புதன், 24 ஏப்ரல், 2013

சமையலறை அமைப்பது எப்படி?


சமையலறையில்தான் இந்தியப் பெண்கள் அவர்கள் வாழ்நாளில் பாதியைக் கழிக்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். இப்போது காலம் மாறிவிட்டது. இருந்தாலும் ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமானதுதான். யார் சமைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

சமையலறை சமைப்பதற்காக என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதற்கான அமைப்புகள் அங்கு இருக்கவேண்டியது அவசியம். முதலில் சமையலறையின் அளவு. குறைந்தது 10 அடிக்கு 10 அடி இருப்பது அவசியம்.

முதலில் அடுப்பு.

கேஸ் அடுப்புதான் இப்போது மாமூல். விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, கெரசின் ஸ்டவ் அப்படீன்னு ஒரு காலத்தில் இருந்தது, என்னைப்போன்ற கிழம் கட்டைகளுக்கு ஞாபகம் இருக்கும். கேஸ் அடுப்பில் பலவகை இருக்கிறது. கேஸைத் திருகினால் தானாகவே பொருத்திக்கொள்ளும் மாடல்தான் இப்ப பாபுலர்.


அடுத்த அவசியம் கிச்சன் சிங்க்

சின்னச்சின்ன சாமான்களை கழுவ ஒவ்வொரு தடவையும் வெளியில் இருக்கும் பெரிய சிங்க்குக்குப் போக முடியாது. அதற்கு சமையல் மேடையிலேயே ஒரு சிங்க் வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸடீலில் நவீன டிசைனில் பலவிதமான சிங்க்குகள் கிடைக்கின்றன.


எலெக்ட்ரிக் சிம்னி: 

இது பேஷனாக இருந்த காலம் போய் இன்று ஒரு அத்தியாவசியமாக ஆகிவிட்டது. பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கிறது. ஃபேபர் ஒரு நல்ல கம்பெனி. இதை வாங்கிப் பொருத்தவேண்டும்.


பிரிட்ஜ்:

இது இல்லாத வீடே இன்று இல்லை. அதை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வாங்கும்போதே கொஞ்சம் பெரிய சைஸ் வாங்கிவிட்டால் நல்லது. பல கம்பெனிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டைப் பொருத்து வாங்கலாம்.


கப்போர்டுகளும் டிராயர்களும்:

இன்று சமையலறை நாகரிகம் என்னவென்றால், நீங்கள் சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு, யாராவது அந்த சமையலறையைப் பார்த்தால், இங்கு சமையல் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி கிளீனாக சமையலறை இருக்கவேண்டும். அதற்கு உதவுபவைதான் கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். அதுதான் பேஷன்.


இழுவை டிராயர்கள்:

இவை மிகவும் உபயோகமானவை. புழங்குவதற்கு எளிதானவை.


கப் போர்டுகள்:

கிச்சன் ஸ்லேப்பிற்கு கீழும், லாஃப்டுக்கு மேலும் இவைகளை அமைத்தால் பல பொருட்கள் அங்கு வைத்துக்கொள்ளலாம்.
அடுத்த அவசியம் - குடி தண்ணீர்:

சுத்தமான குடிதண்ணீரின் அவசியத்தை அனவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அக்வாகார்டு கட்டாயம் வேண்டும்.


பவர் பாயின்டுகள்:

மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர் முதலியவை எல்லோர் வீடுகளிலும் சகஜமாகி விட்டன. அவைகளைப் பொருத்த, நல்ல பாதுகாப்பான பவர் பாயின்டுகள் அவசியம்.


நல்ல வெளிச்சம்:

சமையலறையில் நல்ல வெளிச்சம் இருப்பது அவசியத்தேவை.


சுவரில் டைல்கள்

தரையிலிருந்து சீலிங்க் வரைக்கும் கிளேஸ்டு டைல்ஸ் ஒட்டிவிட்டால் சமையலறையை கிளீன் செய்வது சுலபம்.


மைக்ரோ ஓவன்:

இது காலத்தின் கட்டாயம். ஒரு வாரத்திற்கு வேண்டிய இட்லிகளை ஒன்றாகச் சுட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, அவ்வப்போது தேவையானவற்றை எடுத்து மைக்ரோ ஓவனில் சுட வைத்தால் புது இட்லி தயார். சாம்பார், ரசம் ஆகியவைகளும் இவ்வாறே.


தரை:

தரை துடைப்பதற்கு ஏதுவாகவும் பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கவேண்டும். பலவகை டைல்கள் இருக்கின்றன, இங்கே காண்பது கிரேனைட் தரை.கடைசியாக:

நாங்களெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவோம். உங்கள் வீட்டு வழக்கம் எப்படி என்று தெரியவில்லை. அப்படி கை கழுவுவதற்கான இடம்.


இப்படிப்பட்ட ஒரு சமையலறை அமைக்க ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும். (கட்டிட செலவு போக)

38 கருத்துகள்:

 1. டிஷ் வாஷரை விட்டுட்டீங்களே! இப்ப இருக்கும் மாடர்ன் கிச்சன்களில் இதுக்கும் ஒரு இடம் ஒதுக்கணும்தான்.

  இங்கே நம்ம நியூஸியில் புது வீடு கட்டும்போது மொத்த செலவில் கிச்சனுக்கு 15 முதல் 20 சசதவீதம் ஒதுக்கணும். நம்மூர்போல அடுக்களை ஒரு அறையில் இல்லாம ஓப்பன் ப்ளான் கிச்சனா அமைப்பதுதான் பெரும்பாலும்.

  அடுக்களை டிஸைன் செஞ்சு கொடுக்கவே தனிக் கம்பெனிகளும் டிஸைனர்களும் இருக்காங்க.

  நேரமிருந்தால் பாருங்க நம்ம அடுக்களையை.

  http://thulasidhalam.blogspot.com/2007/11/46.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க வீட்டைப் பார்த்தேன். அட்டகாசமா இருக்கு. அந்தந்த ஊருக்குப் பொருத்தமா கட்டோணும், இல்லீங்களா?

   டிஷ் வாஷர் இன்னும் இங்க பாபுலர் ஆகல்லே. அதுக்கு வேணும்கிற தண்ணி ஊத்தி நம்ம ஊர்ல கட்டுப்படியாகாதுங்க.

   இங்க டிசைனர்களெல்லாம் காசெக் கரியாக்கறதுக்கின்னே இருக்காங்க. வேலைக்காவாதுங்க. இதெல்லாம் என்னோட பெர்சனல் டிசைனுங்க.

   நீக்கு
 2. அதென்னமோ உண்மைதான். கிச்சன் டிஸைனருக்கு 2500 டாலர் அழுதுட்டு கடைசியில் அது பிடிக்காம நம்ம சொந்த ஐடியாவைச் சொல்லி நம்ம கிங் (இவருக்குக் கிச்சன் கிங்னு பெயர் வச்சுட்டேன்) வரைஞ்சு கொடுத்து அப்படியே அவர் அடுக்களையைச் செஞ்சு முடிச்சார்.

  பெரிய பேன்ட்ரி ரெண்டு வைக்கச் சொன்னேன். அப்படியே ஆச்சு. அரிசி மூட்டையை உள்ளே வைக்கணுமுல்லெ:-))))

  உங்க டிஸைன் அருமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப தேங்க்ஸ் டீச்சர். புரொபசரா இருந்தாலும் டீச்சரோட மவுசே தனிதான்.

   நீக்கு
 3. மைக்ரோ அவன் பற்றிய குறிப்புகள் புன்னகைக்க வைத்தன. பதிவிலேயே உங்களுக்கு எழுத அடுத்த விஷயமும் கிடைத்து விட்டது பல இருக்கிறது! (குளிர் சாதனப் பெட்டிப் பராமரிப்பு)

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அந்தச் சமையலைச் சாப்பிட்டு 80 வயது வரை (நன்றாக) இருக்கிறேனே, அதிலிருந்தே சமையலின் தரம் தெரியவில்லையா?!

   நீக்கு
  2. அந்த காலத்து ஆளாகையால் கண்டிப்பாக வீட்டு சாப்பாடாகத்தான் இருந்திருக்க முடியும். கண்டிப்பாக ஓட்டல் சாப்பாடு எப்போதாவதுதான் இருந்திருக்கும். எனவே 80 வயதிலும் இந்த அளவு உற்சாகத்தோடு இளைஞர்களுக்கு ஈடாக உங்களால் பதிவு போடமுடிகிறது. உங்கள் மனைவியிடம் சொல்லி திருஷ்டி சுற்றி போட சொல்லுங்கள். நல்ல உணவை உங்களுக்கு அளிக்கும் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை காணிக்கையாகுங்கள்.

   இன்றைய குழந்தைகளுக்கு நமது உணவு வகைகளின் மகத்துவம் புரிவதில்லை.
   நேற்று கூட ராஜ் டிவியில் அணில் சேமியா நடத்தும் சமையல் நிகழ்ச்சியில் கேழ்வரகு + ஆப்பிள் சேர்த்து கூழ் செய்து சத்தான உணவு என்று காட்டினார்கள். உடனே என் பெண் எதையெல்லாம் யார் சாப்பிடுவார்கள் என்று சானலை மாற்ற பார்த்தாள். ராகி மால்ட் என்று டின் வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இதை செய்து சாப்பிடலாம் என்று உட்கார வைத்து சொல்லியதற்கு பின் புரிந்து கொண்டாள். நம் தலைமுறையோடு மறைந்து போக கூடிய நிலையில் உள்ள உணவு வகைகளை நம் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று புரிந்த கொண்டேன்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
 5. படங்களுடன் பகிர்வு
  மிக மிக அருமை
  புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு அவசியம்
  இது நல்ல வழி காட்டும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. சமையலறையின் அளவைப் பற்றி சொல்லும்போது நான் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது. சமையலறையின் நடுவில் நின்று இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டினால் அவைகள் இரு பக்க சுவர்களை இடிக்காமல் இருக்கவேண்டுமாம்.ஆனால் இன்று அடுக்ககம் என சொல்லப்படுகின்ற Flats களில் நம் விருப்படி சமையலறை அமைக்கமுடியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் இது ஒரு தேவையான, உபயோகமான பதிவு என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. both the fridge and electric chimney should have motors with low rpm.- means less noise. otherwise noise literally kills! (especially the chimney one). in addition one exhaust fan (ventilator) is also an useful addition- our kitchens are usually very moist.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் ரொம்ப அழகாக இன்றைய சமையலறையின் சாமுத்ரிகா லக்ஷணத்தை பற்றி சொல்லிவிட்டீர்கள். நான் மாட்டிகொண்டேன்.
  உடனயாக அடுத்த தபாலில் ஒரு மூன்று லக்ஷம் அனுப்பி வைக்கவும் (திருப்பி வராத கடனாகத்தான். நீங்கள் இந்தப்பக்கம் வரும்போது எங்கள் வீட்டில் சாப்பிட்டு கழித்து கொள்ளலாம்).

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக எங்கள் ஊர் பக்கம் வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்
   ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போக வேண்டும்
   அதற்குள் புது சமையலறையை கட்டிவிடுகிறேன்.
   "பழைய சமையலறையே இருந்தால்தான் என்ன.
   மொந்தைதானே புதிது. அதே கள்தானே. சமைப்பவள் நான்தானே.
   வந்த காசில் பொண்ணு கல்யாணத்திற்கு நகை வாங்கி போடுங்கள்" என்று சகதர்மிணியின் முணுமுணுப்பு கேட்கிறதா உங்களுக்கு.

   சேலம் குரு

   நீக்கு
 9. மூன்று லக்ஷம் செலவு என்று தீர்மானித்த பிறகு அக்வா கார்டுக்கு பதில் ஒரு 15000 செலவு செய்து RO போட்டுவிட்டால் இன்னும் அழகாக இருக்கும். அதற்கு லாப்டுக்கு மேல் ஒரு இடம் கொடுக்க வேண்டும்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டிற்கு வரும் தண்ணீரின் குவாலிடியை அனுசரித்து இதை முடிவு செய்யவேண்டும். தண்ணீரில் உப்பு கொஞ்சம் அதிகம் இருக்குமானால் RO அவசியம் தேவைப்படும்.

   நீக்கு
 10. ஏற்கனவே குளிர் சாதன பெட்டியை பழைய சோத்து டப்பா என்று சொல்லும் ஆட்கள் உண்டு. ஒவ்வொரு வேளையும் சாப்பாடு சூடாகத்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.
  இப்போது அந்த "பழைய சோத்தை" சூடு பண்ண மைக்ரோ வேவ் ஓவனும் வந்து விட்டது.
  நேத்து வச்ச மீன் குழம்பு மட்டுமில்லை. இனிமேல் எல்லா குழம்பும் நாக்கில் நீர் சொட்ட வைக்கும் போலிருக்கிறதே
  நிஜமாகவே மைக்ரோ வேவ் ஓவன் இல்லத்தரசிகளுக்கு ஒரு வரபிரசாதந்தான்.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 11. எல்லாம் சரி.
  மைக்ரோ வேவ் ஓவனில் சமைத்தால் நாளடைவில் கான்சர் வரும் சொல்லபடுகிறதே
  இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேன்சர் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவரவர்கள் விதிப்பிரகாரம் நடக்கும்.

   நீக்கு
 12. //யார் சமைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.//
  //சமையலறை சமைப்பதற்காக என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.//
  //பிரிட்ஜ் :எப்படி பராமரிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.//
  //கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். அதுதான் பேஷன்.//
  //நாங்களெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவோம். உங்கள் வீட்டு வழக்கம் எப்படி என்று தெரியவில்லை.//

  இத்தகைய வாக்கியங்களினால்தான் உங்கள் பதிவு விரும்பபடுகிறது.
  விசயத்தோடு மட்டுமன்றி அவ்வப்போது நகைச்சுவையையும் கலந்து கொடுக்கும் இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிறது.
  தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  சேலத்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேலத்தான் உங்களை பற்றி சொல்லியது முழுக்க முழுக்க உண்மை.
   அதனால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் உங்கள் நடையை காப்பி அடிக்க முயன்றேன். வெற்றி பெற்று விட்டேனா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்

   இப்படிப்பட்ட சமையலறையில் மனைவியோ, அம்மாவோ, இல்லை இரண்டு பெரும் சேர்ந்தோ சமைத்ததை வீட்டிலிருக்கும் மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்பது அந்த காலத்திலிருந்து கடைபிடிக்கப்படும் ஒரு முக்கியமான பாரம்பரியமாகும்.
   அந்த காலத்து ஆட்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவோம். நவீன சமையலறையாதலால் இந்த சாப்பிடும் சடங்கை செய்ய ஒரு டைனிங் டேபிள் நல்ல இருக்கைகளோடு வேண்டும். இந்த இடம் பொதுவாக சமையலறையை ஒட்டியே இருக்கும். பல விதமான டைனிங் டேபிள் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

   சேலம் குரு

   நீக்கு
  2. //இரண்டு பெரும் சேர்ந்தோ//

   எந்தக்காலத்தில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து சமைத்திருக்கிறார்கள்?

   நீக்கு
 13. எலெக்ட்ரிக் சிம்னி,பிரிட்ஜ், அக்வாகார்டு,RO,மைக்ரோ வேவ் ஓவன்,மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர், எக்ஜாஸ்ட் பேன்
  இவையெல்லாம் ஒரு காலத்தில் உபயோகமாக இருந்தன
  கரன்ட் இல்லாமல் இவை அனைத்தும் பயனில்லாமல் போய்விட்டன
  இப்போது அவையல்லாம் இடத்தை அடைத்துகொண்டிருக்கின்றன என்று போன மாதம்தான் பழைய இரும்பு சாமான் வாங்குபவனுக்கு போட்டுவிட்டு பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிட்டு நல்ல iron சத்தோடு இருக்கிறோம்.
  மாவாட்டிகொண்டு, மாவு இடித்துக்கொண்டு சட்னி அரைத்துகொண்டு, கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்திகொண்டு, துணி துவைத்துக்கொண்டு என்று மொத்தத்தில் சுறுசுறுப்பாக வம்பு பேசக்கூட நேரமில்லாமல் இருக்கிறோம். இவ்வளவு வேலை செய்வதால் உடம்பு நன்றாக இருக்கிறது. டாக்டர் செலவு ஜிம் செலவு மிச்சமாகி இருக்கிறது.

  திருச்சி தாரு


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரன்ட் "கட்" டினால் எவ்வளவு நன்மைகள் பார்த்தீர்களா? வீணாக அம்மாவைக் குறை சொல்லாதீர்கள்.

   நீக்கு
 14. //இப்படிப்பட்ட ஒரு சமையலறை அமைக்க ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும். (கட்டிட செலவு போக)//

  முதலில் ஒரு வீடு வாங்குகிறேன். அதற்கப்புறம் சமையலறையை கட்டுவதை பற்றி யோசிக்கலாம் என்றிருக்கிறேன்.

  சேலத்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடு கட்டுவது நல்ல முடிவு என்று சொன்னதோடு நிறுத்திகொண்டீர்களே. உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?
   சமையலறை கட்ட சேலம் குரு கேட்ட மூன்று லக்ஷம் மட்டும் அனுப்பி விட்டீர்களே. எனக்கும் வீடு கட்ட ஒரு பதினைந்து லக்ஷம் அனுப்பினால் நன்றாக இருக்குமே

   சேலத்தான்

   நீக்கு
  2. இதோ, தேவலோக பேங்கின் பிளேங்க் செக். எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு எழுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 15. சமையலறை பற்றி விரிவாக சொல்லிவிட்டீர்கள்.

  இனிவரும் காலங்களில் சமையலறை தேவை இருக்குமா தெரியவில்லை. காலம் அப்படித்தான் போய்கொண்டு இருக்கின்றது. யாரு சமைக்கிறார்கள் சந்திக்கு சந்தி ரேக் எவே பார்சல்கள் கிடைக்கின்றனவே. வீட்டுக்கு ப்ரிஜ் ,மைக்ரோ மட்டும் போதும் என்ற காலமாகத்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிப்பட்ட காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

   நீக்கு
  2. கல்யாணமான புதிதில் (20 வருடங்கள் ஆயிற்று) 30 ரூபாய்க்கு காய்கறி வாங்கினால் ஒரு வாரத்திற்கு வரும். இன்றோ ஒரு வாரத்திற்கு 500 ரூபாய் செலவாகிறது. அதவும் பார்த்து பார்த்து செலவு செய்தால்தான். இல்லையென்றால் எங்கோ போய்விடும். முட்டைகோஸ் எல்லாம் கிலோ 1 ரூபாய்க்கு அப்போது விற்றது இப்போது 15 ரூபாய். பீன்ஸ் எல்லாம் 5-6 ரூபாய்க்கே மலைத்த காலம் போய் இன்று 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை.
   இதையெல்லாம் பாத்தால் பேசாமல் சந்திக்கு சாந்தி முளைத்துள்ள கடைகளில் வேளா வேளைக்கு எதையோ கொறித்துகொண்டு - நல்ல ஐட்டமாக வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவாக மட்டும் நாம் எடுத்து கொள்ள வேண்டும் - இருந்தால் விலைவாசி உயர்வை பற்றி கவலை படாமல் இருக்கலாம் போலிருக்கிறது.

   சேலத்தான்

   நீக்கு
  3. அதன் ஒரு வெளிபாடுதான் "அம்மா" உணவகங்களோ?
   சரவண பவன், அடையாறு ஆனந்த பவன் போன்ற செயின் ஹோட்டல்கள் தரமான உணவு என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு "அம்மா" உணவகங்கள் பதிலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
   வீடு என்பது தங்குவதற்கு
   உணவகம் என்பது சாப்பிடுவதற்கு
   அலுவலகம் என்பது வேலை பார்ப்பதற்கு
   (விவசாயமும் அலுவலகத்திற்குள் அடக்கி விட்டேன்)
   என்ற கான்செப்ட் சிறிது காலத்தில் வந்து விடும் போலிருக்கிறது.

   சேலத்தான்

   நீக்கு

 16. இனிமேல் புதிதாக வீடு கட்டுவதாயிருந்தால் இந்த ஐடியாக்களை நினைவு கூர்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 17. //ஒரு வாரத்திற்கு வேண்டிய இட்லிகளை ஒன்றாகச் சுட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, அவ்வப்போது தேவையானவற்றை எடுத்து மைக்ரோ ஓவனில் சுட வைத்தால் புது இட்லி தயார்.//
  எங்கள் வீட்டில் இதை நடைமுறை படுத்த தயாராகி வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு