சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்ட அரசியல்

                                  Image result for ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும் 1967-68 களில் நடந்த இந்திப்போராட்டத்திற்கும் ஒரு ஒற்றுமையை நான் உணருகிறேன். இது ஒரு பெரிய அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் ஒரு மாபெரும் சூழ்ச்சி. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்று கண்டு பிடிக்க பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

ஆளும் கட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதியே இது என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக மாணவர்களைத் தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடைபெற்று வரும் யுத்தி.

போராட்டம் வலுவடைந்து காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் என்பது கலவரங்களைத் தூண்டி விடுபவர்களின் எதிர்பார்ப்பு. அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பது வெளியில் சொல்லப்படாத குறிக்கோள்.  ஆனால் ஆளும் கட்சியும் அதே குட்டையில் ஊறின மட்டையல்லவா? அவர்கள் இந்த எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் விளையாடுகிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று?