வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெதர்லாந்தில் என் அனுபவம்.


நான் ஒரு முறை ஸ்வீடன் சென்றிருந்தேன். நெதர்லாந்தில் "வேகனிங்கன்" என்கிற ஊரில் சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஸ்வீடனில் உள்ள என் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னதற்கு அவர் "அதற்கென்ன, ஏற்பாடு செய்துவிடலாம்" என்றார்.

இரண்டு நாளில் பதில் வந்து விட்டது. மொத்தம் நான்கு நாட்கள் நெதர்லாந்தில் இருப்பதாக புரொக்ராம். இரண்டு நாள் வேகனிங்கனிலும் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமிலும் புரொக்ராம். எப்படி போகவேண்டும், எங்கு தங்கவேண்டும் என்கிற விவரங்களெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு ஒரு ஃபேக்ஸ் வந்தது.

நினைவுக்கு வந்த வரை அதை ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.

After alighting from flight at Schipol Airport, walk to the aerodrome Railway Station. Take ticket to Amersfort. Change train at Central. Get down at Amersfort, take Bus No.21 and come to Wageningen. From Bus Station, you can see International Student Centre where a room is reserved for you. Come to Soil Centre next day at 9 AM.

மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அந்த செய்தி இருந்தது. நான்கே வரிகள்தான். அதில் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இறங்கி ரயில் ஸடேஷன் போனேன். லக்கேஜை டிராலியில் வைத்துக்கொண்டு நடந்தே போய்விடலாம். அப்படி ரயில் ஸ்டேஷன் ஏர்போர்டை ஒட்டியே இருக்கிறது.

அந்த செய்தியில் சொன்ன மாதிரியே நான் போக வேண்டிய இடத்திற்குச் சென்று என் காரியத்தைக் கவனித்தேன்.

இதை எதற்காக இப்போது நினைவு கூர்ந்தேன் என்றால் வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. ஏரோப்ளேனில் இருந்து இறங்கியதிலிருந்து நான் தங்குமிடம் செல்லும் வரை யாரையும் வழி கேட்க வேண்டுய தேவையே ஏற்படவில்லை.16 கருத்துகள்:

 1. // இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. //

  உங்கள் நெதர்லாந்து அனுபவத்தை வைத்துக் கொண்டு நமது நாட்டில் வழி கேட்டு செல்ல முடியுமா? இங்கே வழிகாட்டும் அறிவிப்பு பலகைகளே இருக்காது. அப்படியே இருந்தாலும், அவற்றின்மீது போஸ்டர்களை ஒட்டி இருப்பார்கள். வழி சொல்லும் மனிதர் சரியாகச் சொல்வாரா என்று சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
 2. இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 3. ennum niraiya solverkal enru ethirparthen. மண் ஆராய்ச்சி நிலையம் matrum amterdam visit patri

  பதிலளிநீக்கு
 4. இதனால் தான் அவை வளர்ந்த நாடுகள், நாம் வளரத் திண்டாடும் நாடுகள்.

  பதிலளிநீக்கு
 5. சென்னைப் பதிவர் மீட்டுக்கு வழி யாரும் இப்படித் தெளிவாகச் சொல்லவில்லை என்று சொல்ல வருகிறீர்கள்! சரிதானே! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லீங்க, நீங்கதான் சொல்றீங்க.

   நீக்கு
  2. பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்ல விளக்கமான வழிகாட்டல் ஒன்று.

   http://www.seenuguru.com/2013/08/route-map.html

   நீக்கு
  3. இந்தப் பதிவை கொண்டு வருவதற்கு என்னென்ன ஜெகஜ்ஜால வேலையெல்லாம் செய்யவேண்டியிருக்குது பாருங்க.

   நீக்கு
 6. ஐயா!
  இங்குள்ள வசதிகள் நம் நாடுகளில் வர இன்னும் எத்தனை நூற்றாண்டோ? அப்போதும் இவர்கள் முந்தியே இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 7. வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும்
  இருக்கவேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்..!

  பதிலளிநீக்கு

 8. நெதர்லாண்டில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கலாமே என்று கருத்திட்டேனே. . காக்கா ஊச் என்று போய்விட்டதா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை மறந்து போனேன். தொடர் பதிவு ஒன்று போடுகிறேன்.இந்தப் பதிவு பதிவர் சந்திப்புக்கு தொடர்புடையதாகப் போய் விட்டது.

   நீக்கு
 9. மிக அருமையான பதிவு ஐயா.
  வெளிநாடு இந்த விடயங்களில் அருமை தான்
  என்பதை டென்மார்க்கிலிருந்து எழுதுகிறேன்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பயண அனுபவப் பகிர்வு ஐயா!

  உண்மை இங்கு வெளிநாட்டில் இது சாதாரணமே.
  அந்தந்த நாட்டு மொழி தெரியவில்லையே என்னும் கவலையே இருக்காது.

  அதைவிட இப்போது இன்னும் இன்னும் திறமையாக navigation - நவிகேஷன் வழிகாட்டி கைப்பேசியில்கூட வைத்திருப்பார்கள். எங்கு போகவேண்டுமென அதில் முகவரியை தட்டிவிட்டால் போதுமே. வாசலில் போய் நிற்கும்வரை வழிகாட்டி நிற்கும்!

  அருமையான பதிவு ஐயா! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு