வெள்ளி, 18 மார்ச், 2011

சோர்வும் சலிப்பும்


இந்த இரண்டு வார்த்தைகளையும் உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் பொதுவாகவே உபயோகிப்பதுண்டு. இருந்தாலும் நான் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தி இருக்கிறேன்.
அதாவது:

1.   சோர்வு என்பது சாதாரணமாக உடல் சோர்வைக் குறிக்கும். இது உடல் தன் சக்திக்கு மீறி உழைக்கும்போது ஏற்படுவது. இதற்குத் தீர்வு ஓய்வு எடுப்பதுதான். இது ஒரு இயற்கை விதி.

2.   சலிப்பு மன ரீதியாக ஏற்படுவது. வாழ்க்கை ஒரே கதியில் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுவது இயற்கை.

பதிவுலகத்தில் சோர்வும் சலிப்பும் மலிந்திருக்கின்றன என்பது என் அபிப்பிராயம். பலர் ஆர்வத்தில் பதிவுகள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திலேயே காணாமல் போகிறார்கள். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் மறைந்துவிடும் பதிவுகள் ஏராளம். மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் பதிவர்களில் கூட சிலர்தான் தொடர்ந்து பதிவுகள் போட்டு வருகிறார்கள். 

இதற்கான காரணங்களை யாராவது ஆராய்ந்து சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பூனைக்கு மணி கட்டுவது யார்?
எனக்குத்தெரிந்த சில காரணங்களைப் பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1.   பதிவுக்கான பொருள்கள் அமையாமை.
எதைப்பற்றி எழுதுவது என்பது பல பதிவர்களுக்கு ஒரு தலையாய வலி (தலைவலி). சிலர் வழியில் பார்த்த ஒரு சிறு உரையாடலைக் கூட வைத்து ஒரு பதிவு தேற்றி விடுவார்கள். அந்தக்கலை எல்லோருக்கும் வருவதில்லை. இவர்களுக்கு ஆதரவாகத்தான் பல பதிவர்கள் “தொடர் பதிவு” என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

2.   அடுத்தபடியாக எழுதுவதற்குத் தேவையானது கற்பனைத்திறன்.
இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். கடையில் வாங்கக் கூடிய சரக்குமில்லை. கம்ப்யூட்டர் இவர்களுக்காகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் copy, paste வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. யாரும் கமென்ட் போடாத பதிவைக் காப்பி, பேஸ்ட் செய்தால் வெளியில் யாருக்கும் தெரியாது.

3.   ஊக்கம் இல்லாமை.
பாலோயர்ஸ், ஹிட்ஸ், பின்னூட்டங்கள் வராவிட்டால் பலர் மனமுடைந்து தற்கொலை லெவலுக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் பதிவுலகத்திற்குள் வந்ததே தவறு. அவர்கள் போவதே பதிவுலகத்துற்கு அவர்கள் செய்யும் தியாகம்.

4.   ஆபீஸில் டேமேஜர் தொந்திரவுகள்.
இந்தத் தொந்திரவு பல விதங்களில் இருக்கும். குறிப்பாக இணையக் கட்டுப்பாடுகள். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர். வேலைக்கே உலை வைக்கும் அபாயமும் உண்டு. என்னைப்போல் பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் சொந்தக் கம்ப்யூட்டரில் பதிவு போடும் ஆசாமிகள் ரொம்பக் கம்மி.

5.   அனானி பின்னூட்டங்கள்.
அனானியாகவோ இல்லை ஒரு பெயருடனோ, ஒரு பதிவரைப் பற்றி தரக்குறைவான வகையில் பின்னூட்டங்கள் வந்தால், நன்கு இரும்பு இதயம் கொண்ட பதிவர்களைத் தவிர மற்றவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள். இது இயற்கை. இதற்குப் பயந்து பல பதிவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று ஓடிப்போகிறார்கள். பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது.  அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பதிவுகள் போட்டு எல்லோரும் பிரபல பதிவர்கள் ஆக வாழ்த்துக்கள்.

19 கருத்துகள்:

  1. வந்தேன் அய்யா..
    இருங்க படிச்சுட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  2. இலவச புத்திமதிக்கு நன்றி...
    இன்றைய பதிவுலகத்துக்கு தேவையானவையும் கூட
    சரியான டைமிங்கில் எழுதி இருக்கிறீர்கள்...
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. விபரங்கள் அடங்கிய நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் பொது மக்கள் உபயோகத்துக்காக...
    //

    அய்.. நடுத்தர பொதுமக்களுக்கா?.. இல்லை ஏழைப்பொதுமக்களுக்கா சார்?..

    ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  5. இலவச புத்திமதிக்கு மிக்க நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  6. நல்ல புத்திமதி! அதுவும் இலவசமாகக் கிடைத்தால் நம் மக்களுக்கு எவ்வளவு சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  7. எப்போதும் வீட்டுக்கு 80 வயது பாட்டி ஒருவர் கீரை விற்றுக் கொண்டு சுறுசுறுப்பாக வருவார். கணக்கு விசயத்தில் கெட்டி. பண விசயத்தில் படா உசார். மொத்தத்தில் சலிப்பு சோர்வு என்பதை நான் அவரிடம் பார்த்ததே இல்லை. அவருக்கு வெளியுலகம் என்பதும் தெரியாது. தன்னை கவனிக்காத மகன் மகள் குறித்து அக்கறையும் இருப்பதும் இல்லை. அழுது புலம்பிக் கூட பார்த்தது இல்லை. உழைப்பும் வேகமும் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பதிவுலகில் நீங்க சொன்ன மாதிரி பித்துப் பிடித்து கூவி கூவி அழைப்பவர்கள் தான் அதிகம். கருத்துக்களை முன்னிலைப்படுத்த உழைப்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் தமிழர்களுக்கு எல்லாமே பொழுது போக்கு. இல்லாவிட்டாலும் பொழுது போகவே மாட்டேன் என்று தேமே என்று உட்காரந்து இருப்பது அதைவிட ரொம்ப பிடிக்கும் போல. உழைக்க விரும்பாதவர்களும், உழைத்துக் கொண்டு இருப்பவர்களை போட்டுத் தாக்க அனானி ரூபத்தில் இருப்பவர்களும் இங்கு அதிகம். நீங்க சொன்ன மாதிரி இரும்பு இதயமா? வாய்ப்பே இல்லை. கூகுள் கடலில் சேரும் குப்பைகள்.

    பதிலளிநீக்கு
  8. பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது. அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும். //

    அதே..


    கோழையாகி ஓடவேண்டும் என்பதே சமூக விரோத கும்பலின் வேலை..

    பஸ் களில் இவர்கள் செய்வது மிக அருவருப்புதான்..

    ஆனால் தாண்டிடணும்.. அலுத்தும் போவார்கள் சில நாட்களில்..

    தொடர்ந்து நல்ல கட்டுரை படைப்பதே நம் நோக்கமாய் இருக்கணும்..

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ளநல்ல பதிவு
    சொல்லிப்போகும் விதமும் அருமை
    உங்களைத் தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //இதையெல்லாம் கடைப்பிடித்து, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பதிவுகள் போட்டு எல்லோரும் பிரபல பதிவர்கள் ஆக வாழ்த்துக்கள்.//

    அர்த்தமுள்ள பதிவு ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //பாலோயர்ஸ், ஹிட்ஸ், பின்னூட்டங்கள் வராவிட்டால் பலர் மனமுடைந்து தற்கொலை லெவலுக்குப் போய் விடுகிறார்கள//

    :)

    பதிலளிநீக்கு
  12. //பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது. அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும்.//

    இந்த வரிய படிச்சிட்டு பெரிய பாறாங்கல்லா தூக்கி அடிச்சிடப்போராங்க... ஹிஹி .............

    பதிலளிநீக்கு
  13. கக்கு - மாணிக்கம் said...

    //என்ன காலையில அண்ணி காப்பி தரலையா??//

    அதுக்கெல்லாம் அசந்துருவமா நாம? நாம யாரு? ஆம்பிளச் சிங்கம்ல? நாமே காப்பி போட்டுக் குடிச்சிருவமில்ல?

    பதிலளிநீக்கு
  14. நல்ல சிந்தனைதான், ஆனால் பதிவை பொழுது போக்காக சிலருக்கு அவர்களின் முக்கிய கடமைகளுக்கு பின்தான் பதிவுக்கு நேரம் அமைகிறது.

    அனுபவத்தில் சிறந்த நீங்கள் என்னையே உதாரணமாக பாருங்கள், பெரியவர்கள் இல்லாமல் கடல் தாண்டி இரு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில், என் பணி, மனைவி குழந்தைகள் மகிழ்ச்சி என்று அதை தாண்டிய பின்தான் மற்ற எதற்கும் நேரம் கிடைகிறது, என்ன செய்வது?

    கடந்த இரு மாதம் முழுவதும் என் பணிசுமை காரணமாக இரவு தாமதமாக வந்ததால், என் குழந்தைகள் விரைவாக தூங்கி நாடு இரவில் எழுந்து ஒரு மணிநேரம் என்னோடு விளையாடி பின் மீண்டும் படுக்கைக்கு சென்றார்கள், அவர்களை தவிர்த்து விட்டு பதிவை எழுத முடியுமா? இங்கு நான் தானே அவர்கள் நண்பன் தந்தை எல்லாம் ...:-).

    அப்படியே வந்தாலும் அவன் இவனை திட்ட அதற்கு பதில் எழுதி இவன் அவனை திட்ட என்று அரசியல் பதிவுகளால் மனம் சலிப்படைகிறது, நடுவில் நல்ல பதிவுகள் தொலைந்து போகின்றன என்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
  15. சிங்கக்குட்டி said...

    பதிவு எழுதுவது ஒரு வெட்டி வேலைங்க. உங்க மாதிரி குடும்பம் குட்டின்னு இருக்கறவங்க உங்க தொழிலப் பாக்கணுங்க.

    இதெல்லாம் என் மாதிரி ரிடைர்டு ஆனவங்க, திண்ணைப் பேச்சுக்குப் பதிலா செய்யற வேலைங்க.

    பொழப்பக் கெடுத்துக்காதீங்க. சம்சாரத்தையும் குழந்தைகளையும் நல்லாக் கவனிங்க. ஊட்ல கம்ப்யூட்டரைக் கட்டீட்டு மாரடிக்காதீங்க.

    பதிலளிநீக்கு