திங்கள், 8 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை

தமிழ் பதிவர்கள் பெரும்பாலும் தமிழ்மணத் திரட்டியில் இணைந்திருப்பார்கள். தங்கள் பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதற்காகவும் அதில் ஓட்டுப் போடுவதற்காகவும் ஒரு ஓட்டுப் பட்டை உள்ளதை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதில் உள்ள சில நுணுக்கங்களை பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த ஓட்டுப் பட்டையை தங்கள் தளத்தில் இணைப்பது பற்றி பல தொழில் நுட்பத் தளங்களில் விளக்கியுள்ளார்க்ள. பார்க்க பிளாக்கர் நண்பன், பொன்மலர் பக்கம்,  டி.என் முரளிதரனின் மூங்கில் காற்று.

இந்த ஓட்டுப் பட்டை முதலில் இந்த மாதிரி இருக்கும்.


நீங்கள் உங்கள் பதிவை "பப்ளிஷ்" பண்ணியவுடன் இந்த ஓட்டுப் பட்டையை சொடுக்கினால் உங்கள் பதிவு தமிழ்மணம் திரட்டியில் இணைந்து விடும். இதுதான் எங்களுக்குத் தெரியுமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இதில் நுட்பம் என்னவென்றால், நீங்கள் இந்தப் பட்டையைச் சொடுக்கியவுடன் அந்த ஓட்டுப் பட்டை கீழ்க்கண்டவாறு மாறவேண்டும்.


இப்படி மாறினால்தான் உங்கள் பதிவைப் படிப்பவர்கள், உங்கள் பதிவு பிடித்திருந்தால், உங்கள் பதிவிற்கு ஓட்டுப்போட முடியும். அதனால்தான் இதற்கு ஓட்டுப் பட்டை என்று பெயர்.

பெரும்பாலான பதிவுகளில் இந்த மாற்றம் நிகழ்வதில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை அப்படியே கல்லுளி மங்கனாக உட்கார்ந்து கொண்டிருக்கும். இதை அந்தந்த தளத்தின் பதிவர்கள் உணர்ந்துள்ளார்களா, இல்லையா? என்று நான் அறியேன்.

இந்த மாற்றம் ஏற்பட்டால்தான் ஒரு பதிவிற்கு தமிழ்மணம் ஓட்டு போடமுடியும். தவிர எவ்வளவு ஓட்டுகள் விழுந்திருக்கிறது என்று அறியவும் முடியும்.

இந்த சிக்கல் ஏன் வந்தது, இதை தீர்ப்பது எப்படி, இதற்கு எளிமையான வழி ஏதாவது இருக்கிறதா என்று அறிய விருப்பமா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த வழியைச் சொல்லிக் கொடுக்கிறேன்..


18 கருத்துகள்:

  1. ஓட்டுப்பட்டையாக மாறாமல்.இருக்கிறது,எங்கள் தளத்தில் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்.

    டிடி உள்ளிட்ட நண்பர்கள் ஏற்கெனவே பல முறை சொல்லியும் கொடுத்து இருக்கிறார்கள்.

    எனினும் நாங்கள் அப்படியேதான் தொடர்கிறோம்!

    :)))))))

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மணம் ஓட்டுப் பட்டை சிக்கல் தீர்ப்பதற்கான வழியையும் ஒரு பதிவாகவே , பதிவிடலாமே ஐயா
    அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. அந்த எளிய வழியை சொல்லுங்களேன். என்னைப் போன்றோர் தெரிந்துகொள்ள உதவுமே.

    பதிலளிநீக்கு
  4. நான் பார்க்கும் தளங்களில் இவ்வாறு இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு சொல்வேன். சிலர் என் உதவியை நாடியபோது சரி செய்து கொடுத்தேன். தொடர்பு கொண்டால் பாசித்,தனபாலன் இது சிக்கல்களுக்கு உதவி வருகிறார்கள்
    நீங்களும் எழுதுங்கள் ஐயா! நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. வோட் கிடைப்பதனால் லாபமோ கிடைக்காததால் நஷ்டமோ இருப்பதாக நான் ஏதும் உணராததால் அதைப்பற்றிய கவலையே படுவது இல்லை.

    வோட் பெறுவதால் எம்.எல்.ஏ ., எம்.பி ., மந்திரிப்பதவியா கிடைக்கப்போகிறது?

    இது வோட் அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் ஒரு வெட்டி வேலை மட்டுமே என்பது என் அபிப்ராயம் ஆகும். அதனால் அதைப்பற்றி நான் கவலையே படுவது இல்லை.

    பதிலளிநீக்கு
  6. எங்களது ரசித்த பாடல் வலைப்பூவிலும் ஓட்டுப்பட்டை வேலை செய்வதில்லை. அதே போல் பழைய பதிவுகளிலும் அப்போதிருந்த ஓட்டுகள் தெரிவதில்லை...

    பதிலளிநீக்கு
  7. தமிழ் மணத்திற்கும் எனக்கும் வரப்பு தகறாறு! அதனால் பதிவுகள் இணைப்பு இல்லை! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தமிழ் மணத்திற்கும் எனக்கும் வரப்பு தகறாறு! அதனால் பதிவுகள் இணைப்பு இல்லை! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //‘தளிர்’ சுரேஷ்திங்கள், 8 டிசம்பர், 2014 ’அன்று’ 3:40:00 பிற்பகல் IST
    தமிழ் மணத்திற்கும் எனக்கும் வரப்பு தகறாறு! அதனால் பதிவுகள் இணைப்பு இல்லை! நன்றி!/

    ஹா... ஹா... ஹா...
    நகைச்சுவையை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. வலைப்பூ தமிழ்மணத்தில் இணைக்கப்படாமல் இருந்தால் ஓட்டுப்பட்டை அப்படியே கல்லுளிமங்கன் ஆக இருக்கும்...

    ஓட்டுப்பட்டை நிரலியில் in என நமது வலைப்பூ முகவரி இருந்தாலும் பிரச்சனை வரும்....///

    இவைகளை சரி செய்தால் ஓட்டுப்பட்டை சரியாக வேலை செய்யும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவில் தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டை நிறுவுவது என்பது ஒரு பெரிய வித்தையாகத்தான் இருக்கிறது. இதற்காக நான் முதன் முதல் தொடங்கிய ஒரு வலைத்தளத்தையே பலி கொடுக்க வேண்டி இருந்தது. பேசாமல் அவர்கள் FACEBOOK இல் உள்ளது போல LIKE முறையைக் கொண்டு வரலாம். எல்லோரும் எளிமையாக ஓட்டளிப்பார்கள்.
    த.ம. 5

    ( நான் இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதிய இந்த கருத்துரை தொழில் நுட்பம் காரணமாக உங்கள் வலைப்பதிவினில் வெளியாகவில்லை என நினைக்கிறேன். எனவே மீண்டும் அனுப்பி உள்ளேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான வழியை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டு மூன்று நாட்கள் பொறுக்கவும். அதற்குள் ஒரு சின்ன வீட்டுப்பிரச்சினை. முடித்து விட்டு வருகிறேன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. iya athu chinna vittu prachaniya vittil chinna prachaniya enna thrinthal nalam

      கொஞ்சம் பொறுங்க. இதை மொழி பெயர்த்துட்டு வருகிறேன்.

      ஐயா, அது சின்ன வீட்டுப் பிரச்சனையா, வீட்டில் சின்னப் பிரச்சினையா எனத் தெரிந்தால் நலம்.

      என்னம்மா, தெரியாமக் கேக்கறியா, தெரிஞ்சுட்டு நான் என்ன பதில் கொடுப்பேன்னு கேக்கறியான்னு தெரியலயே. எப்படியானாலும் பதில் சொல்றேன். வீடு சின்னதானாலும் பிரச்சினை எப்பவும் பெரிசாத்தான் இருக்கும்.

      நீக்கு