நான் மாதம் 50 GB அளவிற்கு இன்டெர்நெட்டை உபயோகித்ததை கண்டுபிடித்து பிஎஸ்என்எல்- லுக்கு யாரோ வத்தி வைத்ததில் அவன் என்னுடைய இரவு நேர இலவச டவுன்லோடைப் பிடுங்கிக்கொண்டான். நானும் ஒருவாறு சமாதானமடைந்து, வேறு ஒரு கழுதையைக் கட்டின விவகாரத்தை போன பதிவில் பார்த்தோம்.
அந்த கோள் சொன்ன மகராசன் அத்தோடு நிறுத்தினானா, கூகுள்காரனிடம் போய் இப்படி ஒரு ஆள் யூட்யூப்பிலிருந்து மாசம் 50 GB இலவசமா டவுன்லோடு செஞ்சிட்டிருக்கானே, உங்கள் கம்பெனிக்கு எப்படி காசு வரும் என்று போட்டுக்கொடுத்து விட்டான் போல் இருக்கிறது. கூகுள்காரனுக்கு சொல்லவா வேண்டும்? யூட்யூபிற்கும் வைத்தான் ஆப்பு. இரண்டு நாட்களாக யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய முடிவதில்லை.
Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதை வைத்து யூட்யூபில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான விடியோக்களில் எதை வேண்டுமானாலும் டவுன்லோடு பண்ணி நம் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக்கொண்டு, நமக்கு சௌகரியமானபொழுது பார்த்து ரசிக்கலாம். இதை உபயோகப்படுத்தித்தான் நான் இசை, சினிமா, ஆன்மீகம், சுற்றுலா, சமையல் சம்பந்தப்பட்ட பல விடியோக்களை டவுன்லோடு செய்து வந்தேன். இப்போது இந்த புரொக்ராம் யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது.
இந்த யூட்யூப் கம்பெனி வேறு ஒருவர் கையில் இருந்தவரைக்கும் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது இந்த யூட்யூப் கம்பெனியையும் கூகுள்காரன் வாங்கி விட்டான் என்று சொல்கிறார்கள். வாங்கினவன் பழைய மாதிரி கம்பெனியை நடத்தவேண்டியதுதானே? என்னைப்போன்ற இளிச்சவாயன்கள் தலையில் கை வைப்பானேன்? அவன்தான் (அவன் நாசமாய்த்தான் போவான்) இப்போது எந்த டவுட்லோடரையும் உபயோகித்து யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய விடாமல் பண்ணி விட்டான்.
என்ன அக்கிரமம் பாருங்கள்? இந்த யூட்யூப்பில் இருக்கும் விடியோக்கள் பெரும்பாலானவை நம்மைப் போன்ற சாதாரண ஜனங்கள் எடுத்து யூட்யூபில் சேர்த்தவை. இந்த கூகுள்காரன் பெரிய திமிங்கலம். நம்மைப் போன்ற சாதாரண பொதுஜனம் இந்த திமிங்கலத்தோடு மோத முடியுமா?
உலகத்தில் கலி முத்தித்தான் போச்சு. நல்லவங்களுக்கு காலமில்லை. தனி மனித சுதந்திரம் எப்படியெல்லாம் பறி போகிறது, பாருங்கள்.
முன்பு நானும் யூ டியூபிலிருந்து டவுன் லோடிக் கொண்டிருந்தேன். சமீப காலங்களில் டவுன்லோட் செய்கிறோமே தவிர கேட்க நேரம் இருப்பதில்லை என்ற ஞானோதயம் வந்து டவுன்லோடுவதை நிறுத்தி விட்டேன். எனவே இது பற்றி நான் அறிந்ததிருக்கவில்லை!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது மிகவும் சரிதான். நான் ஏதோ பிஎஸென்எல்காரன் இன்டர்நெட் சும்மா கொடுக்கிறானே என்று ஏகப்பட்டதை டவுன்லோடு செய்து வைத்திருக்கிறேன். எப்போது அவைகளைப் பார்த்து முடிப்பேன் என்று தெரியவில்லை. பூதம் காத்த புதையல்தான்.
நீக்குஎன்ன கொடுமை சார் இது...? ஹா... ஹா...
பதிலளிநீக்குநான் YouTube இல் பதிவிறக்கம் செய்வதில்லை. அப்படியே பார்த்துவிடுவேன். அதனால் எனக்கு இந்த கஷ்டம் தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் சொன்னதுபோல் கலி முத்தித்தான் போய்விட்டது!
பதிலளிநீக்குசில நாட்களாக கூகிள் க்ரோம் பயன்படுத்துபவர்கள் மட்டுமே youtube பார்க்க முடிகிறது. Firefox பயன்படுத்துபவர்கள் பார்க்க முடிவதில்லை.
பதிலளிநீக்குநம்மிடமிருந்து எப்படியும் பணம் பெறுவது என்று நினைத்து விட்டார்கள் போலும்...
அய்யா! எனக்கும் பிரச்சினை அஃதே! MOZILLA FIREFOX – BROWSER வைத்து இருக்கிறேன். BSNL BROADBAND – இண்டர்நெட் இணைப்பு வைத்து இருக்கிறோம். இதன் வழியே YOUTUBE டவுன்லோடு செய்ய முடிவதில்லை. நானும் MOZILLA FIREFOX சொன்ன உதவியின்படி அனைத்து வழி முறைகளையும் கையாண்டு கை வலித்ததுதான் மிச்சம்.
பதிலளிநீக்குமேலும் மகனுக்காக வேண்டியும் அவசரத்திற்காகவும் TATA DOCOMO PREPAID CARD – இணைப்பும் வைத்துள்ளோம். இதன் மூலம் MOZILLA FIREFOX – BROWSER இல் YOUTUBE டவுன்லோட் ஆகிறது. என்ன கணக்கு என்று புரியவில்லை. ஆனாலும் TATA நம்மைப் போன்றவர்களுக்கு கட்டுப்படி ஆகாது.
சென்ற மாதம், கூகிளில் ப்ளாக்கர்கள் அனைவரது DASHBOARD இலும் பிரச்சினை வந்து தானாகவே சரியானது.. அதுபோலவே இந்த பிரச்சினையும் தானாகவே சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். GOOGLE இல் ஏதோ மாறுதல்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். வலைப் பதிவில் உள்ளவர்கள் அனைவரும், ஒருநாள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்.
நல்ல காலம் வரும்னுதான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பார்க்கலாம், அது எப்போது வருதுன்னு.
நீக்குHow to download youtubevideos without any software?
பதிலளிநீக்குhttp://nathantweaks.blogspot.in/2014/06/how-to-download-youtube-vidoes-without.html
சோதித்து விடுகிறேன்.
நீக்குசரியாக வரவில்லை.
நீக்குhttp://www.clipconverter.cc/
பதிலளிநீக்குPl try this
http://keepvid.com/ use this site to download youtube videos
பதிலளிநீக்குஎன்னிடத்தில் லினக்ஸ், விண்டோஸ் இரண்டிலுமே Firefox உள்ளது, Youtube வருகிறது டவுன்லோடு ஆகிறதே??!!
பதிலளிநீக்குநான் டவுன்லோடுசெய்வதெப்படி என்பதை பதிவிட்டிருக்கிறேன். பாருங்கள். [.flv வடிவில் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள், .avi க்கு மாற்றுவதெப்படி என்பதை நீங்கள் விட்டுவிடலாம், கணிணியிலேயே பார்ப்பதால் தேவையிருக்காது!!
http://jayadevdas.blogspot.com/2013/02/download.html
சோதனைகள்வந்தால்தான் சாதனைகளும் வரும். :)) முயற்சிசெய்யுங்கள்.
பதிலளிநீக்குஐயா!
பதிலளிநீக்குநான் தமிமணத்திலேயே யாரோ கூறி, அந்தத் தொடுப்பின் youtube உள்ள y க்கு முன் ss என சேர்த்து enter ஆக்கும் போது ஒரு புதிய தளம் வந்து பதிவு செய்ய முடிந்தது. கடைசியாக 3 வாரத்துக்கு முதலும் செய்தேன்.
உ+ம்= https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-ld8mQ8_qgs ஐ
https://www.ssyoutube.com/watch?feature=player_detailpage&v=-ld8mQ8_qgs ஆக மாற்றி முயலவும்.
இதுவும் சரியாக வரவில்லை, ஐயா.
நீக்குஐயா தங்கள் பிரச்சினைக்கு கூகிள் மட்டும் காரணம் அல்ல நம்ம அரசும் தான், சமீபத்தில் 500க்கும் மேற்பட்ட தளங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன அது தொடர்பான செய்தியை இங்கே படிக்கலாம். http://telecomtalk.info/has-dot-blocked-file-hosting-and-torrent-websites-in-india/119453/
பதிலளிநீக்குஆனால் DNS setting மாற்றினால் போதும் இத்தளங்களை நாம் பார்வையிட முடியும்.
பார்வையிடுவது இப்போதும் முடிகிறது. நான் சில விடியோக்களை டவுன்லோடு செய்ய முயற்சிக்கிறேன். அது முடியவில்லை.
நீக்குDNS setting ஐ துணிந்து மாற்றினேன். இப்போது எல்லா தளங்களையும் பார்வையிடவும் டவுன்லோடு செய்யவும் முடிகிறது. நன்றி.
நீக்குAnd download from youtube, you can use IDM latest version.
பதிலளிநீக்குமுயற்சித்தேன். வெற்றி கிட்டவில்லை.
நீக்கு//டவுன்லோட் செய்கிறோமே தவிர கேட்க நேரம் இருப்பதில்லை என்ற ஞானோதயம் வந்து டவுன்லோடுவதை நிறுத்தி விட்டேன்.//
பதிலளிநீக்கு- ஸ்ரீராம்.
//பூதம் காத்த புதையல்தான்.//
- Dr. Palani Kandasamy Sir
எல்லாமே ஆசை 60 நாள் ...... மோகம் 30 நாள் ....... கதை தான். ;)))))
Sir, What was the error you are getting when you tried with "ss"
பதிலளிநீக்குPlease let me know. I have been using this for long time without any issues.
The error message was: Sorry, there is some unexpected error, please try after sometime.
நீக்குஇப்போது YOUTUBE சரியாகிவிட்டது!
பதிலளிநீக்கு