புதன், 13 ஏப்ரல், 2016

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

                          Image result for ராஜஸ்ரீ

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ. 15 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை.


இன்றைய தினத்தந்தி செய்தி.

பேங்க் லாக்கரிலிருந்து இந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் வைத்து காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு நபர் வந்து காருக்குப் பக்கத்தில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையதுதானா என்று கேட்டிருக்கிறார்.

ராஜஸ்ரீ காரை விட்டு இறங்கி அந்த நோட்டுகளை ராஜஸ்ரீ குனிந்து எடுத்துக்கொண்டிருந்தபோது காரில் இருந்த கைப்பையை அந்த நபர் எடுத்துக்கொண்டு மறைந்து விட்டார்.

இந்த மாதிரி திருடும் டெக்னிக் எனக்குத் தெரிந்து 50-60 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருட்டுகள் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது.

ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை?

20 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா அதுவும் பல லட்சங்கள் சம்பாதித்த நடிகையே 10 ரூபாய்க்கு மயங்கும் பொழுது சாமானியர்கள் என்ன செய்ய மாட்டார்கள் ?
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. கில்லர்ஜி சொல்லியது தான் எனக்கும் தோன்றியது ஐயா

    பதிலளிநீக்கு
  3. ரொம்பப் பழைய டெக்னிக். ஆனாலும் புகழ் பெற்றவர்களே பத்து ரூபாய்க்கு ஆசைப் பட்டு நஷ்டப்படுகிறார்கள்! ஏமாறுபவர்கள் உள்ளவரை...

    பதிலளிநீக்கு
  4. இதுபோன்ற திருட்டுகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது. ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்கும் புரியவில்லை?

    ஒரு மாதிரியாக மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். தானே அறியாமல் ஓர் அனிச்சை செயலாக அதுபோல செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    நான் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றாலுமேகூட கீழே குனிந்தெல்லாம் எடுக்கவே மாட்டேன். என்னிடம் அதுபோலச் சொன்ன அவனையே விட்டு எடுத்துக்கொடுக்கச் சொல்வேன். அதற்கு தனியாகக் கூலியும் கொடுத்து விடுவேன். :)

    பதிலளிநீக்கு
  5. இந்த டெக்னிக்கை ‘ராம்ஜிநகர்’ திருடர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். இவர்களைப் பற்றி ’தி இந்து’- தமிழ் நாளிதமிழில் ‘கேப்மாரி’ என்று ஒரு கட்டுரையே வந்திருக்கிறது.

    முனைவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, எங்க ஊரு திருமழபாடி; வசிப்பது திருச்சியில். ராம்ஜிநகர் இருப்பது, திருச்சியில் திண்டுக்கல் சாலையில். ராம்ஜி என்ற வடநாட்டு தொழிலதிபர் ஒருவர் பஞ்சுமில் ஒன்றைக் கட்டி நிறையபேருக்கு வாழ்வளித்தார். அதனால் அப்பகுதிக்கு ‘ராம்ஜிநகர்’ என்று பெயர். ஒரு கலெக்டர் (பெயர் நினைவில் இல்லை), இந்த திருடர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பதற்காக, இந்த பகுதியில் குடியிருக்க இடமும், வங்கி கடன் வசதியும் செய்து கொடுத்தார். இவர்கள் இப்போது ஊர்ப்பெயரை இந்தியா முழுதும் பிரபலமாக்கி விட்டார்கள்.

      நீக்கு
    2. நான் முதன் முதலில் ராம்ஜி நகர் பக்கம் போனபோது ஒரு உள்ளூர்காரர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. இந்தியாவில் எங்கு கொள்ளை நடந்தாலும் போலீஸ் முதலில் இந்த ஊருக்குத்தான் வருமாம்.இங்கு திருடன் கிடைக்கவில்லை என்றால்தான் வேறு இடங்களில் தேடுவார்களாம்.

      நீக்கு
  6. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்கிறபோது ஒரு நடிகை பணம் என்றதும் ஏமாந்ததில் வியப்பில்லை. இதுபோல் சில ஆண்டுகளுக்கு முன் இன்னொரு நடிகையும் ஏமாந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  7. ஏமாறும் நேரத்தில் இந்த டெக்னிக்குகள் நினைவுக்கு வருவதில்லையே

    பதிலளிநீக்கு
  8. உங்கள் காலத்தில்(நீங்களும் இதில் அடக்கமோ) பலரின் மனதைக் கொள்ளை அடித்தவரிடமே பகல் கொள்ளையா .வன்மையா கண்டிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது அநியாயம் ,கொள்ளை அடித்ததுதானே :)

      நீக்கு
    2. கொள்ளைக்காரியிடமே கொள்ளை அடிப்பது மிக்க அநியாயம்தானுங்களே.

      நீக்கு
    3. அடைப்புக் குறிக்குள் இருக்கும் கேள்விக்கு நான் உங்கள் பதிலை எதிர்பார்த்தேன் ,பாஸுக்கு பயப்படாம சொல்லுங்க :)

      நீக்கு
    4. நான் எந்த பாஸ்ஸுக்கும் பயப்பட மாட்டேன். கேக்கற கேள்வியை நேரடியாக் கேட்டீங்கன்னா பாஸ்கிட்ட கேட்டு பதில் சொல்றேன்.

      நீக்கு