இலவசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
சீலை வாங்கினால் ஜாக்கெட்டு இலவசம்.
சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம்.
இரண்டு சர்ட் (அல்லது பேன்ட்) வாங்கினால் மூன்றாவது இலவசம்.
இப்படி உலகில் பல வியாபார வித்தைகள் நடக்கின்றன.
இதைப் பார்த்த என் நண்பர் சொன்னதைத்தான் இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். இது வேடிக்கைக்காக சொன்னாலும் இலவசங்களின் தத்துவத்தை நன்றாக விளக்குகிறது.
இந்த பொது தத்துவம் இணையத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம்.
இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை அனுபவசாலிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். காற்றும் தண்ணீரும் இயற்கை தந்த இலவசச் செல்வங்கள் என்று சிறுவயதில் பாடபுத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவை எவ்வாறு வியாபாரப் பொருள்களாகி விட்டன என்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
இலவசம் என்று செல்லப்படும் அனைத்து விஷயங்களிலும் மறைமுகமாக ஏதோ ஒன்றை நம்மிடம் தள்ளிவிடுகிறார்கள் அல்லது அதனால் ஏதோவொரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
உலக நடைமுறை இவ்வாறு இருக்க இணையம் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும்? இணையத்தில் இந்த உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
கம்ப்யூட்டரை இயக்க பல மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தியாவசிய மென்பொருட்களுக்கான விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஏறக்குறைய எல்லோரும் காப்பியடிக்கப்பட்ட (Pirated) மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.
இது போக பல இலவச மென்பொருட்களை நம் பதிவுலக ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில மென்பொருட்கள் உண்மையிலேயே இலவசமானவை. ஆனால் அவைகளின் மூலமாக ஏதோவொரு லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் காரியம் நடந்தால் சரி என்று நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்கள் தங்களுடன் இன்னுமொரு இலவசத்தைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள் இவ்வாறுதான் நம் கம்பயூட்டருக்கு வந்து சேர்கின்றன.
சில வைரஸ்கள் பெரிய தீங்கு விளைவிக்காதவை. ஆனால் சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரையே முடக்கிப் போட வல்லவை.
ஆகையால்தான் எந்த வைரஸாக இருந்தாலும் தடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். இணையத்தை உபயோகப்படுத்தாதவர்கள் இந்த வைரஸ்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்களை இந்த வைரஸ் இணையம் மூலமாக அணுகாது. வேறு வகைகளில் வரலாம்.
எந்தவொரு மென்பொருளையும் தரவிறக்கும்போது நல்ல ஆன்டிவைரஸ் மூலமாக பரிசோதித்து, பின்பு தரவிறக்குங்கள். அல்லது நண்பர்களிடம் விசாரித்துவிட்டு, பின்பு தரவிறக்குங்கள்.
கடந்த வாரத்தில் என்னுடைய கம்ப்யூட்டரை இரு முறை முற்றிலுமாக ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டி நேர்ந்தது. எனக்கு ஓரளவு இந்த தொழில் நுட்பம் தெரிந்திருந்ததினால் செலவு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்த தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு வீண் செலவு ஏற்படும். ஆகவே இணையத்திலிருந்து எதையும் தரவிறக்கம் செய்யுமுன் தீர யோசித்து, பலரை விசாரித்து செயல்படவும்.
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஐயா...! இணையத்தில் இலவசம் என்று எதுவுமே இல்லை.. ரூபாய் ஆயிரம் பெறுமதியான ஒரு மென்பொருள் இலவசமாக தருகிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு இலாப நோக்கு அவர்களுக்கு இல்லாமல் இருக்காது.. அவ்வாறு இலவசமாக கொடுக்க அவர்கள் ஒன்றும் பொதுசேவையோ, தொண்டு நிறுவனமோ நடத்துவதில்லை.. ! எளிமையாக சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.. அருமை..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..!
ஓர் இளைஞருக்கு உண்டான அத்தனை அறிவும், குறும்பும், பார்வையும் உங்களிடம் உண்டு. மென்பொருள் கம்பனிகளில் பெட்டித் தட்டும் இளசுகளுக்கே இன்று கணணி வைரஸ்கள் குறித்தோ, அவற்றை நீக்குவது குறித்தோ தெரியாது, ஆனால் நீங்கள் கிரேட் !
பதிலளிநீக்கு// இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.//
பதிலளிநீக்குசத்தியமான வார்த்தை. இதை அறியாமல் நம் மக்கள் இலவசம் என்றதும் அதன் பின்னே உள்ள ஆபத்தை அறியாமல் அதை பெற்றுக்கொள்ள துடிக்கின்றனர். என் நண்பர் ஒருவர் சொன்னார். ‘விஷம் இலவசம் என்றால் கூட நம் மக்கள் அதைப் பெற போட்டி போடுவார்கள்.’ என்று. கூடியவரையில் இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது
Add on programs (search, etc..) டிக் செய்வதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குஎதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.....
பதிலளிநீக்குஉண்மை. பல மின்பொருட்களை தரவிறக்கம் செய்யும்போது கூடவே வில்லனையும் தரவிறக்கம் செய்கிறோம் நமக்குத் தெரியாமலே.....
பகிர்வுக்கு நன்றி ஐயா.
தாங்கள் இலவசமாகக் கொடுத்துள்ள அறிவுரைகள், தங்களின் தலைப்பைப் போன்றே அருமை, ஐயா. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குசார், ஓட்டுப் பெட்டியுடன் உள்ள தமிழ்மணம் பதிவுப் பட்டைக்கான கோடு எங்கே உள்ளது? சுட்டி தர இயலுமா? என்னால் ஓட்டுப் பெட்டியும், திரைமணமும் இல்லாத 'சப்மிட் டு தமிழ்மணம்' என்று குறிப்பிட்ட பட்டைக்கான நிரலியைத்தான் தமிழ்மணம் தளத்தில் கண்டுபிடிக்க முடிகிறது.
பதிலளிநீக்குசரவணன்
இந்தப் பதிவில் சென்று பார்க்கவும்.
நீக்குhttp://www.techthangam.com/2012/09/how-to-add-tamilmanam-vote-button.html
இந்தப் பதிவையும் பார்க்கவும்.
நீக்குhttp://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post.html
நீக்குஇதைப்பார்க்கவும்.
நன்றிங்க. ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவுகளை முதலிலேயே பார்த்துவிட்டேன். அவை என் கேள்விக்குப் பதில் தரவில்லை. இருவிதமான பட்டைகளைப் பார்க்கிறேன். உங்கள் பதிவில் இருப்பது ஒரு விதம். பிரபல பதிவு துளசிதளம் உள்ளிட்ட சில பதிவுகளில் இருப்பது தம்ஸ் அப்- தம்ஸ் டௌண்-திரைமணம் இல்லாத பட்டை. தமிழ்மணம் உதவிப்பக்கத்திலேயே (உங்கள் சுட்டி) அதுதான் இருக்கிறது.
நீக்குஇருந்தாலும் தேடி எடுத்து சுட்டிகளைத் தந்ததற்கு மீண்டும் நன்றி.
சரவணன்
நன்றி, சரவணன். எனக்கு இதுக்கு மேல தெரியல.
நீக்குஎச்சரிக்கை பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..
பதிலளிநீக்குஆம். இலவசங்கள் என்று எதுவுமே கிடையாது. அனுபவப் பாடங்கள்!
பதிலளிநீக்குரொம்ப நல்ல அறிவுரை! சில சமயங்களில் சில தளங்களுக்குப் போனாலே இது blocked சைட் என்று வருகிறது. உடனே மூடிவிடுகிறேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநான் படித்த ( கேட்ட ) நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வருகிறது.’ நான்கு பாக்கெட் ஆணுறை வாங்கினால் ஒரு குழந்தை இலவசம்.....!
அதுக்காக தலைப்பை இப்படியா வைக்கிறது? நல்ல உத்திதான்!
பதிலளிநீக்குஎன்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகளை கடைப்பிடிக்கவேண்டியிருக்குது. "கம்ப்யூட்டர் வைரஸ், ஜாக்கிரதை" அப்படீன்னு தலைப்பு வச்சிருந்தா எத்தனை பேர் வருவாங்க?
நீக்குஸாரி சார்! நெகடிவ் ஓட்டு போட்டுட்டேன்! தலைப்புக்காகத்தான் :))
நீக்குதப்பேயில்லை. பாசிடிவ் ஓட்டை வச்சுத்தான் என்ன பண்ணப்போறேன்?
நீக்குதங்களின் எச்சரிக்கைக்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குஅக்கா ஒரு உயிர் தங்கை ஒரு உயிர்; அதைப்பொருளாக எப்படிப்பார்ப்பது என்பதுதான் எனது கேள்வி. குப்பைத்தொட்டி வாங்கினால் குப்பை இலவசம் என்று பெயர் வைத்திருக்கலாம். மனிதர்கள்/மனுஷிகள் மகத்தானவர்கள் இல்லையா?
பதிலளிநீக்குஎத்தனயோ தொழில் நுட்பத்தை மெனக்கெட்டு கத்துகிட்ட நேரத்தில் லினக்ஸ் பத்தி பார்த்திருந்தா எந்த வைரசுக்கும் கவலைப் படத் தேவையே இல்லை. உபுண்டு லினக்ஸ் ரொம்ப எளிது, விண்டோஸ் மாதிரியே ஈசியா பயன்படுத்தலாம். நிறைய இணைய தளங்கள் வலைப்பூக்கள் எப்படி உபுண்டுவை இன்ஸ்டால் பண்ணுவது அப்படின்னு சொல்லிக் குடுக்குது. பயன்படுத்தி பயனடையலாம்.
பதிலளிநீக்கு//என்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகளை கடைப்பிடிக்கவேண்டியிருக்குது. "கம்ப்யூட்டர் வைரஸ், ஜாக்கிரதை" அப்படீன்னு தலைப்பு வச்சிருந்தா எத்தனை பேர் வருவாங்க?//
பதிலளிநீக்கு//தப்பேயில்லை. பாசிடிவ் ஓட்டை வச்சுத்தான் என்ன பண்ணப்போறேன்?//
????