நான் சின்ன வயதாயிருக்கும்போது ஒரு நாள் "ஐயோடா" என்று எதற்கோ சொல்லிவிட்டேன். என் அப்பா என்னைக் கண்டித்தார். அந்த வார்த்தையை சொல்லக்கூடாது என்று சொன்னார். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தை ஒன்றும் கெட்ட வார்த்தையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
பின்னாளில்தான் தெரிந்தது. அந்த வார்த்தை என். எஸ். கிருஷணன் ஒரு சினிமாவில் அடிக்கடி சொன்ன வார்த்தை என்று. நான் அந்த வார்த்தையை சொன்ன காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்கள். அதனால் அந்த வார்த்தை தீண்டத்தகாத வார்த்தையாகி விட்டிருந்தது.
அந்த மாதிரி, இப்போ, ஒரு வார்த்தை ஆகிவிட்டிருக்கிறது. அந்த வார்தையைச் சொன்னால் ஜெயிலில் போட்டுடுவாங்களாமே? அப்படீன்னுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் அந்த வார்த்தையை நான் இங்கு சொல்லமாட்டேன். அது தெரிய வேண்டுபவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குச் சென்றால் சொல்லி விட்டு, உங்களையும் கொஞ்ச நாள் அங்கேயே வைத்து ஸ்பெஷல் சாப்பாடு கொடுத்து உபசரிப்பார்கள்.
பல புயல்கள் வீசின என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போனால் எப்படி என்று கேட்பீர்கள். அதற்காக எனக்குத் தெரிந்த சில புயல்களின் பெயர்கள்.
1. போலி பதிவர் விவகாரம்.
2. பூக்காரி மேட்டர்
3. பதிவர் மூக்குடைந்த கதை.
4. பிரபல பதிவர் "சேட்" (chat)
இவைகளைப் பற்றிய பதிவுகளை கூகுளில் தேடிப் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்டம் போடுபவர்கள் எந்தப் பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குபிரபலபதிவர் எழுதிய பிரபல பதிவு இது. எந்த பெயரும் குறிப்பிட கூடாது என்பதால் உங்கள் பெயரை இங்கே போடவில்லை ஹீ.ஹீ
நீக்குஇனிய வணக்கங்களுடன் சிவஹரி,
பதிலளிநீக்குதங்களின் இந்த வலைப்பூவானது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_25.html
நன்றி,
சிவஹரி
மிக்க நன்றி, சிவஹரி.
நீக்குவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சார்... நன்றி...
நீக்குவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சார்... நன்றி...
பதிலளிநீக்குவரிசை எண் 3 மட்டும் எனக்குத் தெரியாது! ஏதாவது க்ளூ கொடுத்தால் தேடிப்ப(பி)டிக்க உதவியாக இருக்கும்... ப்ளீஸ்!
பதிலளிநீக்குசரவணன்
ஐயோடா ! என்னக் கொடுமை சார் இது ! அவ்வ
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குநான் ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்ன கொடும சரவணாவைத் தவிர
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்று பல புயல்களின் பெயரை சொல்லியுள்ளீர்கள். அவைகளை இணையத்தில் படித்து நானும் இன்புறுகிறேன். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎங்கோ தீப்பொறி , எப்போது பற்றிக் கொள்ளும்.? நீங்களே சொல்ல விரும்பாதபோது தேடிப் பிடித்துப் படிக்க பொறுமை இல்லை.
ஒன்னும் புரியல.............
பதிலளிநீக்குஎனக்கு இன்னும் 4- 5 ஞாபகத்திற்கு வருகிறது!
பதிலளிநீக்கு1. 'பொறுக்கி மொழி' சொற்போர்!
2. அந்நிய நாட்டு நிதியுதவிபெறும் ஆராய்ச்சியாளர்கள் பற்றிய அறப்போர்!
3. தமிழ்நாடே அறிந்த 'தொப்பி- திலகம்' விவகாரம்!
4. பிரபல இயக்குனர் பிரபல எழுத்தாளரின் நாவலை சரோஜாதேவி புத்தகம் என்றது!
5. பிரபல எழுத்தாளர் ஒருவரை மற்றொரு பிரபல எழுத்தாளர் பகடி செய்து பதிவிட்டது!
6. தரிழ் வலைப்பதிவர் சங்கம் ஆரம்பிக்கப்போய் பதிவுலகமே இரண்டானது!
கொஞ்ச நாளா ரெஸ்ட் ல இருந்ததால ஒண்ணும் விளங்கலை! ரகசியமாய் ஒரு ரகசியம் போலிருக்கிறது! நன்றி!
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒன்றும் புரியவில்லை. :))
பதிலளிநீக்குசின்மயி - இப்ப புரியுதா பாருங்கோ,
நீக்குஉங்கள் பதிவை படித்ததிலிருந்து பல தடவை யோசித்து பார்த்தும் ஒன்றும் புரியவில்லை.
பதிலளிநீக்குகாப்பி பேஸ்ட் கலைஞர்கள் http://swamysmusings.blogspot.com/2011/08/blog-post.html என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும் http://swamysmusings.blogspot.com/2011/09/blog-post_05.html என்ற இரண்டு பதிவுகள்தான் தெரிய வந்தன.
ஐயா!
பதிலளிநீக்குநான் பதிவுலகுக்குப் புதியவன்.
ஒன்றும் புரியவில்லை. பின்னூட்டத்தில் சின்மயி என்கிறீர்களே!
அது என்னங்க?
இங்கு சென்று பார்க்கவும்.
நீக்குhttp://timeforsomelove.blogspot.in/2012/10/blog-post_26.html
என்ன இங்க இவ்வளவு களேபரம் நடக்குது. நீங்க பாட்டுக்கு கம்முன்னு இருந்தா எப்படி? ஏதாவது கொங்கு குசும்போட எழுதுங்கோ!
பதிலளிநீக்குபின் குறிப்பு: என்னை உள்ள தள்ளும் ஐடியா உங்களுக்கு இருக்கு, என்பதை தவிர வேற பதில் எனக்கு சொல்லுங்க!
இந்தியா சட்டம் அமெரிக்கா வரை பாயாது. ஆனா நீங்க இந்தியா எப்ப வர்ரீங்கன்னு பாத்திட்டிருந்து ஏர்போர்ட்லயே லபக்குனு புடிச்சிருவாங்க.
நீக்குகுழாயடிச்சண்டை நீங்க நெறயாப் பார்த்திருக்கீங்க போல இருக்கு. இதையும் வேடிக்கை பாருங்க.
என்ன பாவம், ரெண்டு பேருக்கு வேலை போயிடும்? பூவாவுக்கு சிங்கியடிக்கவேண்டியதுதான்.