நன்றி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

பதிவுகளில் ஒரு தொழில் நுட்பம்

                                                 

ஒரு தூக்குத் தண்டனை பெற்ற கைதியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவன் மறுநாள் தூக்கிலிடப் படுவான். அவனுடைய கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்கள். அவன் ஒரு தொழில் நுட்பப் புத்தகத்தின் பெயரைச்சொல்லி அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்பான்.

அந்தச் சிறைக்காவலர்கள் நாளைக்கு நீ இறக்கப்போகிறாய், இன்று அந்தப் புத்தகத்தைப் படித்து உனக்கு ஆகப் போவது என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவன் பதில் சொன்னான். "நான் இறக்கும்போது இன்னும் ஒரு தொழில் நுட்பத்தைக் கற்றேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்படும் அல்லவா, அது போதும் எனக்கு" என்று பதில் சொன்னதாக அந்தக் கதையில் வரும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு புது கருத்தைத் தெரிந்து கொள்ள வயதோ அல்லது முதுமையோ ஓரு தடை அல்ல என்பதுதான்.

அப்படி நான் இன்று ஒரு தொழில் நுட்பம் கற்றுக்கொண்டேன். அதாவது கூகுள் பதிவுகளில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள settings ஐ மாற்றவேண்டும். இதில் உள்ள ஒரு நுணுக்கம் என்னவென்றால் அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நீங்கள் பிரசுரித்த பதிவுகளில் ஏற்படுவதில்லை. அடுத்து நீங்கள் புதிதாகப் பிரசுரிக்கும் பதிவுகளில்தான் அந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இந்த நுணுக்கத்தை நான் நேற்று கற்றுக்கொண்டேன். கூடவே இன்னும் ஒன்று கற்றுக்கொண்டேன். அதாவது பதிவுலகில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று அறிவித்தால் கைகொடுக்க நண்பர்கள் பலர் உண்டு என்கிற விவரமும் நேற்று கற்றுக்கொண்டேன்.

ஆகவே யாரும் நமக்கு வயதாகிவிட்டது, இனி இந்த உலகில் நமக்கு என்ன இருக்கிறது என்று சலிப்படைய வேண்டியதில்லை. கடைசி மூச்சு உள்ள வரைக்கும் கற்றுக்கொள்ள பல்லாயிரம் செய்திகள் இவ்வுலகில் இருக்கின்றன. கண்ணையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வளவுதான்.

அவசர உதவிக்கு கைகொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே மாதிரி நான் நேற்று பழனிக்குப் போயிருந்தேன். அதென்ன பழனி.கந்தசாமி பழனியில்தானே இருக்கிறார், ஏதோ புதிதாகப் பழனிக்குப் போனதாகச் சொல்லுகிறார் என்ற குழப்பம் வேண்டாம். என் பெயரில் நான் சேர்த்துக்கொண்ட பழனி என்பது என் தந்தையின் பெயரான பழனியப்பன் என்பதின் சுருக்கமே.

அங்கு நான் ஒரு மடத்தனம் செய்தேன். இதில் என்ன புதுமை? வழக்கமாகச் செய்வதுதானே என்று கேட்காதீர்கள். இது ஒரு புதுமையான மடத்தனம். அதலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாமா?