புதன், 27 ஜனவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-1

(முதல் நாள்)
முருகன் பேரில் எனக்கு ஒரு விசுவாசம் – பக்தி. ஆகவே என்னுடைய சம்பந்தி திருச்செந்தூர் போய்விட்டு அப்படியே கன்யாகுமரியும் போய்விட்டு வரலாமே என்றவுடன் சரியென்று சொல்லிவிட்டேன்.
ஒரு நல்ல நாளில் ஒரு வாடகைக்கார் பேசி 

நாங்கள் ஐந்து பேர்கள் புறப்பட்டோம். முதலில் மதுரை சென்று ஒரு நாள் தங்கினோம். அன்று மாலை அழகர் கோவில் சென்று கல்லழகரை தரிசித்து விட்டு
பின்பு பழமுதிர்சோலை சென்றோம். முன்பு பழமுதிர்சோலைக்கு நடந்துதான் போகவேண்டும். இப்போது அழகான தார்ச்சாலை போடப்பட்டு இருக்கிறது. நாங்கள் சென்றபோது சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து திரை விலக்கியபின் முருகனைத்தரிசித்தோம்.
அறைக்கு திரும்புவதற்குள் மீனாட்சியையும் தரிசிக்கலாம் என்ற திட்டம் இருட்டிவிட்டதால் கைவிடப்பட்டது.
தொடரும்...

2 கருத்துகள்: