செவ்வாய், 31 டிசம்பர், 2013

சொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை


சொட்டு நீர்ப்பாசனத்தின் வரலாறு மிகப் பழமையானது. பழங்கால சீனாவில் செடிகளுக்குப் பக்கத்தில் மண் பானைகளைப் புதைத்து அவைகளில் நீர் நிரப்பிவிட்டால் அந்த நீர் மண்பானையின் நுண்ணிய துவாரங்களின் வழியே கசிந்து செடிகளின் வேர்களுக்கு கிடைக்கும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சிம்ச்சா பிளாஸ் என்று ஒரு ஹைடேராலிக் இன்ஜினீயர். இவர் இஸ்ரேலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு விவசாயி அவரிடம் ஒரு அனுபவத்தைக் கூறினார். என் வீட்டில் ஒரு ஆலிவ் மரம் இருக்கிறது. அதற்கு நான் தண்ணீர் விடுவதே இல்லை. ஆனால் அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த விவசாயி கூறினார்.

சிம்ச்சா பிளாஸ் இந்த மரத்தை நேரில் சென்று பார்த்தார். முதலில் அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அந்த மரத்தின் வேர்ப்பாகத்தில் தோண்டச்சொன்னார். சிறிது தோண்டியதும் அங்கே ஒரு தண்ணீர் பைப் பதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அது அந்த விவசாயியின் வீட்டிற்கு தண்ணீர் வரும் பைப். அந்த பைப்பில் அந்த மரத்தின் வேர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜாய்ன்ட் இருந்தது. அந்த ஜாய்ன்டில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இதுவே அந்த மரம் செழித்து வளரக் காரணம் என்று சிம்ச்சா உணர்ந்தார்.

சாதாரணமாக எல்லோரும் இந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு நூறோடு நூற்றியொன்று என்று அதை மறந்து விடுவார்கள். ஆனால் சிம்ச்சா பிளாஸ் ஒரு தனிவிதமான மனிதர். இந்த அனுபவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சில உண்மைகள் புலப்பட்டன. அதாவது தாவரங்களின் வேர்ப்பகுதியில் நீர் இருந்தால் அவை அதிகமாக வளர்கின்றன. தவிர குறைந்த நீர் இருந்தாலுமே அவை நன்கு வளரப் போதுமானது. இதனால் விவசாயத்திற்கு வேண்டிய நீரின் தேவை மிகக் குறையும்.

இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு இதை வணிக ரீதியாக மக்களிடையே பரப்பினால் நல்ல காசு பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வேலையை ராஜீனாமா செய்தார். தன் மகனுடன் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பித்தார். இந்த முறைக்கு சொட்டு நீர்ப் பாசனம் என்று பெயர் சூட்டினார். ஆரம்ப கட்ட சிரமங்களுக்குப் பிறகு இந்த நீர்ப்பாசன முறைக்கு ஆதரவு பெருகியது.

இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் நாட்டின் நீர்ப் பற்றாக்குறை. இஸ்ரேல் அடிப்படையில் ஒரு பாலைவனம். வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் இருந்துதான் அந்த நாட்டிற்குத் தேவையான நீர் முழுவதையும் கொண்டு வருகிறார்கள். அங்கு நீர் ஒரு மதிப்பு மிக்க பொருள். ஆகவே அதை சிக்கனமாகவும் அதிக பயனுள்ளதாகவும் பயன்படுத்த ஒரு வழி கிடைத்தவுடன் அதை எல்லோரும் வரவேற்றார்கள். நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த இஸ்ரேல் அரசே இந்த முறையைக் கட்டாயமாக்கியது.

இஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசன முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. நீர் பகிர்மானம் அரசிடம் இருந்ததால் இந்த உத்திரவு சாத்தியமாயிற்று. இதன்படி விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் விவசாயி, தன் நிலத்தில் செட்டு நீர்ப்பாசனக் கருவிகளை நிர்மாணம் செய்துவிட்டு பின்பு தண்ணீர் கோட்டவிற்கு விண்ணப்பிக்கவேண்டும். அரசு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பின்பு தண்ணீர் கனெக்ஷனெ கொடுப்பார்கள்.

ஏறக்குறைய நம் ஊரில் கரண்ட் கனெக்ஷன் வாங்குவது போலத்தான். எல்லா வயரிங்க் வேலைகளையும் முடித்தபிறகு கரன்ட் கனெக்ஷன் வாங்குகிறோமில்லையா? அதே போல்தான் அங்கு தண்ணீர் கனெக்ஷன் வாங்குவதும். எப்படி நம் ஊரில் கரென்டுக்கு மீட்டர் வைத்திருக்கிறோமோ அதே போல் அங்கு தண்ணீருக்கும் மீட்டர் வைத்திருக்கிறார்கள். தண்ணீர் எவ்வளவு உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு பணம் கட்டவேண்டும்.

என்னைக் கூட்டிக்கொண்டு சொல்லும் உள்ளூர் விஞ்ஞானி காலையில் எட்டு மணிக்கே வந்து விட்டார். அவர் வேலை செய்யும் ஆராய்ச்சி நிறுவனம் கற்றும் விவசாய பூமிகள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்தார். நிறைய பேரீச்சமரங்களும் ஆலிவ் மரங்களும் பயிரிட்டிருக்கிறார்கள். இதைத்தவிர திராக்ஷை, மிளகாய், தர்ப்பூசனி, மக்காச்சோளம், தக்காளி ஆகிய பயிர்களைப் பார்த்தேன்.

அனைத்து பயிர்களும் சொட்டு நீர்ப் பாசனத்தில்தான் பயிரிடப்பட்டிருந்தன. நிலத்தின் மேற்பரப்பில் எங்கும் ஈரப்பசையைக் காண முடியவில்லை. ஆனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. சொட்டு நீரின் கூடவே பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் சேர்த்து அனுப்புகிறார்கள். களைகள் மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாவற்றையும் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கொண்டேன்.

அப்போதுதான் நம் நாட்டில் சொட்டு நீர்ப்பாசன முறை பரவிக் கொண்டிருந்தது. உலகத்திலேயே இஸ்ரேல் நாடுதான் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு நான் இஸ்ரேல் சென்ற நோக்கம் நிறைவேறியது.

அடுத்த நாள் இஸ்ரேலை விட்டு புறப்பட்டேன். தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அங்குதான் அனுபவித்தேன். எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

16 கருத்துகள்:

  1. எங்கும் இந்த நீர்ப் பாசன முறை இருந்தால் நன்றாக இருக்கும்...!

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு நம்பிக்கை இருந்தால் செய்துகொண்டிருக்கும் வேலையை உதறிவிட்டு இந்த வேளையில் குதித்திருப்பார் அந்த எஞ்சினியர்... தனித்துவங்கள் இவற்றில்தான் வெளிப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  3. //சாதாரணமாக எல்லோரும் இந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு நூறோடு நூற்றியொன்று என்று அதை கறந்து விடுவார்கள். ஆனால் சிம்ச்சா பிளாஸ் ஒரு தனிவிதமான மனிதர். இந்த அனுபவத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்.//

    Thinking out of box என்பார்களே அதுதான் இதோ, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சொட்டு நீர்ப் பாசனம் உருவான கதை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி. முக்கால்வாசி கண்டுபிடிப்புக்கள் இதுபோல் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. (எடுத்துக்காட்டு: பெனிசிலின்)

    பதிலளிநீக்கு
  5. இஸ்ரேல் நாடுதான் சொட்டு நார்ப் பாசனத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு நான் இஸ்ரேல் சென்ற நோக்கம் நிறைவேறியது.

    பயனுள்ள அனுபவ பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. சொட்டுநீர்ப் பாசனம் உருவான கதையை நிதானமாக தேன் துளி விழுவது போல் சொட்டு சொட்டாக சுவையாகச் சொன்னதற்கு நன்றி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. ரசித்துப் படித்துத் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. All the articles are very interesting and highly informative. Still more details can be added and the articles
    can be more eloberate.

    Namakkal Venkatachalam

    பதிலளிநீக்கு
  9. சொட்டு நீர் பாசனம் பற்றிய தகவல்கள் நன்று.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான விரிவான பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  11. சொட்டு நீர் பாசனம் அருமை....இங்கு கொட்டு கொட்டு என கொட்டுகின்ற தண்ணீரை வீண்டித்து, கொட்டு நீர் பாசனம் செய்து கொண்டிருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  12. விக்கிபீடியாவில் சென்று பார்த்தால் சொட்டு நீர் பாசனத்தின் தந்தை என்று வேறு ஒருவரை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கும் மேலே போய் அவருக்கு "2012இன் உலக உணவு பரிசு" என்று ஒரு அவார்டு தந்திருக்கிறார்கள்.
    சொட்டு நீர் பாசனம் ஆராய்ந்தவர் சிம்ச்சா பிளாஸ் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்
    டேனியல் ஹில்லேல் என்று விக்கிபீடியா சொல்கிறது
    ஒரு வேளை சிம்ச்சா பிளாஸ் கண்டுபிடிப்பை டேனியல் விரிவாக உபயோகப்படுத்தினாரா அல்லது அது வேறு இது வேறா?
    அய்யா அவர்கள் இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்

    சேலம் குரு


    Father of drip irrigation wins World Food Prize
    By Larry Dreiling


    PRIZE WINNER—Daniel Hillell, Ph.D., presents his laureate address following his reception of the 2012 World Food Prize recently at Des Moines, Iowa. Hillel, an Israeli scientist, received the prize for his role in conceiving and implementing drip irrigation, a radically new mode at the time of bringing water to crops in arid and dryland regions. His work laid the foundation for maximizing efficient water usage in agriculture, increasing crop yields, and minimizing environmental degradation. (Photo courtesy of the World Food Prize.)
    An Israeli scientist who many consider the father of drip irrigation for crops in arid and dryland regions of the globe received the 2012 World Food Prize in a ceremony at the Iowa State Capitol recently.

    "This year we honor Dr. Daniel Hillel for his pioneering work in the Middle East that revolutionized food production in that region and around the world," Ambassador Kenneth Quinn, president of the World Food Prize Foundation, said. "Dr. Hillel laid the foundation for maximizing efficient water usage in agriculture through a method known as micro-irrigation, which has impacted millions of lives."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிம்ச்சா பிளாஸ் பற்றி விக்கிபீடியாவில் கொடுத்துள்ள விபரங்கள்.

      Simcha Blass

      In the early 1930s, a farmer drew his attention to a big tree, growing in his backyard "without water". After digging below the apparently dry surface, Simcha Blass discovered why: water from a leaking coupling was causing a small wet area on the surface, while an expanding onion shaped area of underground water was reaching the roots of this particular tree—and not the others. This sight of tiny drops penetrating the soil causing the growth of a giant tree provided the catalyst for Blass's invention.[4] The drip irrigation concept was born and experiments that followed led Blass to create an irrigation device that used friction and water pressure loss to leak drops of water at regular intervals. Recognizing the high potential of his discovery, he began to look for ways to turn his idea into a product.
      In the late 1950s, with the advent of modern plastics during and after World War II, he took a major step towards implementing his idea. After leaving government service in 1956 he reopened his private Engineering office and worked with his son Yeshayahu on the drip irrigation idea. The main aspect of the new invention was to release water through larger and longer passageways (rather than tiny holes) by using friction to slow water inside a plastic emitter. Larger passageways prevented the blocking of tiny holes by very small particles. The first experimental system of this type was established in 1959. In the early 1960s, Blass developed and patented this method and the new dripper was the first practical surface drip irrigation emitter.
      During the years 1960 to 1965 Blass developed the of drip-irrigation systems and sold them inside Israel and abroad. In 1965 he contacted Arie Bahir who was in charge of the industry in the kibbutzim in order to find a kibbutz to give him the task of further developing this new enterprise.

      The "Online" Dripper and Kibbutz Hatzerim[edit]

      For the desert-based Kibbutz Hatzerim looking to expand its activities beyond agriculture, Simcha Blass's invention opened up a world of possibilities. Blass and his son Yeshayahu and Kibbutz Hatzerim signed a contract (in August 10, 1965) establishing Netafim Irrigation Company (80% Kibbutz Hatzerim and 20% Blass).[6] Production began in 1966. With Blass's original narrow spaghetti tube model and later models as the starting point, Netafim engineers working with Blass, developed the online dripper—indeed allowing the desert to bloom.

      சேலம் குரு,

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. டேனியல் ஹில்லல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்தான் சொட்டு நீர்ப்பாசனத்தின் தந்தை என்பது பற்றிய செய்தி புதிதாக கேள்விப்படுகிறேன். நான் கேள்விப்பட்ட வரையில் சிம்சா பிளாஸ்தான் சொட்டு நீர்ப்பாசனம் கண்டு பிடித்தார் என்று பல காலமாக நம்பி வருகிறேன். எந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் வேண்டும். இன்னும் கொஞ்சம் படித்து விட்டு இதைப் பற்றி ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

      நீக்கு
  13. சொட்டுநீர் பாசன வரலாற்றை தமிழில் முதல் முறையாக இப்போதுதான் படிக்கிறேன். நிறைய புது விசயங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தபதிவை இவ்வளவு நாள் பார்க்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனுபவத்தை அழகாக பதிந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    http://lottunorain.blogspot.in/2014/03/blog-post.html

    பதிலளிநீக்கு