செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

19. ஆதார் கார்டும் நானும்

                                          Image result for ஆதார் அட்டை
ஆதார் கார்டு பதிவு செய்ய ஆரம்பித்த காலத்திலேயே நானும் என் குடும்பத்தினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் பதிவு செய்து விட்டோம். ஆதார் கார்டு எந்த ஒரு அரசு வேலைக்கும் தேவையில்லை என்று உச்ச நீதி மன்றம் அன்றிலிருந்து இன்று வரை கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால் அரசோ மும்முரமாய் அனைத்து துறைகளிலும் ஆதார் ஆதார் என்று ஆப்பு வைத்துக்கொண்டே போகிறது. தற்பாதைய லேடஸ்ட் ஆப்பு மொபைல் போனை ஆதாருடன் இணைப்பது.

என்னுடைய மொபைலில் பிஎஸ்என்எல் காரன் ஒரு நாள் இதைப் பற்றி ஒரு செய்தி அனுப்பியிருந்தான். நானும் உடனே ஓடிப்போய் என் மொபைல் நெம்பரை ஆதார் நெம்பருடன் இணைக்கப்பார்த்தேன்.

என் கை விரலை ஒரு ஸ்கேனரில் வைக்கச்சொன்னார்கள். நானும் வைத்தேன். ஸ்கேனர் கம்மென்று இருந்தது. அந்த ஆபரேட்டர் பொறுமையாக ஒவ்வொரு விரலாக ஸ்கேனரில் வைத்துப் பார்த்தார். ஆனால் அந்த ஸகேனர் எதற்கும் அசைவதாகக் காணோம்.

அப்புறம் அந்த ஆபரேட்டர் என் மேல் பரிதாப ப் பட்டு "சார், உங்கள் கைவிரல் ரேகைகளெல்லாம் தேய்ந்து அழிந்து போய்விட்டன. இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இந்த ஆதார்-மொபைல் லிங்க் செய்வதற்கு ஒரு வருடம் கெடு இருக்கிறது, அதனால் அதற்குள் இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழு பிறக்கும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

நானும் என் கை ரேகைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.

20 கருத்துகள்:

 1. உங்கள் அனுபவம் வித்தியாசமானதுதான். வயதானவர்களுக்கு (சிலருக்கு) ஏற்படுவதுதான். இங்கெல்லாம், கைரேகை பதிவது (குடிமகன், அல்லது தேசத்தில் இருப்பவன் ஐடென்டிடி கார்டுக்கு) கட்டாயம். நான் வேலைக்கு எடுத்த ஸ்ரீலங்கனுக்கு (35 வயது) கைரேகை பதிய இயலவில்லை. 10 தடவை வரச்சொல்லியும் அது சாத்தியப்படவில்லை என்பதால், அவனைத் திருப்பி அனுப்பவேண்டியதாகிவிட்டது. ஏதோ ஸ்ப்ரேலாம் விரல்ல அடித்து முயற்சித்தார்கள் என்று சொன்னான். ஒரு சில சீனியர் ஸ்டாஃப் கைரேகை அழிந்திருப்பதால், அவர்களுக்கு கதவைத் திறக்க, 'கார்ட்' கொடுத்திருக்கிறோம் (விரல் ரேகையை அழுத்துவதன்மூலம் திறக்கும் கதவில்). த ம

  பதிலளிநீக்கு
 2. கைரேகையை இனி என்ன செய்ய முடியும் ஐயா ?
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் எனக்கும் புரியவில்லை. அநேகமாக யமலோகத்தில் ஆதார் அட்டை கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

   நீக்கு
 3. எல்லாவற்றிலும் ஆதார் இணைப்பு வந்தே தீரும்!

  பதிலளிநீக்கு
 4. எனக்கும் என் மொபைல் எண்ணை செர்விஸ் ப்ரொவைடர் களுக்கு அனுப்பச் சொல்லி எஸ் எம் எஸ் வந்து கொண்டே இருக்கிறது சில நாட்களுக்கு முன் வந்திருந்த வாட்ஸாப் மெசெஜில் அப்படிச் செய்தால் வங்கியிலிருக்கு ம்பணம் அபேஸ் ஆகி விடும் என்னும் எச்சரிக்கையும் வந்தது நானும்பதிவு ஒன்றில் அது குறித்து எழுதி இருந்தேன் அரசு ஆணைப்படி என்று மெசேஜ் வருகிறது நான் இதுவரை இக்னோர் செய்து வருகிறேன் புரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் பயப்படுவது தேவையில்லை. நீங்கள் மொபைலுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், உங்கள் மொபைலை லாக் செய்யும் அபாயம் இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் டைம் கொடுத்திருக்கிறார்கள். சாவகாசமா யோசிச்சு முடிவு செய்யலாம்.

   நீக்கு
 5. என்மொபைல்கள் ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் சிம்களைக் கொண்டது

  பதிலளிநீக்கு
 6. //அநேகமாக யமலோகத்தில் ஆதார் அட்டை கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.// இதை, இப்பவே நீங்களே முடிவு செய்தீட்டிங்களா?
  அப்படீன்னா, பரலோகத்திற்கு போகிற திட்டம் ஏதும் இல்லையா? ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரலோகம் - யமலோகம் இரண்டும் ஒன்றே என்று என் புரிதலுக்குத் தோன்றுகிறது. நாம் திட்டமிட்டாலும் திட்டமிடாவிட்டாலும் பரலோகம் போவது பிறந்த அன்றே உறுதியாகி விட்டது.

   நீக்கு
 7. இப்படி எல்லாம் பிரச்னை இருக்கிறதா!

  பதிலளிநீக்கு
 8. நான் இன்னும் எனது ஆதாரை எனது செல்போன் எண்களுடன் இணைக்கவில்லை. உங்கள் அனுபவம் எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை.

  பதிலளிநீக்கு
 9. கீபோர்டில் அடிச்சு விரல் ரேகை எல்லாம் அழிஞ்சுபோச்சு. ஆமாம் பென்ஷன் லைப் செர்டிபிகேட்டிற்கு பாங்கில் விரல் அழுத்தும்போது சரியாக எடுத்ததா?

  --
  Jayakumar​ ​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீ போர்டில் இரண்டு விரல்களை மட்டும்தானே உபயோகப்படுத்துகிறேன். மத்த வெரல்ல எல்லாம் எப்படி ரேகை அளிஞ்சுது?

   எங்களுக்கு எங்கள் ஆபீசில் கையெழுத்து போட்டா போதும். ரேகை வைக்கெறதெல்லாம் இல்லை.

   நீக்கு
 10. ஆதார கார்டு வாங்க மிகவும் தொல்லப் பட்டேன்! த ம 8

  பதிலளிநீக்கு
 11. better they can scan our eyes instead of fingers...in sharjah airport - passport control - fully automatic based eye scan. very fast also.

  பதிலளிநீக்கு
 12. எனக்கும் மொபைலில் தகவல் வந்தது. அவ்வளவு சீக்கிரத்தில் ஆதார் எண்ணை கொடுத்து விடுவேணாக்கும் பார்ப்போம்.. என்னா நடக்குதுன்னு

  பதிலளிநீக்கு
 13. எனது பாட்டிக்கும் ஆதார் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
  ( போங்கடா நீங்களும் உங்க ஆதாரும் என்று அவர் சொர்க்கத்திற்கு கிளம்பிவிட்டார்)

  இப்போதுதான் அவருடைய ஆதார் அட்டை வந்து சேர்ந்த்தது. ;-(

  நிற்க

  கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் என்ன செய்வார்கள்?
  கேட்ராக்ட் அறுவை சிகிச்சைக்குப்பின் கண் ஐரிஸ்க்கு
  லென்ஸ் பொருத்தப்படுவதால்
  ஆதார் கார்டு ஸ்கேனருக்கு கண் ஆதாரம் தருவதில்லை
  (கைரேகை போலவே கண் ஐரிஸ் ஆதாருக்கு உதவுகிறது)

  பதிலளிநீக்கு
 14. பதில்கள்
  1. பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை.

   நீக்கு