இன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).
முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த "பிபிஎம்" என்றால் என்ன என்பதாகும்.
ppm என்பது Parts per Million என்பதின் சுருக்கம். அதாவது பத்து லட்சம் கிராம் பொருளில் ஒரு கிராம் வேறு ஒரு பொருள் இருப்பதை இந்த அளவினால் குறிப்பிடுவார்கள். இது மிக மிகக் குறைந்த அளவில் அந்தப் பொருள் இருக்கிறது என்று புரிவதற்கான அளவு.
அது எப்படி இவ்வளவு குறைவாக இருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அப்படித் தோன்றவில்லை என்றால் இப்போது தோன்ற வைத்துக்கொள்ளுங்கள்.
இதற்காகத்தான் பல ஊர்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து
"National Analytical Laboratory" என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி, அவைகளை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியை விட்டுத் திறக்க வைத்து, பல விஞ்ஞானிகள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பல பல நூதன பகுப்பறியும் கருவிகள் இங்கே இருக்கும்.
இந்தக் கருவிகளில்தான் இந்த மாதிரியான நுண்ணிய அளவில் இருக்கும் பொருளை பகுத்தறிவார்கள். இந்த சோதனைச்சாலைகளுக்கு ஒரு டைரக்டர், பல உதவி டைரக்டர்கள், கணக்கில்லாத ஆரய்ச்சியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கும். இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கும் மேக்கி நூடுல்ஸ் மாதிரி சமாச்சாரங்களுக்கான ஆணி வேர் இத்தகைய ஆராய்ச்சி சாலைகளில்தான் உதயமாகும்.
இந்த சோதனைச் சாலைகள் பற்றிய இத்தகைய செய்திகள் எல்லாம் சும்மா உங்கள் மாதிரி பொது மக்களை மயக்குவதற்காக சொல்லப்படும் சமாச்சாரங்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களைப் போன்ற இந்த மாதிரி சோதனைச்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் நாங்கள் உண்மையை வெளியே சொல்ல மாட்டோம் ஏனென்றால் எவனாவது தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வானா?
இப்போது என்ன நடந்திருக்கும் என்றால் இந்த மேக்கிக்காரன் யாரையோ உசுப்பி விட்டிருக்கவேண்டும். என்ன உசுப்பல்? வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும்.
அதில் சம்பந்தப்பட்டவன் நாயைச் "சூ" காட்டுகிற மாதிரி தன் கீழ் இருக்கும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு ஜாடை காண்பித்திருப்பான். நம் ஆட்களுக்குச் சொல்ல வேண்டுமா? "எள் என்றால் எண்ணையாக" நிற்பவர்களல்லவா? உடனே அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு இந்த சோதனைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யச்சொல்லி இருப்பார்கள்.
அந்தச் சோதனைச்சாலையில் இருக்கும் டைரக்டரும் மற்றவர்களும் இந்த "சோதனைச்சாலைக்கு வந்த சோதனையைப் பார்" என்று வருத்தப்பட்டு, சோதனை இயந்திரங்களை தூசி தட்டி, துடைத்து இந்த சேம்பிளை பகுப்பாய்வு செய்து மேல் அதிகாரிகள் விரும்பும் முடிவை விரும்பியபடி தயார் செய்து அறிக்கை கொடுத்து விடுவார்கள்.
இந்த முடிவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த விவரங்களைப் பாருங்கள். காரீயம் 2.5 பிபிஎம் க்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐயா, துல்லியமாக சோதனை செய்திருந்தால் எவ்வளவு காரீயம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு என்று சொல்லலாம் இல்லையா? ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது. அவ்வளவுதான். மேட்டர் முடிந்து விட்டது. அப்பறம் நடப்பதெல்லாம் சட்டக்காவலர்கள் செய்ய வேண்டிய வேலை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
இதேபோல்தான் எம்எஸ்ஜி விவகாரமும். சட்டப்படி இருக்கவேண்டியதை விட மிக அதிகமாக இருக்கிறது.அவ்வளவுதான். எவ்வளவு என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது எங்கள் வேலையல்ல. உண்மையான காரணத்தை இதற்குள் நீங்கள் யூகித்திராவிடில் நான் வருந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஓடையில் தண்ணீர் குடித்த கதை தெரியுமல்லவா? அதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.
சட்டக்காவலர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கி விற்ற கடைக்கார ர்கள் எல்லாம் மேக்கி பேக்கட்களை கடைக்குப் பின்னால் கொண்டு போய் விற்கிறார்கள். ஆபீசர்கள் வந்து கேட்டால் "மேக்கியா, அப்படீன்னா என்ன சார் ? அப்படீன்னு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில் New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.
பின் சேர்க்கை. உங்கள் கவனத்திற்காக மட்டும்.
MSG எனப்படும் குளுடாமிக் ஆசிட் பற்றி சில விபரங்கள்.
தினமும் ஒருவரது உணவில் 40 முதல் 50 கிராம் வரையிலான புரதமானது உள்ளெடுக்கப்படவேண்டும். புரதங்கள் பல்வேறு அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 9
அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. இவை தவிர்ந்த ஏனையவை உடலால் தொகுக்கப்படும் பால் இறைச்சி முட்டை ஆகிய விலங்குப் புரதங்கள் மிகவும் சிறந்த புரதங்களை கொண்டவை. இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படும். குளுடாமிக் ஏசிட் என்பதுவும் இத்தகைய அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று.
குளுடாமிக் ஏசிட்டின் இராசயன அமைப்பு.
C5H9NO4
அஜினோ மோட்டோ அல்லது மோனோ சோடியம் குளுடாமேட்/எம்எஸ்ஜி
- இராசயன அமைப்பு
C5H8NO4Na
இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - எம்எஸ்ஜி யில் ஒரு ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக ஒரு சோடியம் அணு சேர்க்கப்பட்டிருக்கிறது
மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
MSG—or monosodium glutamate—is a flavor enhancer used in savory foods, especially Asian foods. It contains sodium, but only a third of the amount that you’d get from the same amount of salt.
MSG also includes glutamic acid (aka glutamate), an amino acid that’s found naturally in foods like tomatoes, mushrooms and soybeans and is the source of our fifth taste—umami.
In fact, we eat about 13 grams of natural glutamate a day on average, compared to only around half a gram from MSG.
Some people say they have an MSG allergy—or that MSG gives them headaches, worsens their asthma, causes chest pain or palpitations, or causes mild mood changes or other symptoms, all of which are collectively referred to as Chinese Restaurant Syndrome (because MSG is commonly found in Asian-style meals).
Contrary to popular belief, decades of research fails to support the link between MSG and these reported side effects.
Modest amount of MSG found in the typical Western diet is not linked to symptoms of Chinese Restaurant Syndrome, according to scientific literature from the 1970s to today.
No adverse symptoms were observed when people consumed MSG as part of a meal—even at high doses (up to 147 grams/day), according to a review of studies, published in 2000 in the Journal of Nutrition.
There’s one caveat though: eating MSG may lead to classic symptoms of Chinese Restaurant Syndrome when it is consumed solo and on an empty stomach.
In a 2013 study, researchers gave healthy adults about 10 grams of MSG on average (a fairly large dose) without any food.
Almost all of them experienced headaches, as well as short-term increases in blood pressure and heart rate.
But because MSG is generally used in small amounts as a flavoring (like salt), the likelihood that you’d eat it by itself is slim.
MSG might just be the most love-to-be-hated additive of the day, but the science fails to supports its “bad guy” reputation.
News:
Delhi health minister Satyendar Jain said, "Last week, we lifted 13 samples of Maggi for testing following media reports of these being unsafe for consumption. We found the masala samples, tastemakers of at least 10 such packets, had lead content beyond the prescribed limit of 2.50pm." Jain also said five samples of masala were found containing monosodium glutamate (MSG) without proper label declaration.