திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஒரு பிரபல பதிவரின் அன்றாட அலுவல்கள்
ஒரு பதிவு போட்டவுடன் செய்யவேண்டிய வேலைகள்.

 
1.   அந்தப் பதிவை எல்லா திரட்டிகளிலும் இணைப்பது.

2.   நண்பர்களுக்கெல்லாம் Facebook, Twitter, email மூலம் செய்தி அனுப்புவது.

3.   ஒரு மணிக்கு ஒரு தரம் டேஷ்போர்டை ஓப்பன் செய்து பின் கண்டவற்றை செக் செய்வது.

a.   பின்னூட்டங்கள்

b.   ஹிட் கவுன்டர்

c.   Followers


d.   பதிவான ஓட்டுக்கள்.

e.   அலெக்ஸா முதலான ரேட்டிங்குகள்.

4.   வந்த பின்னூட்டங்களுக்குப் பதில் போடுவது.


 
5.   பின்னூட்டம் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய் அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது.

6.   அந்தப் பதிவுகளில் முன்பே followers  ஆக சேராவிடில் இப்பொழுது சேருவது.

7.   புது பதிவுகளைப் பார்த்து பின்னூட்டங்கள் போடுவது.

8.   அவரவர்கள் பதிவுகளுக்கு தினமும் ஓட்டுப்போடுவது.

9.   பல ID க்கள் ஏற்படுத்திக்கொண்டு அவைகளிலிருந்து பின்னூட்டம்
  போடுவது.

10. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவி பதிவர்களைக் கோர்த்து விடுவது.

11. தொழில் நுட்பங்களை அவ்வப்போது புதிப்பித்துக்கொள்வது.

12. பதிவு போட்டு ஒரு மணி நேரத்தில் 108 பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி?” என்று புத்தகம் எழுதுவது.

13. புதிய பதிவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவது.

14. சக பதிவர்களைச் சந்திக்க தோதான ஓட்டல் பாருக்குப் போவது

இதில் ஏதாவது மூன்றை நீங்கள் செய்து கொண்டிருந்தால் நீங்கள் பிரபல பதிவர் ஆகி விட்டீர்கள் என்று அறியவும்.  

நானா, ஹி ஹி ஹி ஹி, என் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவதை நான் விரும்புவதில்லை (ஓட்டல் பாரைத்தவிர்த்து).27 கருத்துகள்:

  1. அப்புறம் குளிக்கிறது, சாப்பிடறது, தூங்கறது எல்லாம் உண்டா?

    பதிலளிநீக்கு
  2. நத்தத்தோட்டமவீரன் said...

    //அப்புறம் குளிக்கிறது, சாப்பிடறது, தூங்கறது எல்லாம் உண்டா?//

    சே, அதெல்லாம் சாதாரண மனிதர்கள் செய்யும் காரியங்கள். பிரபல பதிவர்கள் அதெல்லாம் செய்ய மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா :-)))))))))

    அட ராமா!!!!!

    இதுலே ஒன்னே ஒன்னு மட்டும் செஞ்சா பிரபலம் ஆகமுடியாதுங்களா:(

    பதிலளிநீக்கு
  4. துளசி கோபால் said...

    //ஹாஹா :-)))))))))

    அட ராமா!!!!!

    இதுலே ஒன்னே ஒன்னு மட்டும் செஞ்சா பிரபலம் ஆகமுடியாதுங்களா:(//

    உங்களுக்காக வேணும்னா கொஞ்சம் விதிகளைத் தளர்த்திக்கலாங்க.

    பதிலளிநீக்கு
  5. Rathi said...

    //அனுபவப் பகிர்வு என்பது இதானா! :)//

    எப்படீங்க கண்டு பிடிச்சீங்க? ரொம்பவே புத்திக் கூர்மைங்க உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  6. அடங்கொய்யால இவ்ளோ பிரச்சன இருக்கா நமக்கு ஆகாது யப்பா!

    பதிலளிநீக்கு
  7. /நத்தத்தோட்டமவீரன் said...
    அப்புறம் குளிக்கிறது, சாப்பிடறது, தூங்கறது எல்லாம் உண்டா?//

    ஆம்பளைங்களுக்கு அதுமட்டும்தான். எங்களுக்கோ, இதுகூட, சமைக்கிறது, வீடு/குழந்தைகள் பராமரிப்பு, படிப்பு... எவ்ளோ கஷ்டம் தெரியுமா பெண்கள் பதிவர்களாயிருப்பது? :-)))) :-((((((

    பதிலளிநீக்கு
  8. ஒரு விஷயம் விட்டுப் போச்சு. அப்பப்போ இந்த மாதிரி பட்டியல் போடுவதும் பிரபல பதிவர்களின் வேலைதான். நீங்க பிரபலம் ஆயிட்டீங்க:-)

    பதிலளிநீக்கு
  9. நல்ல தகவல்கள். நல்ல ஆராய்வு !!!

    இவற்றை அப்படியே செயல் படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  10. பிரபல பதிவரா இருக்கனுமுனா, இவ்வலவு கஷ்டங்களா சார்?..

    ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  11. அருள் சேனாபதி said...

    //நல்ல தகவல்கள். நல்ல ஆராய்வு !!!
    இவற்றை அப்படியே செயல் படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்குமோ?//

    நெறயப் பேரு இப்படித்தானுங்க இருக்காங்க. ஒண்ணும் வானம் இடிந்து தலைல வுழுந்துடாதுங்க. பதிவுலகம் இப்படியேதானுங்க போய்ட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. பட்டாபட்டி.... said...

    //பிரபல பதிவரா இருக்கனுமுனா, இவ்வலவு கஷ்டங்களா சார்?.. ஹி..ஹி//

    இந்த நக்கல் நம்மளுக்குள்ள எதுக்குங்க பட்டா?

    பதிலளிநீக்கு
  13. Gopi Ramamoorthy said...

    //ஒரு விஷயம் விட்டுப் போச்சு. அப்பப்போ இந்த மாதிரி பட்டியல் போடுவதும் பிரபல பதிவர்களின் வேலைதான். நீங்க பிரபலம் ஆயிட்டீங்க:-)//

    சூட்சமத்தைக் கரெக்டாப் புடிச்சுட்டீங்க.

    பதிலளிநீக்கு
  14. இது தான் மேட்டரா...இது முன்னமே தெரியாமே போச்சே..

    பதிலளிநீக்கு
  15. /அவனா நீயி..../

    சாரி டாக்டர், மரியாதைகுறைவென்று நினைக்கவேண்டாம்.. இப்படி எழுதவில்லை என்றால் தலை வடிவேலு நினைப்பு நம்ம பயபுள்ளைகளுக்கு வருவதில்லை??

    அருமையான ஆராய்ச்சி, தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  16. // பல ID க்கள் ஏற்படுத்திக்கொண்டு அவைகளிலிருந்து பின்னூட்டம் போடுவது.//

    நீங்கள் எதனை ID க்கள் வைத்துள்ளீர்கள்? :))))

    பதிலளிநீக்கு
  17. கக்கு - மாணிக்கம் said...
    // பல ID க்கள் ஏற்படுத்திக்கொண்டு அவைகளிலிருந்து பின்னூட்டம் போடுவது.//

    ///நீங்கள் எத்தனை ID க்கள் வைத்துள்ளீர்கள்? :))))///

    இப்படி பப்ளிக்கா கேட்டா எப்படி மாணிக்கம்? எந்த அரசியல்வாதியாவது நான் லஞ்சம் வாங்கினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரா?

    ஆனா ஒண்ணு சொல்லிக் கொள்கிறேன். எல்லாம் அனுபவத்திலிருந்து எழுதிய குறிப்புகள்தான்.

    பதிலளிநீக்கு
  18. கோமாளி செல்வா said...
    //இவ்ளோ பண்ணினாதான் பிரபல பதிவரா தாத்தா ?//

    வேண்டாம் பேராண்டி, எதாச்சும் மூணு கடைப்பிடிச்சா போதும்.

    பதிலளிநீக்கு
  19. ஜீவன்சிவம் said...

    //இது தான் மேட்டரா...இது முன்னமே தெரியாமே போச்சே..//

    இப்பத் தெரிஞ்சு போச்சில்ல, இனி கொளுத்துங்க !

    பதிலளிநீக்கு
  20. மனுஷனுக்கு கஷ்டம் வரலாம்...........கஷ்டமே பதிவா வந்தா...........மணவினைகள்யாருளதோ.........மாயவனின் விதி வகைகள்.........

    பதிலளிநீக்கு
  21. டக்கால்டி said...

    //Naan ithukku sari pattu vara maaten sir...//

    இதுக்கே இப்படி ஜகா வாங்கினா எப்படீங்க? இன்னும் மூக்குல குத்து வாங்கறதப் பத்தி எல்லாம் சொல்லவேயில்ல?
    தைரியமா இருங்க டக்கால்டி, நாங்க எல்லாம் இருக்கோமில்ல.

    பதிலளிநீக்கு
  22. நாங்க எல்லாம் இருக்கோமில்ல. //

    நீங்க இருப்பீங்க அய்யா...நான் இருக்கோனுமில்ல... இது ஆவறதில்ல...

    பதிலளிநீக்கு