ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

பதிவுகளில் ஒரு தொழில் நுட்பம்

                                                 

ஒரு தூக்குத் தண்டனை பெற்ற கைதியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவன் மறுநாள் தூக்கிலிடப் படுவான். அவனுடைய கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்கள். அவன் ஒரு தொழில் நுட்பப் புத்தகத்தின் பெயரைச்சொல்லி அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்பான்.

அந்தச் சிறைக்காவலர்கள் நாளைக்கு நீ இறக்கப்போகிறாய், இன்று அந்தப் புத்தகத்தைப் படித்து உனக்கு ஆகப் போவது என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவன் பதில் சொன்னான். "நான் இறக்கும்போது இன்னும் ஒரு தொழில் நுட்பத்தைக் கற்றேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்படும் அல்லவா, அது போதும் எனக்கு" என்று பதில் சொன்னதாக அந்தக் கதையில் வரும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு புது கருத்தைத் தெரிந்து கொள்ள வயதோ அல்லது முதுமையோ ஓரு தடை அல்ல என்பதுதான்.

அப்படி நான் இன்று ஒரு தொழில் நுட்பம் கற்றுக்கொண்டேன். அதாவது கூகுள் பதிவுகளில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள settings ஐ மாற்றவேண்டும். இதில் உள்ள ஒரு நுணுக்கம் என்னவென்றால் அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நீங்கள் பிரசுரித்த பதிவுகளில் ஏற்படுவதில்லை. அடுத்து நீங்கள் புதிதாகப் பிரசுரிக்கும் பதிவுகளில்தான் அந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இந்த நுணுக்கத்தை நான் நேற்று கற்றுக்கொண்டேன். கூடவே இன்னும் ஒன்று கற்றுக்கொண்டேன். அதாவது பதிவுலகில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று அறிவித்தால் கைகொடுக்க நண்பர்கள் பலர் உண்டு என்கிற விவரமும் நேற்று கற்றுக்கொண்டேன்.

ஆகவே யாரும் நமக்கு வயதாகிவிட்டது, இனி இந்த உலகில் நமக்கு என்ன இருக்கிறது என்று சலிப்படைய வேண்டியதில்லை. கடைசி மூச்சு உள்ள வரைக்கும் கற்றுக்கொள்ள பல்லாயிரம் செய்திகள் இவ்வுலகில் இருக்கின்றன. கண்ணையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வளவுதான்.

அவசர உதவிக்கு கைகொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே மாதிரி நான் நேற்று பழனிக்குப் போயிருந்தேன். அதென்ன பழனி.கந்தசாமி பழனியில்தானே இருக்கிறார், ஏதோ புதிதாகப் பழனிக்குப் போனதாகச் சொல்லுகிறார் என்ற குழப்பம் வேண்டாம். என் பெயரில் நான் சேர்த்துக்கொண்ட பழனி என்பது என் தந்தையின் பெயரான பழனியப்பன் என்பதின் சுருக்கமே.

அங்கு நான் ஒரு மடத்தனம் செய்தேன். இதில் என்ன புதுமை? வழக்கமாகச் செய்வதுதானே என்று கேட்காதீர்கள். இது ஒரு புதுமையான மடத்தனம். அதலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாமா? 

16 கருத்துகள்:

 1. அருமையான கருத்து
  இறுதிவரை துடிப்புடன் இதயம் போல்
  இருத்தலே மிகச் சிறப்பு
  சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது

  பதிலளிநீக்கு
 2. ஐயா... முதலில் .in என்பதை .com என்று மாற்றினால் தான் ஓட்டு போட முடியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து விட்டு நான் அதைச் செய்யவில்லை பாருங்கள்.(http://swamysmusings.blogspot.in/2014/12/4.html). நேற்று பின்னூட்டப் பெட்டியைத் திறப்பதற்காக நோண்டிக்கொண்டு இருந்தபோது இதைக் கவனிக்கவில்லை. இப்போது சரி செய்து விட்டேன்.

   நீக்கு
 3. மாற்றம் வரும் போதும் அல்லது செய்யும் போதும் தான் பலவற்றை அறிந்து கொள்ள முடியும்... தெரிந்து கொள்ள முடியும்... புரிந்து கொள்ளவும் முடியும்(யலாம்...!) வலையை மட்டும் சொல்லவில்லை...

  பதிலளிநீக்கு
 4. உங்கள் அனுபவங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  DD கமெண்ட்ஸ் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. நீங்களும்,DDஅவர்களும் பகிர்ந்து கொண்டதில் நானும் அதை புரிந்து கொண்டேன் :)
  த ம 2

  பதிலளிநீக்கு
 6. “அங்கு நான் ஒரு மடத்தனம் செய்தேன்”............அப்படியா,,,,,,,,,,,,???????????????????

  பதிலளிநீக்கு
 7. வழக்கமாக மூடத்தனமான வேலைதானே செய்வீர்கள்.
  இது என்ன புதுசா மடத்தனம் நைனா. (இது அன்பு ,ஆர்வம், இப்படி பல ஈ,உ,ஊ,எல்லாம் தங்கள் மேல் உள்ள உரிமையால் சொல்லப்பட்டது. உடனே E motion ஆ mood out ஆகி மூடிட்டு போவாதீங்க.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் கற்றுக் கொண்ட பாடத்தை – அடுத்த பதிவை படித்திட ஆவலாக இருக்கிறேன்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 9. வாழ்க்கையில் புதிது புதிதாக கற்றுக் கொள்ள ஆயிரம் இருக்கு... அருமையாச் சொன்னீங்க ஐயா...
  பழனியில் தாங்கள் செய்தது என்ன அறிய ஆவலாய் இருக்கிறோம் ஐயா..

  பதிலளிநீக்கு
 10. தங்களிடமிருந்து இவ்வாறாகக் கற்றுக்கொள்ளத்தான் நாங்கள் உங்களிடம் பின்னூட்டப்பெட்டியைத் திறக்கக் கேட்டுக்கொண்டோம். எங்களது வேண்டுகோளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. கருத்துரைப் பெட்டியை திறந்தமைக்கு இவ்வளவு வரவேற்பா வாவ்வ்! தமிழன் ரொம்ப முன்னேறிட்டான் ஜனநாயக மயபடுத்தபட்டுட்டான் ஐயா!

  பதிலளிநீக்கு
 12. என்ன என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவுக்கு வருகிறேன்!

  பதிலளிநீக்கு