தமிழ் பதிவர்கள் பெரும்பாலும் தமிழ்மணத் திரட்டியில் இணைந்திருப்பார்கள். தங்கள் பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதற்காகவும் அதில் ஓட்டுப் போடுவதற்காகவும் ஒரு ஓட்டுப் பட்டை உள்ளதை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதில் உள்ள சில நுணுக்கங்களை பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள்.
இந்த ஓட்டுப் பட்டையை தங்கள் தளத்தில் இணைப்பது பற்றி பல தொழில் நுட்பத் தளங்களில் விளக்கியுள்ளார்க்ள. பார்க்க பிளாக்கர் நண்பன், பொன்மலர் பக்கம், டி.என் முரளிதரனின் மூங்கில் காற்று.
இந்த ஓட்டுப் பட்டை முதலில் இந்த மாதிரி இருக்கும்.
இந்த ஓட்டுப் பட்டையை தங்கள் தளத்தில் இணைப்பது பற்றி பல தொழில் நுட்பத் தளங்களில் விளக்கியுள்ளார்க்ள. பார்க்க பிளாக்கர் நண்பன், பொன்மலர் பக்கம், டி.என் முரளிதரனின் மூங்கில் காற்று.
இந்த ஓட்டுப் பட்டை முதலில் இந்த மாதிரி இருக்கும்.
நீங்கள் உங்கள் பதிவை "பப்ளிஷ்" பண்ணியவுடன் இந்த ஓட்டுப் பட்டையை சொடுக்கினால் உங்கள் பதிவு தமிழ்மணம் திரட்டியில் இணைந்து விடும். இதுதான் எங்களுக்குத் தெரியுமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இதில் நுட்பம் என்னவென்றால், நீங்கள் இந்தப் பட்டையைச் சொடுக்கியவுடன் அந்த ஓட்டுப் பட்டை கீழ்க்கண்டவாறு மாறவேண்டும்.
இப்படி மாறினால்தான் உங்கள் பதிவைப் படிப்பவர்கள், உங்கள் பதிவு பிடித்திருந்தால், உங்கள் பதிவிற்கு ஓட்டுப்போட முடியும். அதனால்தான் இதற்கு ஓட்டுப் பட்டை என்று பெயர்.
பெரும்பாலான பதிவுகளில் இந்த மாற்றம் நிகழ்வதில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை அப்படியே கல்லுளி மங்கனாக உட்கார்ந்து கொண்டிருக்கும். இதை அந்தந்த தளத்தின் பதிவர்கள் உணர்ந்துள்ளார்களா, இல்லையா? என்று நான் அறியேன்.
இந்த மாற்றம் ஏற்பட்டால்தான் ஒரு பதிவிற்கு தமிழ்மணம் ஓட்டு போடமுடியும். தவிர எவ்வளவு ஓட்டுகள் விழுந்திருக்கிறது என்று அறியவும் முடியும்.
இந்த சிக்கல் ஏன் வந்தது, இதை தீர்ப்பது எப்படி, இதற்கு எளிமையான வழி ஏதாவது இருக்கிறதா என்று அறிய விருப்பமா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த வழியைச் சொல்லிக் கொடுக்கிறேன்..