சனி, 11 பிப்ரவரி, 2012

நான் படித்த காமரசப் புத்தகம்.


நான் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வீட்டில் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை" என்று ஒரு புத்தகம் இருந்தது. லீவில் பொழுது போவதற்காக அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

அது ஒரு மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். பல சிறுகதைகளின் தொகுப்பு மாதிரி இருக்கும். மாயாஜால சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிறுவர்களும் பெரியவர்களும் படிக்க நிறைய விஷயங்கள் உண்டு.

அந்தக் கதையில் விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா. அவர்தான் கதாநாயகன். பட்டி என்று அவருக்கு ஒரு மந்திரி. இருவரும் செய்த வீர விளையாட்டுகளின் தொகுப்பே கதை.

விக்கிரமாதித்தனுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டம் உண்டு. அவன் எங்கு போனாலும் அந்த ஊர் ராஜகுமாரி அவனை விரும்புவாள். இவனும் அவளைக் கலாயாணம் செய்து கொள்வான். அதன் பிறகு அவர்கள் உல்லாசமாக இருப்பார்கள்.

இதில் என்ன விசேஷம் என்றால் இதை அந்தக் கதையில் சொல்லியிருக்கும் விதம் மிகவும் கிளுகிளுப்பாக இருக்கும். "ஏறின கட்டில் இறங்காமல் கலவி பாராட்டிக்கொண்டு இருந்தார்கள்" என்று எழுதியிருந்தது.

15 கருத்துகள்:

  1. என்ன, நீங்களுமா, அப்படீன்னு கேக்காம வேடிக்கை பாருங்க.

    பதிலளிநீக்கு
  2. விக்கிரமாதித்தன் கதைன்னா சிறுவர் கதைன்னு இவளா நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை எங்கு வாங்கலாம் ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சிறுமி இல்லை, பெரியவங்கதான் என்று நிரூபணம் செய்தால் புத்தகம் கிடைக்குமிடம் சொல்வேன். இல்லாட்டி இல்லதான்.

      நீக்கு
  3. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, என் தாத்தா வாங்கி கொடுத்த புத்தகம் விக்கிரமாதித்தன்..அதை பாதிவரை படித்துவிட்டு இன்னும் தூசி தட்டாமல் வைததிருப்பதை உங்கள் எழுத்துக்கள் சுட்டிக்காட்டிவிட்டன..இப்பவே திறக்க போகிறேன்..புத்தகம் படிக்க போகிறேன்..என் நன்றிகள்.

    சைக்கோ திரை விமர்சனம்

    பதிலளிநீக்கு
  4. இதை படிக்ககூடாதுன்னு பெரியவங்க சொல்வது இதுக்குதானா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் ஒன்றும் ஆபாசம் கிடையாதுங்க. நீங்க பாட்டுக்கு படீங்க, யாராச்சும் எதாச்சும் சொன்னா நான் பாத்துக்கறேன்.

      நீக்கு
  5. அது சரி........பாட்டி மஞ்சள் குளித்த கதை உங்களுக்கும் தெரியும்தானே??
    :))))
    அய்யா சாமீ.......அடிக்க வராதீங்க......நா அபீட் .

    பதிலளிநீக்கு
  6. விக்கிரமாதித்தனுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டம் உண்டு. அவன் எங்கு போனாலும் அந்த ஊர் ராஜகுமாரி அவனை விரும்புவாள். இவனும் அவளைக் கலாயாணம் செய்து கொள்வான்.
    //


    அந்தக்காலத்திலேயே பல’தாரம்’ உண்டு போல சார்..
    :-)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    ஊரோடு ஒத்து ஓடனும் என்பதற்காக செம கிண்டல் போஸ்ட் போட்டிருக்கிறீங்க,

    பதிவின் கடைசி வரி டுவிட்ஸ் நச் என்று இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயின்டப் புடிச்சவங்க நீங்க ஒருத்தர்தானுங்க. "நான் படித்த புத்தகங்கள்" னு இதுக்கு முந்தி ஒரு பதிவு போட்டேன். 50 பேர் கூடப் பார்க்கலீங்க. எனக்கு எரிச்சல் வந்து இந்தப் பதிவ போட்டேனுங்க. பாருங்க 500 பேர் வந்து பாத்துட்டுப் போயிருக்காங்க. தமிழனைப் பற்றி நீங்க சொன்னது தூத்துக்கு நூறு கரெக்ட்டுங்க. சரியான ஆஷாடபூதிகள் (hypocrites).

      நீக்கு
  8. அந்த கதை வீடியோவா கிடைக்குமா??? ஹி ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு சிறு கதைகளாக சினிமா எடுத்திருக்கிறார்கள். முழுவதையும் விடியோ எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். மகாபாரதமும் இராமாயணமும்தான் இதுவரை டி.வி.யில் சீரியலாக வெளிவந்து விடியோக்கள் கிடைக்கின்றன.

      நீக்கு
  9. நல்ல புத்தகமோ எனக்கும் வாங்கி வாசிக்கும் ஆற்வத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு