ஞாயிறு, 2 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.

1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.

அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. போராடுவதற்கு ஏதாவது சாக்கு வேண்டும், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைதான் இது.

இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு கடைசியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் இந்தி சொல்லிக்கொடுப்பது நின்று போயிற்று. இந்த நிலையினால் தமிழ் இளைஞர்கள் இந்தி படிக்காமல் மத்திய அரசு வேலைகளைக் கோட்டை விட்டார்கள். ஆனால் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொண்டு டில்லிக்கோட்டையில் பல முக்கிய பதவிகளில் கோலோச்சினார்கள், கோலோச்சுகிறார்கள்.

இப்போது மத்திய அரசு இந்தியை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லதாகப்போச்சு என்று இருக்காமல் அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்ய இந்த திராவிடக்கட்சிகள் கூவுகின்றன. இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள். இந்த அடிமட்ட மக்கள்தான் அறிவு கெட்டுப்போய் இந்தி எதிர்ப்புக் கோஷம் போட்டுக்கொண்டு அழிந்து போகிறார்கள்.

தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.

13 கருத்துகள்:

  1. //இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள்//

    நூறு % உண்மை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இந்த வீண் அரசியலை எப்போது விடப்போகிறார்களோ....

    பதிலளிநீக்கு
  3. இந்தி உட்பட, ஒரு மொழியைத் தெரிந்துகொள்வதில் மிகவும் பயனுண்டு. திணிக்கப்படும்போது என்ற நிலையில்தான் உணர்வுகளுக்கு அடிமையாகின்றனர். இதனை அரசியலாக்க முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. இந்தி படிக்கவில்லை என்பதால் மத்திய அரசு வேலை கிடைக்காது என்னும் நிலையே முதலில் தவறு. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்? குடிமக்கள் சமமாக நடத்தப்படவேண்டுமா இல்லையா என்பதுதான் முதற்கேள்வி. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்கள் எல்லாரும் இரண்டாந்தரக் குடிமக்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாத்துரை திமுக ஆரம்பித்தபோது தனித்திராவிட நாடு வேண்டும் என்ற கொள்கையைத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று சொல்லும் கட்சிகளைத் தடை செய்யப்போவதாக மத்திய சர்க்கார் அறிவித்தவுடன் வாலைச் சுருட்டிக்கொண்டு இந்தக் கொள்கையை காற்றில் விட்டு விட்டார்கள்.

      தமிழன் தமிழ்நாட்டுக் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுவேன் என்று சொன்னால் டில்லிக்காரனுக்கு என்ன நஷ்டம்? ஓட்டிக்கொள் என்று சொல்கிறான். அவ்வளவுதானே. தமிழநாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் பொது ஜனங்கள் வட இந்தியாவிற்குப் போனால் மொழி தெரியாமல் பெப்பப்பே என்று விழித்தால் அவனுக்கென்ன? சிரித்துவிட்டுப் போகிறான்.

      நீக்கு
  5. திமுக தலைவர்கள், அவங்க நல்லா ஹிந்தி கத்துக்குவாங்க. ஹிந்தி சொல்லித்தர பள்ளிகளைச் சொந்தமாக நடத்துவாங்க. யாருக்கேனும் மந்திரி பதவி கொடுக்கணும்னா, அதுக்கு 'ஹிந்தி தெரியும் அதுனாலதான் மந்திரி பதவிக்கு சிபாரிசு செஞ்சோம்' என்பாங்க. ஆனா மக்கள் ஹிந்தி கத்துக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. கேட்டா, 'ஹிந்தி திணிப்பா'ம்.

    இதுக்கு வேலையத்த விளாத்திக்குளம் காரரும், காலம் போன காலத்துல தூண்டிவிடறார்.

    இவங்கள்லாம் ஒழிந்தால்தான் நாடு உருப்படும். மக்கள் கல்வியறிவு முழுமையாப் பெற்றுவிட்டால், இவர்களின் நாடகம் எடுபடாதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஐயா உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்க வில்லை. நடனசபாபதி ஐயா அவர்களின் விளக்கமான இந்தி திணிப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய பதிவுகளை வாசித்தவர்கள் தான் நீங்கள்.
    இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது மும்மொழி கொள்கை திணிக்கப்பட்ட காலத்தில் , அதாவது நீங்கள் பிறந்த வருடம் முதலே உள்ளது தான். நீங்களும் 60 களில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பீர்கள்.
    ஆரியம் திராவிடம் என்ற அடிப்படையில் தான் இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடை பெற்றது.நடை பெறப்போவதும் அதனால் தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, ஆரியம் திராவிடம் எல்லாம் பெரியார், அண்ணாத்துரை காலத்து அரசியல். அது இன்றைக்கு உதவாது. இந்தி எதிர்ப்பு போராட்டும் என்பது ஒரு செத்த பாம்பு. அதை வைத்துக்கொண்டு இன்றும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

      டில்லியை எதிர்த்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒன்றும் செய்ய முடியாது.

      நீக்கு
  7. திராவிடக் கட்சிகளும் அதன் பிரமுகர்களின் செயல்பாடுகளும் ஒருபுறம் இருக்கட்டும்.

    பல்வேறு மொழி பேசுகிற இந்தியாவில் பல்வேறு மொழி பேசுகிற மக்களுக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, மத்திய அரசில் உருவாகும் வேலை வாய்ப்புகளைப் பகிர்ந்துதான் கொடுக்க வேண்டும். சில கிளை மொழிகளையும் இணைத்து 40% என்று கணக்குக் காட்டப்படுகிற இந்தியில் படித்தால்தான் வேலை என்பது என்ன நியாயம்?

    இந்திக்கு இத்தனை முக்கியத்துவம் தந்ததே மிகப் பெரிய மோசடி.

    மந்திரி சபை மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய...செலுத்தும் இந்திக்காரர்கள் இந்தப் அவல நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

    இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்பதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கான காரணம்.

    ஊரூருக்கு இந்தி கற்பிக்கும் நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இந்தித் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்துவிட்டதா? யாரேனும் புள்ளிவிவரம் வெளியிட்டிருக்கிறார்களா? எந்த அடிப்படையில் ''வேலை கிடைக்கும். வேலை கிடைக்கும்'' என்கிறீர்கள்?

    இந்தி படித்துப் பிராமணர்கள் வேலை பெற்றுவிட்டார்கள் என்கிறீர்கள். ஒரு பிராமணன் தேர்வு அதிகாரியாக இருந்தால், இந்தி தெரியாவிட்டாலும் மற்ற பிராமணர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் 'பிராமணப்பற்று' குறித்து உங்களுக்கு உண்மையில் தெரியவே தெரியாதா?

    தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி இல்லை என்று வருத்தப்படுகிறீர்கள். வடநாட்டுப் பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா? ஆங்கிலேயன் ஆண்டவரை அவனுக்கு நாம் அடிமைகளாக இருந்தோம்[இப்போது ஆங்கிலம் படித்தாலும் அவனுக்கு நாம் அடிமை ஆகப்போவதில்லை]. இனி, இந்திக்காரனுக்கு அடிமையா?

    வயிற்றுப்பாட்டுக்காக இந்தி படிக்க வேண்டுமா? சூடு சொரணை என்பதெல்லாம் வேண்டவே வேண்டாமா? நியாயமாகப் பதில் சொல்லுங்கள். 'கோவைக் குசும்பு' வேண்டாம்.

    இனி இந்தி படித்தால்தான் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்று சட்டம் கொண்டுவருவான். அத்ற்கும் ''ஆமாம் சாமி'' போட வேண்டுமா?

    இணையத் தொழில் நுட்பம் இன்று வெகுவாக வளர்ந்திருக்கிறது, வேறு வேறு மொழி பேசுகிறவர்கள், தங்களிடமுள்ள கைபேசி மூலமே எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தாய்மொழியை மட்டும் கற்ற ஒருவன் வேறு எந்தவொரு மொழிக்காரனிடமும் வேலை செய்ய முடியும்; வேலை வாங்க முடியும்.

    மொழி ஆளுமைக்கான சூழல் இந்த அளவுக்குச் சிறப்பாக அமைந்துவிட்ட நிலையில், சில திராவிடப் பிரபலங்களின் போலித்தனத்தை மட்டுமே காரணம் காட்டி இந்தி எதிர்ப்புணர்வை முடமாக்க முயல்கிறீர்களே[அவ்வப்போது] இது நியாயமா?

    தொடர்ந்து தங்களுடன் விவாதிப்பது என் நோக்கமல்ல; நான் அறிந்தவற்றைத் தங்களின் சிந்தனைக்கு முன்வைக்கிறேன்[இது தமிழர்களுக்கான மிக முக்கிய பிரச்சினை என்பதால்].

    இது தங்களின் தளம். தங்களின் பதில்கள் எவ்வகையிலும் அமையலாம். வாய்ப்புக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடு சொரணை எல்லாம் வயிறு நிரம்பிய பிறகுதான். பட்டினியில் கிடப்பவனுக்கு அதெல்லாம் கிடையாது. இன்று இந்தி எதில்ப்புப் போராட்டம் என்பது என் கருத்தில் தமிழனுக்கு வைக்கப்படும் ஆப்பு.

      நீக்கு
  8. முதல் வரியில்...'திராவிடக் கட்சிகளும்...' என்னும் தொடரில், 'அதன்' என்பது பிழை; 'அவற்றின்' என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  9. கருத்து புரிகிறதல்லவா, அது போதுமே, இலக்கணம் அப்புறம்தான்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்மணம் இயங்காத காரணத்தால் உங்க நல்லதொரு பதிவை இன்று தான் படிக்க முடிந்தது.
    இந்தியாவின் இன்னொரு பாஷை, பலருக்கு தெரிந்த இந்தியை மேலதிகமாக கற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்று கொள்ள முடியாதது.
    தங்கள் சொந்த பாஷை தமிழில் பள்ளியில் படிப்பதையோ, பேசுவதையோ மட்டமானது என்றும் ஆங்கிலமே உயர்வானது என்று நம்பும் மக்களிடம் தமிழக அரசியல்வாதிகள் செய்கின்ற ஏமாற்று மோசடியே இந்தி எதிர்ப்பு.

    பதிலளிநீக்கு