திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டில் இன்பமாக வாழ்வோம்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிறந்தாலே கூடவே புத்தாண்டு சபதங்களும் வந்து விடும். சபதங்களை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அவை நம் மனதின் ஆசைகளை வெளிப்படுத்தும் எண்ணங்களாகும். கடந்த கால வாழ்க்கையில் நாம் தவறென்று கருதுபவைகளை மாற்ற விரும்பும் நம் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும்.

நாம் மாறவேண்டும் என்று நினைப்பதே நாம் முன்னேறுவதற்கான முதல் படி. இந்த முயற்சிகளில் நாம் இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். நான் என் அனுபவத்தால் உணர்ந்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.

எல்லோரும் புத்தாண்டில் கடனற்ற இன்ப வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

22 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. ஜய வருட - இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. அய்யா அவர்களூக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நன்றிகள்.

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  6. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு அறிவுரை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  8. ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.//
    அருமையான கருத்து.
    புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  10. நல்ல அறிவுரை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஐயா!

    பதிலளிநீக்கு
  11. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். கடன் இல்லாமல் கால் வயிறு கஞ்சி குடித்தால் போதுமானது என்பார் சமீபத்தில் மறைந்த எனது தந்தையார். இந்த புத்தாண்டு தினத்தில் அவர் என்னுடன் பேசியது போலே இருந்தது இந்த கட்டுரையை படிக்கும் போது.

    பதிலளிநீக்கு
  12. அய்யா அவர்களுக்கும் மற்றும் சுவாமியின் மன அலைகள் பின்னூட்டமிடும் அன்பர்களுக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    ஜெய வருடம் அனைவருக்கும் ஜெயந்களை வாரி வழங்கட்டும்.
    இந்த வருடம் நல்ல மழை உண்டென்று பஞ்சாங்கங்கள் சொல்கின்றன.
    வறண்டு கிடக்கும் விலை நிலங்களும் காய்ந்து கிடக்கும் நீர் நிலைகளும் நிறையட்டும்.
    வளம் செழிக்கட்டும்.
    நலம் உண்டாகட்டும்.
    கூடவே வறண்டு கிடக்கும் மனித மனங்களும் மாறட்டும்.
    எல்லாம் வல்ல ஆண்டவன் அனைத்தையும் அருளட்டும்

    இறைவனிடம் வேண்டுதலுடன்
    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் சொல்வது இந்த கந்து வட்டி மாதிரியான சமாச்சாரங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    வீடு கட்ட லோன் வாங்குவது நல்லதே. கட்டும் வட்டிக்கு வருமான வரி கழிவு கிடைக்கும். ஆனால் நீண்ட நாட்கள் இழுக்காமல் கையில் பணம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக லோனை காடிகொண்டே இருக்க வேண்டும். லோன் வாங்குவதும் நல்ல வங்கியாக பார்த்து வாங்க வேண்டும். வாடகை மிச்சம். வருமானவரி கழிவு மிச்சம். ஒரு சிறிய அமௌண்டில் சில வருடங்களில் வீடு உங்களுக்கு வந்து விடும்.
    இதைத்தவிர பிரியா அளவில் பிசினஸ் செய்யும்போது OPM முறைதான் சிறந்தது என்று மேனேஜ்மென்ட் புத்தகங்கள் சொல்கின்றன. OPM என்றால் Other People Money என்று அர்த்தமாம்.

    எனவே கடன் என்பது எப்பொழுதும் பயப்படவேண்டிய ஒன்று அல்ல.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதெல்லாம் "எதையும் பிளான் பண்ணி பண்றவங்களுக்கு" தான் ஒத்து வரும்.
      கம்பரே கூட "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினானே இலனகி வேந்தன்" என்று சொல்ல வில்லையா?
      ஒரு தடவை கடன் வாங்கி சுவை கண்டு விட்டால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கத்தான் தோன்றுமே ஒழிய கையில் காசு சேர சேர அடைக்கத்தோன்றாது இது அனுபவ உண்மை.

      சேலம் குருப்ரியா .

      நீக்கு
    2. ஆனால் இந்த நிலையில் ஒருவனுக்கு மன நிம்மதி கிடைப்பதில்லை என்பதையும் யோசிக்கவேண்டும்.

      நீக்கு
    3. வியாபாரத்தில், வீடு கட்ட என்று கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். ஆனால் அதை திருப்பிக்கட்ட வழி வகைகளை யோசித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆயுள் குழுக்க கடனில்தான் இருப்பேன் என்றால் அதி அவரவர்கள் மனப்பாங்கு.

      நீக்கு
  14. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  15. கடனற்ற புத்தாண்டு.....

    நல்ல கருத்து.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு