புதன், 9 ஜூலை, 2014

வெற்றி, வெற்றி, வெற்றி நமதே


பி எஸ் என் எல் மற்றும் கூகுள் இருவரும் என் வாழ்வில் ஏற்படுத்திய குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சென்ற பதிவுகளில் பார்த்தோம். எனக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் அது ஒரு வண்டு ரூபம் எடுத்து என் மண்டைக்குள் புகுந்து விடும். அந்த பிரச்சினையைத் தீர்க்கும் வரையிலும் அது அங்கே உட்கார்ந்து மூளையைக் குடைந்து கொண்டே இருக்கும். பசி, தாகம் எடுக்காது. தூக்கம் வராது. பித்துப் பிடித்தவன் போல் வீட்டிற்குள் உலா வருவேன்.

இந்த குணம் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இப்பொழுதும் இந்த யூட்யூப் டவுன்லோடு பிரச்சினை என் மண்டைக்குள் புகுந்து குடைந்து கொண்டே இருந்தது. பல இடங்களில் தேடியதில் பலவிதமான தீர்வுகள் சொல்லப்பட்டன. ஆனால் அவைகளில் எதுவும் வெற்றி பெறவில்லை.

கடைசியாக கூகுளாண்டவரிடமே வேண்டியதில் ஒரு வழி காட்டினார். அதாவது இன்டர்நெட் செட்டிங்கில் சென்று DNS Server எண்களை மாற்றச் சொன்னார். இது ஒரு சிக்கலான வழி. தீர்வு ஏற்பட்டாலும் ஏற்படலாம் அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலும் போகலாம். அப்படி முடங்கினால் அதை சரி செய்ய. முன் அனுபவம் இருக்கிறதே.

ஆகவே துணிந்து செயலில் இறங்கினேன். இது ஒரு பை-பாஸ் சர்ஜரி மாதிரி. திட மனதுடன் ஆபரேஷனை செய்து முடித்தேன். எல்லாவற்றையும் க்ளோஸ் செய்து திரும்பவும் ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் உயிருடன் இருந்தது. அது மட்டுமா, முன்பு செயல்படாமல் இருந்த யூட்யூப் டவுன்லோடர் செயல்பட்டது. பயர்பாக்ஸ் பிரவுசரில் யூட்யூப் விடியோக்கள் தெரிய ஆரம்பித்தன. அவைகளை அங்கிருந்தே டவுன்லோடு செய்யவும் முடிகிறது.

அப்பாடா என்று சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனால் பி எஸ் என் எல் காரன் புண்ணியத்தினால் இன்டர்நெட் வேகம் குறைந்து போனதால் டவுன்லோடு மிகவும் மெதுவாகத்தான் செயல்படுகிறது. ஒரு பக்கம் சந்தோஷம் வந்தால் இன்னொரு பக்கம் துக்கம் வருகிறது. இதுதான் வாழ்க்கை என்று திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

16 கருத்துகள்:

  1. "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்... நான்... நான்..." என்று பாடும் சத்தம் கேட்டதே.... நீங்கள்தானா ? :)))

    பதிலளிநீக்கு
  2. வேகம் இல்லைன்னா வாழ்க்கை வெறுத்து போகுமே அய்யா ,எப்படி சமாளிக்கப் போறீங்க ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. //ஒரு பக்கம் சந்தோஷம் வந்தால் இன்னொரு பக்கம் துக்கம் வருகிறது. இதுதான் வாழ்க்கை என்று திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.//

    அதே அதே ... சபாபதே !

    ஏதேதோ துணிந்து செய்து தாங்கள் வெற்றி பெற்றதற்கு என் அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர்!

    பதிலளிநீக்கு
  5. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஒன்றை இழந்தே ஒன்றை பெற வேண்டியிருக்கிறது அல்லவா?

    பதிலளிநீக்கு
  7. அப்பாடா...! எப்படியோ திருப்தி ஏற்பட்டு விட்டது... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. அறுவைச் சிகிச்சை சிறப்பாக... வெற்றிகரமாக முடிந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
    பி.எஸ்.என்.எல்லின் ஆமை வேகம் ரொம்பச் சோதிக்குமே ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்லிமிடட் தானே, டவுன்லோடை செட் செய்துவிட்டு தூங்கப்போனால், எழுந்திருக்கும்போது டவுன்லோடு முடிந்திருக்கும் அல்லவா? என்ன கொஞ்சம் கரன்ட் சார்ஜ் கூட ஆகும்.

      நீக்கு
    2. ஹா... ஹா... இப்போ கரண்ட் சார்ஜ்தானேய்யா அதிகமாப் போகுது...

      நீக்கு
  9. அடேயப்பா இதற்கு இத்தனை முயற்சியா? நானெல்லாம் யூட்யூப் படங்களை ஆன்லைனில் பார்ப்பதோடு சரி, டவுன்லோடெல்லாம் செய்வதில்லை. ஆனாலும் உங்களுக்கு பிடிவாதம் ஜாஸ்திதான். முயற்சி செய்து வெற்றி கண்டதில் மகிழ்ச்சியே.... நீங்கள் ஏன் BSNLஐ தலைமுழுகக் கூடாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைபிள் வாக்கியம் உங்களுக்கு நன்கு பரிச்சயமானதுதானே - "தெரியாத தேவதையை விட தெரிஞ்ச சைத்தானே மேல்." எல்லா பசங்களும் ஏமாத்துக்காரன்கள்தான்.

      நீக்கு