
    எனது வாக்கினை
    8-ஆவதாக
    அளித்து,
    தங்களைப் பாராட்டி
    மகிழ்வதில்
    பெருமை கொள்கிறேன் என்பதை
    அன்புடன் தெரிவித்து அமர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. காட்டை வித்துக் கள்ளு குடிச்சாலும், ......!!!

    ஆமா, மத்த படமெல்லாம் சரி, முதல் படம் நீங்க படிச்சு வாங்கின பட்டமா சார்?

    பதிலளிநீக்கு
  12. அப்படியே தாங்கள் வாங்கிய மார்க்குகளையும் போட்டொ புடிச்சு போடுங்க!

    பதிலளிநீக்கு
  13. ஐயா நான் ஒத்துக்கிறேன் ஐயா. ஒரே ஊர்க்காரங்களாதனால இந்த வம்புக்கு நான் தான் கிடைத்தேனா ஐயா.....:))))

    பதிலளிநீக்கு
  14. ஐயா! ஹப்பா வியப்புதான்....சவால்களாக வந்து குவிகின்றதே ஐயா! இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கலாம் போல?!!! மிகவும் ரசிக்கின்றோம் தங்கள் பதிவுகளை! வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  15. manavai james உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"நான் படித்துக் கிழித்தவை":

    அன்புள்ள அய்யா,

    தாங்கள் படித்தை M.Sc. (Agri)., P.hd. பல உள்நாட்டு வெளிநாட்டுப் பயிற்சிகள்...புகைப்படங்கள்... பார்க்கின்ற பொழுது வியப்பாக இருக்கிறது. தங்களை எண்ணுகின்ற பொழுது பெருமையாக இருக்கிறது.

    நன்றி.
    த.ம.12.

    பதிலளிநீக்கு