ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

9 கருத்துகள்:

 1. காதல் என்பதே அதற்கான தகுதிகள் வந்த பிறகுதான் வரவேண்டும். யாரும், 'திருமணத்துக்குப் பிறகு' என்ற நிலைமையைச் சிந்திக்காமல், சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சிகளைப் பார்த்து 'காதல் கொண்டேன்' என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுதான் காதலின் படுதோல்விக்குக் காரணம்.

  கெப்பாசிட்டி இல்லாமல் (ஸ்திர வேலை, ஓரளவு சம்பளம்), காதலில் இறங்குபவர்கள், அந்தப் பெண்ணுக்கு துரோகம் செய்யவேண்டும் என்று மனதால் நினைத்து இதில் ஈடுபடுவதாகத்தான் எனக்குப் படுகிறது.

  இது இன்றைக்கு உள்ள பிரச்சனை இல்லை. 30 வருடங்களுக்கு முன்பே இத்தகைய பிரச்சனைகள் இருந்தன. மேற்கத்தைய நாடுகளில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் 18 வயதுக்குமேல் சம்பந்தம் அவ்வளவாக இல்லை (பிள்ளைகள்னால பெற்றோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.. வீட்டை விட்டு போனவங்க போனவங்கதான்). நம்ம ஊர்ல அப்படி இல்லை.

  பதிலளிநீக்கு
 2. இந்தக்காதல்களுக்கு அடிநாதமே தராதரமற்ற கல்லூரிகள்தான் ஐயா

  பதிலளிநீக்கு
 3. காதலைப் போற்றிக் கதை கவிதைகள் எழுதுவதற்கும் திரைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.இது அரசாங்கத்தின் கடமை.

  காதல் என்பது, சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக உருவான வெற்றுக் கற்பனை. உரிய சூழ்நிலை வாய்த்த பிறகு திருமணம் செய்து காமசுகம் அனுபவிப்பதே முறையாகும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துவது சமூக ஆர்வலர்களின் கடமை. தவறினால்.....

  இளைஞருலகம் விட்டில் பூச்சிகளாய்ப் பெரும் எண்ணிக்கையில் அழிவைச் சந்திப்பது நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 4. இந்தப்பதிவை காதல் செப்பவர்களும் காதல் செய்யப்போவர்களும் படிக்க மாட்டார்கள். அறிவுரைகள் என்றுமே கசப்பு தான்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. சினிமாக்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலித்துவிட்டு, அவர்கள் திருமணம் நடக்குமிடத்தில் சுபம் போட்டு விடுகிறார்கள். உண்மையில் அதற்கப்புறம்தான் சோதனையே ஆரம்பம் என்பது ரசிகர்கள் உணர்வதில்லை. காதல்! அதுமட்டும் மனதில் நின்றுவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 6. பெற்றோர் வளர்ப்பு ,சூழ்நிலைகள் , ஒரு குறுகிய வட்டத்தை தாண்டி நினைக்கமாய் , திரைப்படங்கள், ஊடகங்களின் TRP நோக்கங்கள் என அனைத்திற்கும் பங்கு உண்டு

  பதிலளிநீக்கு
 7. ஆதலினால் காதல் செய்வீர் என்று படித்தநினைவு

  பதிலளிநீக்கு