புதன், 19 ஜனவரி, 2011

யானை, யானை

சமீபத்தில் குருவாயூர் போயிருந்தேன். கூட்டமோ கூட்டம்.  ஐயப்ப சாமிகள் ஆயிரக்கணக்கில் க்யூவில் நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை, க்யூவில் நடுவில் என்னையும் குடும்பத்தையும்  விட்டு விட்டார்கள். பதினைந்து நிமிடத்தில் கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வந்தோம்.

கிருஷ்ணனைப் போட்டோ எடுக்க விடவில்லை. ஆபத்பாந்தவன், நம் கணேசன் அந்தக் கவலையைப் போக்கிவிட்டார். தேவஸ்தான யானைத் தாவில் சுமார் ஐம்பது யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

அனைத்து யானைகளையும் பார்க்க இங்கே செல்லவும்.
அறிவுப்பு: முதலில் ஆல்பத்தை Private  என்று தெரியாமல் போட்டுவிட்டேன். இப்போது அதை Public என்று மாற்றிவிட்டேன். இப்போது சரியாகத்தெரியும்.

17 கருத்துகள்:

 1. //ops... there's nothing to see here. Either you do not have access to these photos, or they don't exist at this web address. Please contact the owner directly to gain access///

  ippadi oru error varuthu

  பதிலளிநீக்கு
 2. நம்மாளு சமாச்சாரமுன்னு ஓடோடி வந்தேன்.

  திருச்சூரில் வசிக்கும் தோழி வீட்டுக்கு கோவில் குட்டியானை வந்தால் கதவைத் தட்டிட்டுக் காத்திருக்கும். நொறுக்குத் தீனியா ஊறவச்ச அரிசியும் வெல்லமும் அங்கே கிடைக்குதுல்லே:-))))

  பதிலளிநீக்கு
 3. குருவாயூரப்பன் தரிசனம் நன்றாக கிடைத்தது தெரிந்து மகிழ்ச்சி. நீங்கள் கொடுத்த பிகாசா லின்க் வேலை செய்யவில்லை. சரி பாருங்கள்.

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்
  http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 4. ஆனை... ஆனை... குருவாயூர் ஆனை...
  படம் அழகாயிருக்கு... யானையும் தான்.

  பதிலளிநீக்கு
 5. எல் கே said...

  //ops... there's nothing to see here. Either you do not have access to these photos, or they don't exist at this web address. Please contact the owner directly to gain access///

  ippadi oru error varuthu

  மன்னிக்கவும். இப்போது சரி செய்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. Blogger வெங்கட் நாகராஜ் said...

  குருவாயூரப்பன் தரிசனம் நன்றாக கிடைத்தது தெரிந்து மகிழ்ச்சி. நீங்கள் கொடுத்த பிகாசா லின்க் வேலை செய்யவில்லை. சரி பாருங்கள்.

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்

  இப்போது சரி செய்து விட்டேன். சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. படங்கள் பார்த்தேன். நன்றாக வந்து இருக்கிறது ஐயா. பகிர்வுக்கு நன்றி.

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்

  பதிலளிநீக்கு
 8. இப்பொழுது சரியாக இருக்கிறது.:)

  சில யானைகள் பயங்கரமாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 9. தொப்பி தொப்பி பதிவில் உங்களது பின்னூட்டத்தை கண்டேன்...

  @ DrPKandaswamyPhD
  // இந்தப்பதிவையும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள்.
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/1.html //

  எனது இடுகையோன்றினை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்... எனது இடுகையில் தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை எனது இடுகையிலேயே சுட்டிக் காட்டியிருக்கலாமே... நான் எப்போதும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 10. தம்பி பிரபாகரன் அவர்களுக்கு,
  உங்கள் பதிவில் ஒரு குறையும் இல்லை. பதிவுலகத்தில் சில தலைப்புகள்தான் இன்றைய தேதியில் பிரபலமாக இருக்கின்றன. அதில் சினிமாவும் ஒன்று. திரு. தொப்பி தொப்பி அவர்கள் இந்த சினிமா சமாசாரங்களை பதிவர்கள் விடுடவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். அவருக்கு சினிமா விமரிசனங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகத்தான் உங்கள் பதிவின் சுட்டி கொடுத்திருந்தேன். உங்கள் பதிவைக் குறை கூறுவது என் நோக்கமல்ல. அவ்வாறு ஏதாவது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவதுதானே முறை. நான் செய்ததில் ஏதாவது தவறு என்று நினைத்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
  அன்புள்ள,
  ப.கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 11. Gopi Ramamoorthy said...

  //பகிர்வுக்கு நன்றிகள்//

  பின்னூட்டத்திற்கு நன்றி.

  இரண்டு நாட்கள் குருவாயூர் சென்று வந்தேன். புதிதாக வாங்கிய கேமராவை எடுத்துச் சென்றிருந்தேன். கோவிலுக்குள் படம் எடுக்க விடவில்லை. என்ன செய்வது என்றுதான் இந்த யானைகளை போட்டோ எடுத்தேன்.

  எந்த வயதிலும் யானை ஒரு அதிசயப் பிராணிதான். அவ்வளவு பெரிய மிருகத்தை, அதைவிட பல மடங்கு சிறியவனான மனிதன் தன் கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு பெரிய அதிசயமே.

  இந்தத் தத்துவத்தை மறைமுகமாக உணர்த்த வேண்டுமென்பதே என் பதிவின் நோக்கம்.

  பதிலளிநீக்கு
 12. துளசி கோபால் said...

  //நம்மாளு சமாச்சாரமுன்னு ஓடோடி வந்தேன்.
  திருச்சூரில் வசிக்கும் தோழி வீட்டுக்கு கோவில் குட்டியானை வந்தால் கதவைத் தட்டிட்டுக் காத்திருக்கும். நொறுக்குத் தீனியா ஊறவச்ச அரிசியும் வெல்லமும் அங்கே கிடைக்குதுல்லே:-))))//

  வாங்க, இந்த மாதிரி பதிவுகளைப் பார்க்கவும் நேரம் கிடைக்குதுங்களா?

  யானை எப்பவும் எந்த வயதிலும் வேடிக்கை பார்க்க வைக்கும் ஒரு பிராணி. அவ்வளவு பலம் பொருந்திய மிருகத்தை ஆட்டி வைக்கும் மனிதன் உண்மையிலேயே கெட்டிக்காரன்தான்.

  பதிலளிநீக்கு
 13. ஐயா,
  மிகவும் அருமையான பகிர்வு.
  யானைகள் புகைப்படங்கள் மிக மிக அழகு.பிகாசா லின்கிற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 14. யானைகள் அருமை! யானை,கரடி, ரயில் போன்றவை வயதை மீறிய ஸ்வாரஸ்யங்கள்!!!

  பதிலளிநீக்கு
 15. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  //யானைகள் அருமை! யானை,கரடி, ரயில் போன்றவை வயதை மீறிய ஸ்வாரஸ்யங்கள்!!!//

  உண்மை. இந்த உணர்வை அனுபவிக்காதவர்கள் அபாக்கியசாலிகள்.

  பதிலளிநீக்கு