செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆஹா, மோடம் வந்துடுச்சு.

                                    Image result for பிராட்பேண்ட்
நான் பிராட் பேண்ட் கனெக்ஷன் வாங்கி ஆறு வருடத்திற்கு மேல் ஆகிறது. அப்போது ஒரு மோடம் சொந்தக் காசு கொடுத்து வாங்கியிருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்னால் அந்த மோடம் பொசுக்கென்று உயரை விட்டு விட்டது. பிஎஸ்என்எல் காரரிடம் புகார் சொன்னேன். "மோடம் உங்க கிட்டதானே வாங்கினேன். இப்படி உயிரை விட்டு விட்டதே" என்றேன்.

அவர் "தான்" வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அடுத்த நாள் வந்தார். மோடம் வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்டார். நான் ஆறு வருடம் ஆயிற்று என்றேன். அவர் ஒரு மோடம் சாதாரணமாக ஐந்து வருடம்தான் வேலை செய்யும். உங்களுக்கு ஆறு வருடம் உழைத்திருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் என்றார். மோடத்தை மேலும் கீழும் திருப்பியும் பார்த்தார். இது உயிரை விட்டு விட்டது உண்மைதான் என்றார்.

அடுத்தது என்ன பண்ணுவது என்றேன். இதை அடக்கம் பண்ணி ஈமக்கடன்களை முடித்து விட்டு, நான் சொல்லும் போன் நெம்பருக்குப் போன் செய்யுங்கள். அவர்கள் வந்து வேறு மோடம் வைத்து விடுவார்கள், என்றார். முந்தியெல்லாம் பிஎஸ்என்எல் காரர்களே இந்த மோடம் சப்ளை பண்ணுவார்கள். இப்போது சிஸ்டத்தை மாற்றி விட்டார்கள். இதற்கென்று ஒரு தனி ஏஜென்ட் இருக்கிறார். அவரிடம் சொன்னால் உடனே புது மோடம் கொண்டு வந்து மாட்டி செட்டிங்க்ஸ் எல்லாம் செய்து விட்டுப் போவார்.

அப்படியாக அவருக்குப் போன் பண்ணி புது மோடம் வாங்கி கனெக்ஷன் கொடுத்தேன். இப்போது ஒரு புது ராணி (கேலக்சி டேஃப்) என் அந்தப்புரத்திற்கு வந்தாள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ராணிக்கு இந்தப் பழைய ராணிதான் இன்டர்நெட்டை வைஃபி மூலம் தானம் பண்ணவேண்டும். இரண்டு பேருக்குமிடையில் ஏதோ சக்களத்திச் சண்டை மூண்டு விட்டது. டேஃபில் வைஃபி வேலை செய்யவில்லை. நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உள்ளே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.

மோடத்தில் உள்ள மூன்றாவது லைட் பச்சையாக எரியவேண்டியது சிகப்பாக எரிந்தது. ஆஹா, வந்தது வினை என்று முடிவு செய்தேன். இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆண்டவனைச் சரண்டைவது தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து பிஎஸ்என்எல் காரருக்குப் போன் செய்தேன். அவர் வழக்கமாக வருகிறவர்தான். நல்ல மனுஷன்தான். ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட பிடுங்கல்கள்.

ஒரு வழியாக இன்று காலை வந்து என்னென்னமோ செட்டிங்க்ஸ்களை மாற்றியமைத்தார். இன்டர்நெட் வர ஆரம்பித்தது. இனி ஒன்றும் பிரச்சினை இல்லை சார், அந்த மோடம் சப்ளை செய்தவர் சரியாக செட்டிங்க்ஸ்களை செட் பண்ணவில்லை. நான் எல்லாவற்றையும் சரியாக அமைத்திருக்கிறேன். இனி மேல் எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.

இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.

22 கருத்துகள்:

  1. மோடம் மீண்டும் வந்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    இந்த புதிய ராணியுடன் இனி ஒரு ஐந்தாறு வருடம் குடித்தனம் நடத்தலாம்தானே. இல்லை புதிதாக ஏதேனும் ஒன்று வரப்போக அதை அடுத்த ராணியாக்க இந்த பழைய ராணிகளுக்கு க்போம் வந்து விடப்போகிறது. ஜாக்கிரதை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  2. ஆஹா வந்துருச்சி. ஆசையாய் ஓடி வந்தேன்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. //நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.//

    வேறு வழியே இல்லை. நம்பித்தான் ஆக வேண்டும். கடவுளை கும்பிட்டு விட்டு ஆரம்பியுங்கள். நல்லபடியாகப்போகும்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  4. //நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உற்றே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.//

    பொதுவாக இந்த மாதிரி தொந்திரவு வந்தால் நமக்கு தெரிந்த டெக்னிக்கை எல்லாம் உபயோகிக்காமல் நேராக பி எஸ் என் எல் காரனை கூப்பிட்டுவிட்டால் பிரச்சனை இல்லை. தெரிந்தவராகப்போனதால் திட்டு இல்லை. புது ஆளாக இருந்தால் யார் சார் உங்களை நோண்ட சொன்னது என்று ஒரு முக்கல் முனகலுடன் வேலையை இன்னும் ஒரு நாள் சேர்த்து இழுத்தடிப்பார்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நோண்டினதை எல்லாம் அவரிடம் சொல்வேனா? நல்ல பிள்ளையாட்டம் "சார், மோடம் மக்கர் பண்ணுதுன்னு" மட்டும்தான் சொன்னேன். எவ்வளவு சர்வீஸ் ஆச்சு, இது கூடத் தெரியாமல் இருப்பேனா?

      நீக்கு
  5. //இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.//

    இவ்வளவு சீக்கிரம் சரி செய்ததற்கு பி எஸ் என் எல் காரர்களுக்கு நன்றி சொல்லுங்கள். வருவது வரை நை நை என்று பிடுங்கி எடுத்து விடுவோம். சரி செய்த பிறகு கண்டு கொள்ளவே மாட்டோம். என் வீட்டில் வேலை முடித்தவுடன் ஒரு காப்பியோ கூட ஒரு பிஸ்கட்டோ கொடுத்து சாப்பிட சொல்லி அனுப்புவோம். அவருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  6. வீட்டு மேடம் ஊருக்கு போனா, "ஆஹா மேடம் ஊருக்கு போயாச்சு"
    ஆனா மோடம் வந்தா மட்டும் "ஆஹா மோடம் வந்துடுச்சு"
    ஒன்னு போனா சந்தோசம் இன்னொன்னு வந்த சந்தோசம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. பொசுக்கென்று உயிரை விட்டது,
    அடக்கம் செய்து விடுங்கள்.
    ஈமக்கடன்கள் முடித்தாகிவிட்டது,
    சக்களத்தி சண்டை,
    புது ராணி.
    அந்தப்புரம்,
    ஆண்டவனிடம் புகார்
    - நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன். நல்ல வார்த்தை பிரயோகங்கள்.
    பின்னே சும்மாவா சொன்னார்கள் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று. நீங்கள் சிரித்தது போதாதென்று எங்களையும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  8. புதுப்பொண்டாட்டி போல புதிய மோடம் வந்ததற்கும், அவள் ஆரம்பத்தில் ஒத்துழைக்காமல் சற்றே படுத்தியதற்கும், பிறகு தங்களுடன் அவள் இணக்கமாகி இப்போது [Smooth Going க்கும்] சிகப்பு விளக்கு, பச்சை விளக்கு ஆகி Green Signal கிடைத்து தாங்கள் ஜோராக பேரெழுச்சியுடன் தினமும் ஒவ்வொரு வேளையும் புகுந்து விளையாடப்போவதற்கும், நிறைய குழந்தைகளாக* பெற்றுத்தள்ளப்போவதற்கும் வாழ்த்துகள் ஐயா.

    உங்களை நினைத்துப் பார்க்க எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. இனி உங்கள் பாடு ஜாலிலோ ஜிம்கானா தான் ! :)

    [*பதிவுகளாக]

    பதிலளிநீக்கு
  9. ஐயா இந்த மோடம் ராணி உங்களுக்காவது 6 வருடம் உங்களுடனிருந்திருக்கின்றாள். எங்க்ள் வீட்டில் அவள் 3 வருடத்திலேயே தகறாரு. எங்கவூட்டுக்காரரு தனக்கு அந்த ராணிய எப்படி வசப்படுத்தத் தெரியும்ற கித்தாப்புல கை வைச்சு உள்ளதும் போச்சு. பிஎஸ் என் எல் காரங்க உங்க வீட்டு மோடத்துலதான் பிரச்சினை இங்க எடுத்துட்டுவாங்கனு சொல்ல ராணிய அவங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் எவ்வளவோ செக் அப் பண்ணி கடைசில உசுரு போயு ரொம்ப நேரம் ஆயுடிச்சு நு சொல்லி இப்படி 3 மோடம் அடுத்தடுத்து எங்க வூட்டுக்காரரு கை வைச்சு வீட்டுல கிடக்குது . இப்ப உள்ளது ஏதோ ஓடிக்கிட்டு இருக்குது ...ம்ம் உங்கள் பதிவுகள் இனி அமர்க்களமாக வலம் வரும்!

    எங்க ஊர்ல பி எஸ் என் எல் ரொம்ப படுத்தல்.....சென்னைல...எங்க ஏரியாவுல....

    கீதா....என் கதை யே இப்படினா நண்பர் துளசி கேரளாவுல குக் கிராமம் மலை ஏரியா அங்க இன்னும் நிலைமை மோசம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இன்டர்நெட் பிரச்சினைகளே ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதம். சில ஊர்களில் சில ஆபரேட்டர்களின் சர்வீஸ் நன்றாக இருக்கும். நான் (கோவை) முதலிலிருந்தே பிஎஸ்என்எல் லில் இருப்பதால் அதன் மீது ஒரு பூனைக்குட்டி விசுவாசம். தவிர பிஎஸ்என்எல் எக்சேன்ஜ் என் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே இருப்பதால் எனக்கு பிராட் பேண்ட் கனெக்சன் ஓரளவிற்கு மோசமில்லாமல் கிடைக்கிறது. எக்சேன்ச்சை விட்டு தூரத்தில் இருப்பவர்களுக்கு பிஎஸ்என்எல் ன் சேவை அவ்வளவு திருப்தியாக இல்லை.

      நீக்கு
  10. வாழ்த்துகள் ஐயா தொடரட்டும் டும் டும்

    பதிலளிநீக்கு
  11. "மோடம் வந்தாச்சு...நல்ல நேரம் வந்தாச்சு.." என்று பாட வேண்டியதுதான்!

    :)))))))

    பதிலளிநீக்கு
  12. புதிய ராணி வருகை அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து இனி குதூகலமான பதிவுகளை எதிர்பார்க்கலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  13. பதிவுகள் தொடரட்டும்..... அதான் மோடம் எனும் மேடம் வந்தாச்சே....

    பதிலளிநீக்கு