புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 அக்டோபர், 2012

ஒத்துங்கோ, தீப்பொறி பறக்குது!


நான் பதிவுகள் எழுத வந்தது முதல் அவ்வப்போது பதிவுலகத்தில் புயலடிப்பது வழக்கம்தான். கொஞ்ச நாளா, என்னடா பதிவுலகத்தில ஒண்ணும் விறுவிறுப்பா இல்லியேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ பெரிய புயலா அடிக்குது. அதப்பத்தி நான்  (பிரபல பதிவர் - பாருங்க, நானே சொல்லவேண்டியிருக்கிறது, என்ன பண்றது, வேற யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே)  ஒண்ணும் சொல்லாம இருந்தா அது எனக்கு எப்பேர்ப்பட்ட அவமானம்?

நான் சின்ன வயதாயிருக்கும்போது ஒரு நாள் "ஐயோடா" என்று எதற்கோ சொல்லிவிட்டேன். என் அப்பா என்னைக் கண்டித்தார். அந்த வார்த்தையை சொல்லக்கூடாது என்று சொன்னார். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தை ஒன்றும் கெட்ட வார்த்தையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பின்னாளில்தான் தெரிந்தது. அந்த வார்த்தை என். எஸ். கிருஷணன் ஒரு சினிமாவில் அடிக்கடி சொன்ன வார்த்தை என்று. நான் அந்த வார்த்தையை சொன்ன காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்கள். அதனால் அந்த வார்த்தை தீண்டத்தகாத வார்த்தையாகி விட்டிருந்தது.

அந்த மாதிரி, இப்போ, ஒரு வார்த்தை ஆகிவிட்டிருக்கிறது. அந்த வார்தையைச் சொன்னால் ஜெயிலில் போட்டுடுவாங்களாமே? அப்படீன்னுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் அந்த வார்த்தையை நான் இங்கு சொல்லமாட்டேன். அது தெரிய வேண்டுபவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குச் சென்றால் சொல்லி விட்டு, உங்களையும் கொஞ்ச நாள் அங்கேயே வைத்து ஸ்பெஷல் சாப்பாடு கொடுத்து உபசரிப்பார்கள்.

பல புயல்கள் வீசின என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போனால் எப்படி என்று கேட்பீர்கள். அதற்காக எனக்குத் தெரிந்த சில புயல்களின் பெயர்கள்.

1. போலி பதிவர் விவகாரம்.
2. பூக்காரி மேட்டர்
3. பதிவர் மூக்குடைந்த கதை.
4. பிரபல பதிவர் "சேட்" (chat)

இவைகளைப் பற்றிய பதிவுகளை கூகுளில் தேடிப் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.