புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 பிப்ரவரி, 2012

நான் படித்த காமரசப் புத்தகம்.


நான் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வீட்டில் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை" என்று ஒரு புத்தகம் இருந்தது. லீவில் பொழுது போவதற்காக அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

அது ஒரு மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். பல சிறுகதைகளின் தொகுப்பு மாதிரி இருக்கும். மாயாஜால சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிறுவர்களும் பெரியவர்களும் படிக்க நிறைய விஷயங்கள் உண்டு.

அந்தக் கதையில் விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா. அவர்தான் கதாநாயகன். பட்டி என்று அவருக்கு ஒரு மந்திரி. இருவரும் செய்த வீர விளையாட்டுகளின் தொகுப்பே கதை.

விக்கிரமாதித்தனுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டம் உண்டு. அவன் எங்கு போனாலும் அந்த ஊர் ராஜகுமாரி அவனை விரும்புவாள். இவனும் அவளைக் கலாயாணம் செய்து கொள்வான். அதன் பிறகு அவர்கள் உல்லாசமாக இருப்பார்கள்.

இதில் என்ன விசேஷம் என்றால் இதை அந்தக் கதையில் சொல்லியிருக்கும் விதம் மிகவும் கிளுகிளுப்பாக இருக்கும். "ஏறின கட்டில் இறங்காமல் கலவி பாராட்டிக்கொண்டு இருந்தார்கள்" என்று எழுதியிருந்தது.