ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் 1-9-2013 காலை ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறேன். என்னைப் போல் அன்று காலையில் பல பதிவர்கள் வரும் வாய்ப்பு இருக்கலாம்.

நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

இன்று நான் அதைப்பற்றி கனவு கூடக் காண முடியாது. தேவையுமில்லை. ஆனாலும் பணத்தைக் கணக்குப் பார்க்காமல் சில ஆயிரங்கள் செலவு செய்தால் அந்த சௌகரியம் இன்றும் கிடைக்கும். அப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

ஆகையினால் எனக்கு வேண்டியது இரண்டே இரண்டு செய்திகள்தான். இந்தச் செய்திகள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?

2. சென்னை சென்ட்ரலிலிருந்து வடபழனி வருவதற்கு டவுன் பஸ் நெம்பர் என்ன? (17ம் நெ. பஸ் என்று பழைய ஞாபகம்.)

சென்னைப் பதிவர்கள் யாராவது இந்த இரண்டு செய்திகளையும் கொடுத்தால் உதவியாயிருக்கும்.

நாங்கள் இங்கே ரூம் போட்டிருக்கிறோம், அங்கு வந்து விடவும் என்கிற மாதிரி விவரங்கள் வேண்டாம். நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் இருக்கிறது. காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

இந்த விவரங்கள் என் தைரியத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.

20 கருத்துகள்:

  1. நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

    நல்ல எண்ணம் ! அனாவசிய செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள் மதுமதிக்கோ இல்லாட்டி கணேஷ் அண்ணாவுக்கோ ஒரு கமெண்ட் போட்டு பாருங்க. இதற்கு விடை கிடைக்கும். பதிவர்களுக்கு எல்லவித உதவியும் செய்ய காத்திருக்கிறார்கள் பதிவர் சந்திப்பு ஒருங்கிணைப்பு குழு

    பதிலளிநீக்கு
  3. விவரம் சொன்னால் தங்களுக்கு மட்டுமின்றி வெளியூரில் இருந்து வரும் பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும்... கண்டிப்பாக நம் சென்னை நண்பர்கள் தெரிவிப்பார்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. // 1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?//


    நானும் அய்யாவின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    இந்த வசதியைப் பற்றி சொன்னால், எப்போது சென்னைக்கு வந்தாலும், யார் வீட்டிலும் தங்கித் தொந்தரவு தரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு என்றும் உபயோகமாக இருக்கும். எனவே சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு அருகில் இருப்பவைகளைப் பற்றி சொன்னால் நல்லது.

    பதிலளிநீக்கு
  5. ஐயா அவர்களின் ஞாபக சக்தி அளவிடற்கரியது.
    ரூட் 17 அனைத்து வண்டிகளும் (17, 17E......17M) ப்ராட்வேயில் ஆரம்பித்து வடபழனி / வட பழனி வழி செல்லும்.
    ஆனால் இந்த வயதில் சென்னை பஸ்ஸில் செல்ல வேண்டுமா என்று யோசனை செய்தால் நல்லது. முன்பு போல் கண்டக்டர்களும் சரி, பஸ்ஸில் செல்லும் ஜனங்களும் சரி வயதானவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கொடுப்பதில்லை. அவர்களை ஒரு தொந்திரவாகவே நினைக்கிறார்கள். அடிபட்டு , மிதிபட்டு, உடல் அவஸ்தை பட்டு பிறகு அதற்காக டாக்டருக்கு செய்யும் செலவுக்கு ஒரு ஆட்டோவில் சென்று விடலாம் (இப்போது மீட்டர் - நியாயமான - கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. கொஞ்ச காலத்திற்காவது இது பின்பற்றப்படும் என்று நம்புவோம்)
    எனவே பஸ்ஸில் செல்வது என்ற என்னத்தை மறு பரிசீலனை செய்யவும்.

    வெந்நீருடன் குளிக்க பாத்ரூம் கிடைக்கும் காலம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன். நான் 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் பின்னர் 50 ரூபாய் வரை இத்தகைய இடங்களை உபயோகித்திருக்கிறேன் .அந்த இடங்களையெல்லாம் இப்போது வாங்கி பெரிய பெரிய ஓட்டல்களாகவும் அபார்ட்மேன்ட்களாகவும் மாற்றஇ விட்டனர். இன்னும் இருக்கின்றன என்ற செய்தி கிடைத்தால் நானும் சந்தொஷபடுவேன்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. //நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.//

    நீங்கள் நிஜமாகவே ஒரு பாலன்ஸ்டு ஆள்தான்
    அரசு பணியில் இருந்து விட்டு அந்தப்பணி தரும் சொகுசுகள், விஐபியாக அனுபவித்த சுகங்கள் அனைத்தும் ரிடையர் ஆன உடனே காணாமல் போய் விடும். அந்த இழப்பை தாங்கி கொண்டு வாழ்பவர்கள் கொஞ்சம் பேர்தான். அதில் 75+ல் இருக்கும் நீங்கள், உங்கள் மேற்கண்ட வார்த்தைகள் மூலம் நிதர்சனத்தை முழுதுமாக உணர்ந்தவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

    பழைய சுகங்களை எதிர்பார்த்தால்தானே அவை இல்லை எனும்போது கவலை, அதனால் வரும் மனசோர்வு, உடல் உபாதைகள் இத்யாதி இத்யாதி என்பவை எல்லாம்.

    ஆனாலும் பஸ் பயணம் இந்த வயதில், அதுவும் சென்னையில், பீக் ஹவர்ஸில். வேண்டாமே. மறு பரிசீலனை செய்யுங்கள்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீக் ஹவர்சில் பஸ்சில் போவதற்கு ஒரு டெக்னிக் இருக்கிறது. நீங்கள் போகவேண்டிய டைரக்ஷனுக்கு ஆப்போசிட்டில் போகும் பஸ்சில் (சென்ட்ரலில் இருந்து பிராட்வே செல்லும் 17 சீரீஸ் பஸ்) ஏறி டெர்மினசுக்குப் போய்விடுங்கள். அங்கே நல்ல சௌகரியமான சீட்டைப் பிடித்து உட்கார்ந்து கொள்ளுங்கள். வடபழனி ஒரு முக்கியமான ஸ்டாப். ஆதலால் அநேகர் இறங்குவார்க்ள. நீங்களும் சுலபமாக இறங்கி விடலாம். எப்படி என் டெக்னிக்?

      நீக்கு
  7. //நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. ........ காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.//

    அதுதானய்யா அந்த காலத்து ஆட்களுக்கும் இப்பத்திய ஆட்களுக்கும் உள்ள வித்தியாசம். என்னவொரு நம்பிக்கை. யாருக்கும் சிரமம் கொடுக்க கூடாது என்ற நல்ல எண்ணம். விஐபியாக இல்லாததால் வசதிகளை எதிர்பார்த்து அவை இல்லை / தாமதம் ஆகிறது எனும்போது ஏற்படும் மன உளைச்சல்களை தவிர்க்க நீங்கள் எடுத்தது சரியான முடிவு.

    ரூட் 17 சரியான பஸ் நம்பர்தான். ஆனால் கூட்டம்! சமாளிக்க முடியாது. எனவே பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து வயதான ஐயா போன்றோர்களுக்கு பிக்அப் - டிராப், தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுப்பது நன்றாக இருக்கும். கவனியுங்களேன்.

    திருச்சி தாரு


    பதிலளிநீக்கு

  8. காலை ஒன்பது மணிக்கு டாண் என்று வந்து விடுவேன். THAT IS THE SPIRIT I LIKE. சென்னையில் நானிருந்தால் என் வீட்டுக்கே உங்களைக் கூட்டிப் போவேன்.

    பதிலளிநீக்கு
  9. //இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை//

    இப்படிப்பட்ட மனநிலை இன்றைய சமுதாயத்திடம் காணப்படுவதில்லை. சேமிப்பு, அனாவசிய செலவுகளை தவிர்த்து விடுதல் போன்றவையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். இன்றைய பொருளாதார சீரழிவுகளுக்கு காரணம் இத்தகைய மனோநிலை குறைந்து விட்டதுதான்.

    உதாரணத்திற்கு உங்களை மாதிரி 50 பதிவர்கள் கார் உபயோகிக்காமல் பஸ் பயணத்தை தேர்வு செய்தால் (மொத்தம் 200 பதிவர்கள் என்று வைத்துகொள்வோம்)

    தூரம் 200 கிமீ (சராசரியாக)
    கார் லிட்டருக்கு 14கிமீ (பெட்ரோல் கார்) கொடுத்தால் இதற்கு 14 லிட்டர் வேண்டும். 50 பேருக்கு 700 லிட்டர்.
    ஏறத்தாழ 50 ஆயிரம் ரூபாய். ஒருவருக்கு 1000 ரூபாய்

    ஒரு கோழி கணக்கு போடுவோம்
    தமிழ் நாட்டில் இருக்கும் மக்களில் 10% இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில்
    கலந்து கொள்வதாக வைத்து கொண்டால், 60 லக்ஷம் பேர். அதில் 25% பஸ் தேர்வு செய்தால் 15 லக்ஷம் பேர் காரை தவிர்கிறார்கள்.
    இது போன்று 25 மாநிலங்கள் - மொத்தம் 3.75 கோடி பேர்.

    ஒருவருக்கு 1000 ரூபாய் வீதம், 3.75 கோடி பேருக்கு 3750 கோடி ஆகிறதல்லவா. பெரிய தொகை இல்லையா? அவ்வளவும் அந்நிய செலாவணியில் மிச்சம் அல்லவா?

    இத்தகைய மனோபாவத்துடன் இளைய சமுதாயம் வளர்ந்தால் ஏழை மக்களை (அந்த 3750 கோடி ரூபாய் வைத்து கொண்டு)
    முன்னேற்ற உபயோகிக்கலாமே

    பைத்தியக்காரன் இவன் உளறுகிறான். வருடத்தில் ஒரு முறை இப்படிப்பட்ட பயணம். அதிலும் மண்ணை அள்ளி போடுகிறான் என்ற கமெண்டுகள் வரும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் சிறு துளி பேரு வெள்ளம் என்பது மேற்கண்ட கோழி கணக்கில் தெரிகிறதல்லவா

    யோசித்து பாருங்கள். நாம் கண்ட 3750 கோடி ரூபாயில் 100 கோடி மிச்சமானாலும் நல்லதுதானே.

    இந்த சிந்தனைக்கு வித்திட்ட ஐயா அவர்களுக்கு நன்றி

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  10. காலை 8 மணிக்கு முன்னாளல் புறப்பட்டால் - பஸ்ஸில் ஏறினால் - கூட்டம் இருக்காது.

    பதிலளிநீக்கு
  11. என்னுடைய அனுபவம் ஆட்டோவை விட கால் டாக்ஸி கட்டணம் குறைவாக இருகிறது..அதில் ஒரிரு பிரச்னை..முன் பதிவு செய்தால் மட்டுமே..கிடைக்கும்..
    போகும் பாதை தெரிந்து வைத்திருத்தல் நன்று..

    பதிலளிநீக்கு
  12. ஐயா வணக்கம், மேலே உள்ள ஆலோசனைகள் உங்களுக்கு தேவைப்படாது. நான் ஆரூர் மூனா செந்தில், பதிவர்கள் வரவேற்புக் குழுவில் ஒருவன். சென்ட்ரலில் இறங்கியதும் நேராக பேருந்து பிடித்து வடபழனி பேருந்து நிலையம் வந்து இறங்கி விடுங்கள். நான் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் இருப்பேன். நீங்கள் அழைத்தால் நான் பைக் எடுத்து வந்து உங்களை ரூமுக்கு அழைத்துப் போய் விடுகிறேன். நீங்கள் குளித்து ரெடியானதும் நானே அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் அரங்கிற்கு கொண்டு போய் விடுகிறேன். இதில் ஆலோசனைகள், தொந்தரவாக இருக்குமோ என்ற நினைப்பு வேண்டாம். வருபவர்களை எந்த சிரமமும் படுத்தாமல் அரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். வடபழனியில் வந்து இறங்கியதும் 8883072993 என்ற எனது எண்ணிற்கு அழையுங்கள். இதற்கு பதிவெல்லாம் போட்டிருக்க வேண்டாம். எவ்வளவோ பதிவுகளில் நீங்கள் அழைக்கவேண்டிய எண்ணையும் மெயில் ஐடிக்களையும் கொடுத்துள்ளோம். அதில் அழைத்திருந்தாலே எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, செந்தில் அவர்களே. நீங்கள் சொன்ன வழியை அப்படியே கடைப்பிடிக்கிறேன். காலை சுமார் 7 மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் வந்து விடுகிறேன். தங்கள் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  13. ஸ்ரீ ராம் சொல்வது சரியே,எட்டுமணிக்கு முன்னாள் சென்ட்ரலில் இருந்து இலக்கம் 17(அனைத்தும்)பஸ்ஸில் வடபழனி சென்றடையலாம். இருந்தாலும் நீங்கள் ஆட்டோவில் செல்வதே வசதியாக இருக்கும்.வெந்நீர் குளியல் வசதி உள்ள ஹோட்டல்கள் நிறைய உண்டு தான் ஆனால் பர்ஸ் பழுத்துவிடும். நண்பர் ஆரூர். முனா.செந்தில் நிச்சயம் இதுகுறித்து உதவுவார். நான் சென்னையில் இல்லை, இருந்திருதால் அன்று நீங்கள் ஒரு V.I.P.தான். நானே உங்களை வீட்டிற்கு அழைத்து வந்து பின்னர் விழாவுக்கு இருவருமே சென்றிருக்கலாம் தான். இருந்தாலும் சென்னை ஒன்றும் அவ்வளவு மோசமான ஊர் இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  14. I am not sure about the bus numbers-- But i am hoping to participate during the later part of the day on 1st sep 2013. Would feel really happy if I get to meet you there sir! I am also a bit disappointed that my father would not be able to attend it. He is a big fan of your blog... Your practical approach is what he likes the most about your blog. he has specifically instructed me to participate in the bloggers meet- meet you and convey his regards to you!

    பதிலளிநீக்கு