வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சேவை அமைப்புகள்


சமீபத்தில் ஒரு சேவை அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவருக்கும் விருது கொடுத்து மரியாதை செய்வதாக இருந்ததால் என் நண்பர் என்னையும் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு.

ஐந்தேமுக்காலுக்கே போய்விட்டேன். நிகழ்ச்சி சரியாக 6.25க்கு ஆரம்பித்தார்கள். அந்த சேவை அமைப்பின் பெயர் "தாய்மடி". அதாவது தாய்மடியில் உங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்குமோ அந்த ஆதரவு இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் என்று அமைப்பின் பொறுப்பாளினி, தன் அறிமுக உரையில் சொன்னார்கள். இந்த சேவை அமைப்பு பிரபல ஜவுளி நிறுவனமான பி.எஸ.ஆர் ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பலரிடம் பல திறமைகள் இருக்கலாம், ஆனால் வெளி உலகிற்கு அந்த திறமை தெரியாமல் இருக்கலாம், அப்படிப்பட்டவர்களை இந்த அமைப்பின் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். நோக்கம் உன்னதமான நோக்கம். ஆனால் செயல்படுத்த அதிக பொருளும், நேரமும், உழைப்பும் தேவைப்படும்.


அன்று நடந்த நிகழ்ச்சி ஒரு அவியல் சுவையுடையதாய் இருந்தது. பலதரப்பட்ட திறமையாளர்களை மேடையேற்றி அவர்களை பலவாறாக கௌரவித்தார்கள். என் நண்பருக்கு "யோகா வல்லுநர்" என்ற பட்டமும், பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும், ஒரு பொன்னாடையும் கொடுத்தார்கள். அவர் பேசுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோ காரணத்தினால் அவரைப் பேச அழைக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கடைசியாக பல மழலைகளைக் கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியும் வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். அங்கு எடுத்த சில படங்களை இணைத்திருக்கிறேன்.


வந்திருந்தவர்கள்.


13 கருத்துகள்:

 1. //இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். //


  ஏன் இப்படி பதிவு எழுதக்கூடவா ஒத்துக்கொள்ளாது?

  நாட்டு நடப்பு பின்னே எங்களுக்கெல்லாம் எப்படித் தெரியவருமாம்?

  பதிலளிநீக்கு
 2. இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான்.

  நிறைய நிகழ்ச்சிகள் இந்த பாடங்களைத்தான் கற்றுத்த்ருகின்றன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நம் உடம்பிற்கு ஒத்துகொள்ளாததற்கு காரணமே தாமதமாக ஆரம்பிப்பது, நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகள் நடக்காதது, அதில் பங்கு பெறாமல் பார்வையாளராக போவதினால் வரும் மன கஷ்டம், எல்லாவற்றையும் விட முக்கியமானது நமது வயது; அவ்வளவு நேரம் ஒரே இடத்தில் கட்டிபோட்டது மாதிரி அமர்ந்திருக்க முடியாதது.
   இவ்வளவுக்கு நடுவிலும் சில பிலாந்தரபிஸ்ட்டுக்கள் நடத்துவதை பாராட்டத்தான் வேண்டும். அதற்காகவாவது இத்தகைய தொந்திரவுகளை பொறுத்து கொள்வது நமது கடமை என்று நான் நினைக்கிறேன்

   சேலம் குரு

   நீக்கு
 3. உங்கள் நண்பர் யோகா வல்லுனருக்கு எனது வாழ்த்துக்கள்!

  //இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான்.//

  ஏன் அப்படி சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு செல்வதன் மூலம் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததென்னமோ உண்மைதான். ஆனால் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் புகழ்வது மிகவும் செயற்கையாக உணர்ந்தேன். அதுதான் என் சோர்விற்கு காரணம். சிந்தனைக்கு தீனி போடும்படியாக ஒருவரும் பேசவில்லை என்பது கூடுதல் சோர்வு.

   நீக்கு
 4. அதிக நேரம் ஆக்கி விட்டார்களோ...?

  மனதிற்கு ஒத்துக் கொண்டதா ஐயா...?

  பதிலளிநீக்கு
 5. ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு விட்டுக் கிளம்பியிருக்கலாமே....!

  பதிலளிநீக்கு
 6. சேவை அமைப்புக்களின் நோக்கம் சரியாக இருந்தால் சரி! ஆனால் இவர்களின் ஓவர் புகழ்ச்சி உண்மைதான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. // இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். //

  எனக்கும் சிலசமயம் இதுபோல் ஆகிவிடுகிறது. நண்பர்களுக்காக
  உட்கார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

  பதிலளிநீக்கு