திங்கள், 3 ஜூன், 2013

நீங்கள் குடி பெயர்ந்தீர்களா, சனி உங்களைப் பிடித்துவிட்டான்.


ஏழரை நாட்டு சனி என்று கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்தச் சனி பிடித்தால் ஒருவனைப் படாதபாடு படுத்தும் என்று கேள்வி. நமது புராண நாயகன் நளச்சக்கரவர்த்தியை சனி எப்படிப் பிடித்தான் என்று அறிந்திருப்பீர்கள். ஒரு நாள் அவன் கைகால் கழுவும்போது குதிகாலில் ஒரு இடத்தில் கால் நனையவில்லை. சனி, நளனை அது வழியாகப் பிடித்தான் என்பது புராணக் கதை.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் துர்ப்பாக்கிய வசமாக வீடு மாற்ற நேர்ந்தால் அப்போது உங்களை சனி பிடித்துக்கொள்ளுவான் என்பது மட்டும் தெரியும். வேறு ஊருக்குப் போய்விட்டீர்கள் என்றால் உங்களை ரெட்டைச் சனி பிடித்துக்கொண்டான் என்று அர்த்தம்.

நீங்கள் இவ்வாறு வீடு மாற்றியவுடன் செய்யவேண்டியவை:

1. ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றவேண்டும்.

2. கேஸ் கனெக்ஷனை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

3. தபால் ஆபீசில் உங்கள் தபால்களை புது விலாசத்திற்கு அனுப்பச்சொல்லி கடிதம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு உங்கள் கடிதங்களை புது விலாசத்திற்கு அனுப்புவார்களா என்பது வேறு விஷயம்.

4. பேங்க் அக்கவுன்டுகளை உங்கள் புது வீட்டிற்குப் பக்த்தில் உள்ள கிளைக்கு மாற்றவேண்டும்.

5. உங்கள் டிரைவிங் லைசன்சில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும்.

6. உங்களை வாகன ரிஜிஸ்ட்ரேஷன் அட்டையில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும். அந்த வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டிலும் விலாசத்தை மாற்றவேண்டும்.

7. உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்கூல் மாற்றவேண்டும்.

8. லேண்ட் லைன் டெலிபான் வைத்திருந்தால் அதை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

இன்னும் விட்டுப் போனவை இருக்கலாம். எனக்கு நினைவு வந்தவரை குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பதிவு எழுதவேண்டிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி எழுதினால் உங்களில் பலரை, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டிய பாவம் என்னை வந்து சேரும் என்ற பயத்தினால் எழுதாமல் விடுகிறேன்.

15 கருத்துகள்:

 1. சரியாகச் சொன்னீர்கள்
  அந்த அவஸ்தைகள் எல்லாம் பட்டவர்களுக்குத்தான்
  புரியும்,இத்துடன் விசிடிங்க் கார்டையும் சேர்த்துக் கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 2. மாற்றல் வந்து வீடு மாறினால் ஏற்படும் இன்னல்கள் எழுத்தில் அடங்கா. எனது 38 ஆண்டுகள் பணிக்காலத்தில் எனக்கு கிடைத்த மாற்றல் ஆணைகள் மட்டும் 21. அவைகளில் திருமணமாகி பணி ஓய்வு பெரும் வரை பெற்ற மாற்றல் ஆணைகள் மட்டும்11. மாற்றல் ஆகி செல்வோருக்கு உதவ ஒரு கையேடு தயாரித்தால் என்ன என்று நான் நினைத்ததுண்டு. தாங்கள் அதை தொடங்கி வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. திருமணத்திற்கு முன் ஒரு டிரான்ஸ்பரும், திருமணத்திற்குப் பின் ஒரு டிரான்ஸ்பரும் மட்டுமே. மற்றொரு டிரான்ஸ்பரில் குடும்பத்தை மாற்றவில்லை.

   நீக்கு
 3. சமீபத்தில் வீடு மாற்றினீர்களா என்ன!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ நான் இருக்கிற வீடு சொந்த வீடு.50 வருடங்களாக அங்கேயேதான் இருக்கிறேன்.

   நீக்கு

 4. தவிர்க்க முடியாவிட்டால் சனியால் பீடிக்கப்பட்டுதானே ஆகவேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் பாவிகளுக்கு இது மாதந்திர பிரச்சனை தான் ஐயா....

  எனது மைத்துனர் நான் வசிக்கும் வீட்டுக்கு பக்கத்தில் வாடகை வீட்டில் இருந்தார்... 20 கிலோ மீட்டர் தூரத்தில் வேலை கிடைத்ததால் யார் சொல்லியும் கேளாமல் வீட்டை மாற்றினார் குழந்தையை பள்ளியில் சேர்த்தார். 2 மாதத்தில் வேலை போனது , திரும்ப கிடைத்தபுது வேலை எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான். எனவே குழந்தை படிப்பு முடிய மார்ச் வரை அங்கிந்து 20 கிமி வேலை க்கு வந்தார். பள்ளீ முடிந்தவுடன் எப்ரல் 8ல் இங்கே அருகில் ஒரு வீடு பிடித்து வந்தார் ...


  வீட்டு சாமான்களை மாற்றுவதை பற்றியே தொடர் பதிவு எழுதும் அளவுக்கு வேலை ஏனேனில் முதலில் இருந்தத் முதல் மாடி , இங்கேயும் முதல் மாடி . சாமான்களை , பீரோ, பிரிட்ஜ் அனைத்தையும் தரை தளம் கொண்டு வந்து வண்டிக்கு மாற்றி அங்கிருந்து கொண்டு வந்து வண்டியில் இருந்து இறக்கி திரும்ப மேலேற்றி அடுக்கி....உஸ்ஸ்... இப்பவே கண்ண கட்டுதே டைப்பு வேலைகள்...

  இதில் ஹைலைட் காமேடியே.. எப்ரல் 8 வந்து 10ம் தேதி புது வீடு புகுந்தார் ..வீட்டில் பிர்ச்சனையால் 6 நாட்களுக்கு பின் 200 கிலோமீட்டர் துரத்தில் வேலை மாற்றி அங்கே குடி புகுந்தார்...

  இதில் இன்னொரு விஷயம்.. அவரின் டூவிலரை பஸ் ஸ்டெண்டில் டூ வீலர் ஸ்டேண்டில் பார்க்ங் செய்துவிட்டு போனவர் பிரச்சனையால் வண்டியின் ரசீடை தொலைத்து விட்டர்...
  வண்டியை திரும்ப பெற 1 மாதம் ஆனது அதன் அலைச்சல்கள் 2 பதிவுகளுக்கானது ...

  எனவே வீடு பெயர்வதை சனி பெயர்ச்சி என்று நீங்கள் சொன்னால் சொந்த வீட்டில் இருக்கிறீர்கள் புது வீடு மாறும்போது வரும் பிரச்சனையை பேசுகிறீர்கள்.. என்று பொருள் சரியா...

  அப்படி பார்த்தால் நீங்கள் சனி பெயர்சியை சந்திதாலும் கொடுத்து வைத்தவர் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சனி என்னைப் பிடித்து விட்டு விட்டது. இனி நான் மாற்றும் வீடு இருக்கும் இடத்திற்கு எந்தப் பொருளையும் எடுத்துப் போகவேண்டியதில்லை!

   நீக்கு
 6. 9. 'டாடா ஸ்கை', 'சன் டைரக்ட்' மாதிரி டிடிஎச் கனெக்ஷன் வைத்திருந்தால் அவர்களுக்குச் சொல்லி புதிய இடத்தில் இன்ஸ்டால் செய்யச்சொல்ல வேண்டும்.

  10. ஆன் லைனில் மின் கட்டணம் செலுத்துபவர் என்றால் பழைய சர்வீஸ் நம்பரை டெலீட் செய்து புது எண்ணைப் பதிந்துகொள்ள வேண்டும்.

  11. பான் கார்டில் முகவரி மாற்ற வேண்டும் (கார்டில் இருக்காது, வருமான வரித்துறை ரெகார்டில் இருக்கும்)

  12. இன்ஷயூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் போன்ற முதலீடுகள் இருந்தால் அவற்றில் மாற்ற வேண்டும். இவை டிமாட் வடிவில் இருந்தால் டிமாட் தரும் ஏஜென்சியில் மட்டும் மாற்றினால் போதும்.

  13. உங்கள் அலுவலத்தில் தொடர்பு முகவரியாக புது முகவரியைத் தர வேண்டும்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 7. தங்களின் பதிவு மிகவும் உபயோகமானது.
  இதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள
  விரும்புகிறேன். எனவே அதற்கான பேஸ்புக்சுட்டியை இணைக்க முடியுமா?

  பதிலளிநீக்கு