வியாழன், 16 மே, 2019

சரித்திரம் தெரியுமா?

எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று இப்படி எழுதினால் போதும், நீ பாஸ் ஆகி விடுவாய் என்று சொல்லிக்கொடுத்தார்.

அது போலவே எழுதி சரித்திரம் பாஸ் செய்து மேல் படிப்புகளெல்லாம் படித்து மேலே வந்தது ஒரு பெரிய கதை.

ஆனால் என்னுடைய ஆயுள் காலத்திலேயே ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. நான் மேற்கூறியவாறு சரித்திரம் படித்துக்கொண்டு இருக்கும்போது தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை சினிமா பாணியில் பத்திரிக்கைக்காரர்கள் பிரசுரித்தார்கள்.

அதில் எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்த படு கொலையைச் செய்தவன் ஒரு தேசத்துரோகி என்றும் அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு தலைமுறைக்கும் பாவம் வந்து சூழும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் அவன் பெயரைச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது.

இது நடந்து ஒரு எழுபது வருடங்கள் ஆகியிருக்கும். இன்றைக்கு அவனை யாரோ ஒரு சினிமா நடிகர் என்னமோ சொல்லிவிட்டார் என்பதால் இந்த தேசமே அந்த நடிகரை கால்வேறு கைவேறு ஆக்கத்துடிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு எழுபது வருடத்திலேயே, என் வாழ்நாளில் நடந்ததையே மக்கள் மாற்றுகிறார்கள் என்றால், 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாய் சரித்திரத்தில் சொல்பவைகளை எவ்வாறு நம்பவது?

பின் குறிப்பு; இது ஒரு சரித்திர ஆராய்ச்சிப் பதிவுதானே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்படியும் இந்தப் பதிவிற்கு உள் நோக்கம் கற்பிப்பவர்கள் ஏழேழு ஜன்மத்திற்கும் இந்தியாவிலேயே பிறக்கக்கடவது என்று சாபம் கொடுக்கிறேன்.

17-5-2019  / 6.00 AM    இதையும் பாருங்கள்;

Bhopal candidate Pragya Thakur courted fresh controversy on  .. 

11 கருத்துகள்:

 1. உங்க பாயிண்ட் வேலிட் கந்தசாமி சார். வருடங்கள் செல்லச் செல்ல நாம் தியாகி யார், சரித்திரம் என்ன என்பதை மறந்துவிடுவோம். அப்போ, புத்தகங்கள் சொல்வதோ அல்லது நமக்குச் சொல்லித்தரப் படுவதோதான் சரித்திரம் என்று மாறிவிடும்.

  உங்களுக்கு இருந்த 'காந்தியைச் சுட்டுவிட்டானே' என்ற உணர்வு, 50களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இருக்காது. 80களுக்கு அப்புறம் பிறந்தவர்களுக்கு, 'காந்தியா', 'நேரு'வா? 'காமராஜரா'----- ஏம்ப்பா பழசைப் பிடிச்சுக்கிட்டுத் தொங்கறீங்க என்றுதான் தோன்றும். இது இயற்கை.

  பதிலளிநீக்கு
 2. ஆனால் எப்போது மதம், சாதி போன்றவை முன்னிறுத்தப்படுகிறதோ, அதற்கு எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும். சாதி, மதத்தைப் பொறுத்து ஆதரவு கூடும் இல்லை மிகவும் குறையும்.

  காமராசர், கக்கன், அம்பேத்கார், கப்பலோட்டியதமிழன் என்று தலைவர்களை 'சாதித் தலைவர்களாக' சித்தரித்த பிறகு, அவர்களது ஆதரவுத் தளம் மிகவும் சுருங்கிவிட்டது உங்களுக்குத் தெரியும்.

  இங்கு கமலஹாசன் முன்னிறுத்த ஆசைப்பட்டது 'மதம்'. அதன் காரணம் 'சிறுபான்மையினரின் வாக்குகள்'. அதனால்தான் இவ்வளவு எதிர்ப்பும், அந்த எதிர்ப்பின் காரணமாக 'கோட்சேவை -இந்து- என்ற மதத்தினால் ஆதரிக்கும்' சூழலும். இதற்குக் காரணம் கமலஹாசன் பேசிய பேச்சுத்தான் என்பது என் எண்ணம். இதைப்போன்ற நிகழ்வைத்தான் நாம் 'ஒசாமா பின்லேடன்' என்று சொல்லாமல் 'இஸ்லாமிய பயங்கரவாதி ஒசாமா பின்லேடன்' என்று சொல்லியதால், ஒசாமா பெற்ற 'இஸ்லாமிய ஆதரவாளர்கள்' விஷயத்திலும் பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
 3. \\இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\\

  'காந்தி சிலைக்குப் பதிலாக' என்று சொல்லத் தோணுதுங்க[சொல்லவில்லை].

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகுத்தறிவாளர் பரமசிவம் ஐயாவை கண்பதில் மிகவும் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி நண்பர் வேகநரி. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 4. ஐயா இந்த 70 ஆண்டுகாலமாக இந்தியா குடியரசு ஆட்சியில் இருந்தது. சரித்திரம் உண்மை பேசியது. முடி சூடா மன்னர்கள் யாவரும் ஒரு மன்னரை முடி சூட்டியபின் சரித்திரம் மன்னர் ஆட்சிகளுக்கு திரும்புகிறது. மன்னர் சொல்வதே சரித்திரம்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. சார்; நீங்க பழைய வரலாரெல்லாம் சரியா சொல்றீங்க. சமீப வரலாற கவனிக்க விட்டுட்டீங்க. திருத்தம்! கமல்ஹாசன் நடிகன் அல்ல! மிகப்பெரிய அரசியல்வாதி!

  நடிகனாகவோ தனி மனிதனாகவோ இக்கருத்தை வெளீயிட்டு இருந்தால் யாருக்கும் கோபம் வராது. காந்தியையும், கோட்சேயையும் வைத்து அரசியல் செய்கிறார், இந்த அரசியல்வாதி. இந்த அரசியல் மேதாவி

  இவரு கோட்சேயைப் பத்தி பேசவில்லை. கோட்சேயை வைத்து பா ஜ க வை தீவீரவாதத்தை தூண்டிவிடும் கட்சி என்கிறார்.

  கோட்சே கொன்னது தன் மதத்தை சேர்ந்தவரை. இப்போ சமீபத்தில் நடக்கும் தீவிரவாதம் பிற மதத்தவரை கொல்வது. ஆஸ்ஹிரேலியா, அமெரிக்கா, ஶ்ரீலங்கானு பல இடங்களீல். இதையெல்லாம் விட்டு விட்டு இவரு ஏன் இப்போ கோட்சேயை தோண்டி எடுக்கிறார் என்பதே இவர்களூக்கு பிரச்சினை.

  கம்லஹாசன் அப்பப்போ, நானும் ஹிந்துதான், என் குடும்அத்தினரும் ஹிந்து ஃபெனாட்டிக்தான்னு வேற சொல்லிக் கொள்கிறார். இவரு பண்ற அரசியலை சமாளீக்க இவர் குடும்பத்தினரை அப்பப்போ கொண்டு வந்து கேடயமாக சமாளீக்கிறார்.

  இங்கே யாருமே கோட்சேக்காக செருப்பு எரியவில்லை. கோட்சே போல்தான் நீயும் என்றூ சொல்லி அரசியல் செய்வதுக்காக செருப்படி. இதை நீங்க தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

  வரலாறூ மாறவில்லை. ஒரு நடிகன் அரசியல்வாதியாகி யாரையும் விற்க தயாராகிவிட்டான் என்பதே பிரச்சினை!

  கோட்சே பார்ப்பனர். இவரும் பார்ப்பனர்! அப்பாவி காந்தி பார்ப்பனர் அல்ல! பார்ப்ப்னர்களூக்குத்தான் இந்து மத வெறீ அதிகம். இவரு பேசாமல் பார்ப்பனர்கள இந்து மத வெறீயர்கள்ணு சொல்லலாம். ஆனால் சொல்ல மாட்டாரு. சுப்பிரமணீ சாமிக்கு அட்ஜச்ட் பண்ணீப் போவாரு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்னோட குஜினி செய்யுற அளப்பறையை எழுத 10 நாள் எடுக்கும்

   நீக்கு
 6. கொலைகள்,படுபாதக செயல்கள் செய்பவர்களை மதம் சார்ந்தே இனம் சார்ந்தோ ஒருபோதுமே நாம் ஏற்று கொள்ள கூடாது.
  ஒரு சினிமா நடிகர் ஒருமதம் சார்ந்த தீவிரவாதத்தை கண்டு கொள்ளாமலும், பிரச்சனைகள் வரும் போது வேறு ஒரு மதத்தை மட்டுமே கண்டிப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

  பதிலளிநீக்கு
 7. சரித்திர நிகழ்வுகள் திரிக்கப்படும் காலம் இது உண்மைசுடும்

  பதிலளிநீக்கு
 8. உள்நோக்கம் கற்பிப்பவர்களுக்கு இடப்பட்ட சாபம் அருமை.

  பதிலளிநீக்கு