திங்கள், 21 மார்ச், 2011

பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்


சில பிளாக்குகளில் அதிகமான பின்னூட்டங்கள், ஹிட்கள், பாலோயர்ஸ் வந்து பிராண்டுவார்கள். அந்த மாதிரி பிளாக்குகளுக்கு ஒரு சுலப வைத்தியம்.

DashBoard போய் Settings க்குப் போகவும். அங்கே Template Designer என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் பலவிதமான டெம்ப்ளேட்டுகள் இருக்கும். இருப்பதில் திக் கலராக இருப்பதை செலக்ட் செய்யவும். எழுத்துகளையும் திக் கலரில் செலக்ட் செய்யவும். அதாவது கருப்பு பேக்ரவுண்ட்டில் – ஊதா எழுத்துக்கள் சிறப்பாக இருக்கும். இப்போது Apply ஐ அமுக்கிவிட்டு வெளியில் வரவும். உங்கள் பிளாக் கீழே கண்டவாறு இருக்கும்.


உங்கள் பிளாக்குக்கு பின்னூட்டத் தொந்திரவுகள் போயே போச். அவ்வளவுதான். இனி நீங்கள் நிம்மதியாக பதிவுகள் போடலாம்.

இன்னும் இது மாதிரியான தொழில் நுட்பங்கள் நிறைய கைவசம் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் ஆதரவைப் பார்த்துவிட்டு அவைகளையும் வெளியிடுகிறேன்.




         










23 கருத்துகள்:

  1. சார் ,அப்படி எல்லாம் மாத்துனா,ஒரு பையன் படிக்க வர மட்டன் ..

    பதிலளிநீக்கு
  2. வந்தேண்டா ப்ளாக்காரன் அடடா உங்க இடுகையை இப்போ படிக்க போறேன்

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கவும் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ...

    பதிலளிநீக்கு
  4. நல்ல அறிவுரை பயன்படுத்திக்கோங்கப்பா டாக்டர் சொல்லிபுட்டாவோ கேட்காம இருந்துடாதிய..

    பதிலளிநீக்கு
  5. Thirumalai Kandasami said...

    //சார் ,அப்படி எல்லாம் மாத்துனா,ஒரு பையன் படிக்க வர மட்டன் .//

    உங்களுக்குத் தெரியுது. அந்த மாதிரி பிளாக் வச்சிருக்குற மர மண்டைகளுக்கு ஏன் புரியமாட்டேங்கிறது?

    பதிலளிநீக்கு
  6. எல் கே said...

    //என்ன ஒரு கொலை வெறி சார்//

    அந்த மாதிரி படிக்க முடியாத பிளாக்குகளைப் பார்க்கும்போது கண்டிப்பா கொலை வெறி யாருக்கும் வரும்.

    பதிலளிநீக்கு
  7. டக்கால்டி said...

    //மன்னிக்கவும் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ...//

    ஐயையோ, வாயில வெரல வச்சா கடிக்கத் தெரியாத பாப்பாவை எல்லோரும் பாத்துக்கோங்க.

    பதிலளிநீக்கு
  8. சே.குமார் said...

    Eaan Eppadi...?????

    எல்.கே. சொன்ன மாதிரி ஒரு கொலை வெறிதான், குமார்.

    பதிலளிநீக்கு
  9. இதைவிட சூப்பர் ஐடியா கைவசமிருக்கு.
    பதிவை எம்ப்டியா விட்டுட்டு இனமானம் உள்ளவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரியும் ஃபான்ட் இதுனு அடிச்சு விட்டுரனும்

    பதிலளிநீக்கு
  10. இத்தகைய ஆலோசனைகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. கமெண்ட் போடுவதை தொல்லை என்கிறீர்களா

    பதிலளிநீக்கு
  12. ஆர்.கே.சதீஷ்குமார் said...

    //கமெண்ட் போடுவதை தொல்லை என்கிறீர்களா//

    ஐயையோ, நீங்க ராங்க் ரூட்ல போறீங்க. நம்ம ஜனங்களுக்கு எதையும் இப்படிச் செய்யுங்கன்னா செய்யமாட்டாங்க. ஆனா இப்படிச்செய்யாதீங்க அப்படீன்னா, மொதல்ல அதைத்தான் செய்வாங்க. அந்த சைக்காலஜில்ல போட்ட பதிவுங்க. சேம்சைடு கொல் போட்டுடாதீங்க.

    பதிலளிநீக்கு
  13. அதிகமான டெம்பிளேட்டுக்கள் கருப்பிலும் வெள்ளையிலும்தான் வருது. ஆனா ரெண்டுமே கண்ணுக்கு எரிச்சலாதான் இருக்கு .
    அதிலும் அடர் கருப்பு வச்சவங்களை பார்த்தா ஓவர் எரிச்சலாதான் இருக்கு :-))

    பதிலளிநீக்கு
  14. ஜெய்லானி said...

    //அதிகமான டெம்பிளேட்டுக்கள் கருப்பிலும் வெள்ளையிலும்தான் வருது. ஆனா ரெண்டுமே கண்ணுக்கு எரிச்சலாதான் இருக்கு .
    அதிலும் அடர் கருப்பு வச்சவங்களை பார்த்தா ஓவர் எரிச்சலாதான் இருக்கு :-))//

    அந்த எரிச்சலைத்தான் இந்தப் பதிவில் காட்டியிருக்கிறேன். பதிவுகள் போடுவதே அடுத்தவர்கள் படிப்பதற்காகத்தான். படிக்க முடியாதபடி டெம்ப்ளேட் வைத்திருப்பவர்களை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  15. ஹெ ஹே... ஏன் இப்படி???

    அடுத்தடுத்து வரப்போற டிப்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹெ ஹெ :))

    கந்தஸ்வாமி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். வழக்கம் போல கோவை லோலாயுடன் கலாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
    http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html

    தொடரவும் :)

    பதிலளிநீக்கு
  16. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //இதெல்லாம் தெரிஞ்சா, நான் ஏன் இப்படி இருக்கேன்!//

    இதெல்லாம் தெரியவே வேண்டியதில்லை சார். நான் ஏதோ பொழுதைக் கழிக்க பதிவு போட்டுக்கொண்டு இருக்கேன். ஆனாலும் அந்த மாதிரி டார்க் கலரில் உள்ள பதிவுகளைப் பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக உள்ளது. ஏன் இந்த மாதிரி, அடுத்தவர்கள் படிக்க முடியாதபடி பதிவுகள் போடுகிறார்கள் என்ற வேதனையினால்தான் இந்தப் பதிவு போட்டேன்.

    எத்தனை பதிவர்கள் இதை உணர்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்?

    பதிலளிநீக்கு
  17. எல் கே said...

    என்ன ஒரு கொலை வெறி சார்


    ........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அதே,...அதே....

    பதிலளிநீக்கு
  18. எப்படி ஐயா உங்களுக்கு இந்த மாதிரி யோசனைகள் தோணுது?சூப்பர்!

    பதிலளிநீக்கு