சனி, 5 பிப்ரவரி, 2011

வெற்றிச் சிந்தனைகள்


(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)

  1. தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.   
  2. துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
  3. புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
  4. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
  5. நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
  6. இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
  7. உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
  8. உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
  9. யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
  10. ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
  11. பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
  12. ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
  13. வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
  14. பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.

 

18 கருத்துகள்:

  1. தற்காலம் கிடைக்காத ஆனால் உணர வேண்டிய அறிவுரைகள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனைகள். அதிலும் கடைசி வரிகள்......

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே சிந்தனையைத் தூண்டுகிற பொன்மொழிகள்.

    பதிலளிநீக்கு
  4. ALL THE INFORMATIONS GIVEN ARE WORTHWHILE POINTS TO PONDER. THAT TOO WHEN TAKEN FROM A WEDDING INVITATION, THOSE HO PRINTED IT ARE TO BE COMPLIMENTED. THANK YOU SIR, FOR SHARING IT.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அனுபவக்குறிப்புக்கள்.
    ஆன்றோர்கள், சான்றோர்கள் நமக்காக
    அள்ளிக்கொடுத்தவை.
    ஏனெனில், நாமே அனுபவித்து
    உணர, நம் உடலுக்கோ உள்ளத்திற்கோ
    தாங்கும் சக்தி கிடையாது.
    எனவே, இந்த பிளாட்டின மொழிகளை
    பின்பற்றி, உயர்வடையலாம்.
    நன்றி, சார்!

    பதிலளிநீக்கு
  6. இதைப் பதிவாகப் போடலாமா, போட்டால் வரவேற்பார்களா என்ற தயக்கத்துடன்தான் இந்தப் பதிவைப் போட்டேன். நல்ல கருத்துகளுக்கு இன்னும் மக்களிடையில் வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கும்போது பெருமையடைகிறேன். கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. Very valuble truths collected by someone with deep understanding in life. That was a nice way to print a wedding card! thanks for sharing
    -Reena

    பதிலளிநீக்கு
  8. உலகில் பல தீயவை நடக்க காரணம் நல்லவர்களின் மெளனம்.நாங்க உங்க ரசிகர் ஆயிட்டோம்.இந்த பதிவை என்னோட blog இல் link ஆக கொடுத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  9. அருமையான தத்துவம்! எப்ப மனுஷனுக்கு தத்துவம் வரும்?அவனுக்கு எதாவது தீராத கஷ்டம் வரும் போது தான்! (சட்டி சுட்டதடா...கை விட்டதடா
    பாட்டை ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.
    அது வகையில் கல்யாண அழைப்பிதழிலேயே தத்துவம் படு சூப்பர் ஐடியா?
    ( மறுபடியும் இன்னொரு பாட்டு..ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் ..கேளு..கேளு தம்பி பாடல்)

    பதிலளிநீக்கு
  10. எங்க வீட்ல கேட்டாங்க..’என்னங்க நம்ம கல்யாணம் நேற்று நடந்தா மாதிரி இல்ல..
    அப்ப எனக்கு நாக்குல ஏளரை நாட்டு சனி உட்கார்ந்து இருந்ததை கவனிக்காம ரொம்ப சீரியஸா மூஞ்சை வைச்சுக் கிட்டு “ நேத்திக்கு அப்படி என்ன மோசமா நடந்தது”ன்னு நான் கேட்டுத் தொலைக்க காலை டிஃபன், மதியம் சாப்பாடு கட் ஒரு வாரம்!
    நல்ல வேளை ஆஃபீஸ் கேண்டீன்னு இருந்ததோ,
    பிழைத்தெனோ?
    எதுக்கு இதை சொல்றேன்னா, எங்க கல்யாணப் பத்திரிகையைப் பார்த்து தான் அவங்க இதை கேட்டாங்க..அது எனக்கு ஞாபகம் வந்துடுத்து..இப்ப!
    அதுலேர்ந்து நம்ம கிட்ட ஒரு பளக்கம். யார் நம்மள மதிச்சு பத்திரிகை கொடுத்தாலும், கட்டாயம் போகணும்னா, அட்ரஸ், தேதி எல்லாத்தியும் நோட் பண்ணிட்டு, கல்யாணப் பத்திரிகையை கிளிச்சுப் போட்டுவேன், கிளிச்சு!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வலைப்பூவிற்கு பொருத்தமான பின்னனியைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு