சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்ட அரசியல்

                                  Image result for ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும் 1967-68 களில் நடந்த இந்திப்போராட்டத்திற்கும் ஒரு ஒற்றுமையை நான் உணருகிறேன். இது ஒரு பெரிய அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் ஒரு மாபெரும் சூழ்ச்சி. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்று கண்டு பிடிக்க பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

ஆளும் கட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதியே இது என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக மாணவர்களைத் தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடைபெற்று வரும் யுத்தி.

போராட்டம் வலுவடைந்து காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் என்பது கலவரங்களைத் தூண்டி விடுபவர்களின் எதிர்பார்ப்பு. அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பது வெளியில் சொல்லப்படாத குறிக்கோள்.  ஆனால் ஆளும் கட்சியும் அதே குட்டையில் ஊறின மட்டையல்லவா? அவர்கள் இந்த எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் விளையாடுகிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று?

20 கருத்துகள்:

  1. புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...

    எங்கும் பாரடா இப்புவி மக்களை...!
    பாரடா உனது மானிடப் பரப்பை...
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்...
    ‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...

    பதிலளிநீக்கு
  2. நார் செயல்படுகிறார்கள் -யார் செயல்படுகிறார்கள்
    பெருகிறார்கள் - பெறுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  3. அய்யா, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965 இல் நடைபெற்றது. நீங்கள் 1967 – 68 இல் நடைபெற்றதாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூறியது தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. நிச்சயம் இது இளைஞ்ர்களிடம்
    சுயமாக எழுந்த எழுச்சியே
    தூண்டுதலுக்கு ஆட்படுகிற ஆட்களாக
    அவர்கள் தெரியவில்லை
    களத்தில் இருந்ததால் இது
    எனக்கு நிச்சயமாகப்படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ரமணி அவர்களுக்கு,

      மாணவர்களின் வேலை என்ன? எதிர்காலத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்வது. இதுதான் அவர்கள் தங்களை எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ளும் முறையா?

      ஜல்லிக்கட்டு சாதாரண தமிழனின் அன்றாட வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது? கோவையில் 80 வருடங்கள் வாழ்ந்த நான் ஜல்லிக்கட்டின் அவசியத்தை இதுவரை உணரவில்லை. காளை மாடுகளின் அவசியம் சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது. இப்போது இல்லை.

      இது முற்றிலும் அரசியல் சார்ந்ததே. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வரத்துடிக்கிறது. அதனுடைய விளைவே இந்தப் போராட்டம். இதன் விளக்கம் பின்னால் தெரியும்.

      நீக்கு
    2. பணத்தாசை பிடித்த + சுயநலம் கொண்ட அனைவரும் சமூக சிந்தனை இல்லாமலே, தன் வீண் பிடிவாதத்தால் உளறிக்கொண்டும் சாகிறான் தமிழன்...

      நீக்கு
  5. இப்போ போராட்டம் கொஞ்சம் நீண்டுகொண்டுவருகிறது. அரசு உறுதியளித்தும்... ஆனால் போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளை, குறிப்பாக ஸ்டாலின் மற்றும் திமுகவினரைச் சேர்த்துக்கொள்ளாமல் திருப்பியனுப்பினர் என்பதும் கவனிக்கப்படத்தக்கது.

    பதிலளிநீக்கு

  6. தங்கள கூற்று மிகவும் சரியே ..1965 Hindi Agitation -ன் மீள் பதிவே கவனிக்க முடிகின்றது ...

    மாலி

    பதிலளிநீக்கு
  7. இன்றைய நிலையில் அறிவிப்பு வந்த பின்னும் தொடரும் போராட்டம் அலுப்பூட்டுகிறது. ஆரம்பிக்கத் தெரிந்தவர்களுக்கு முடிக்குமிடம் தெரியவில்லை. மாணவர்கள், அரசியல் உட்பட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடத் தேவையில்லை என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  8. ரூபாயின் மதிப்பிழப்பும், அம்மாவின் மர்ம மரணமும்,அதன் பின் நடந்த பதவி ஏற்பு கேலி கூத்துகள்...ஜல்லிக்கட்டு என்ற ஒத்த புல்லியில் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களை உணர்ச்சி பெற வைத்திருக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. தினமலர் வாசகர் ஒருவரின் கருத்து

    ஜல்லிக்கட்டு தடையால் நாட்டுக்காளையினங்கள் அழிந்து விட்டன. அப்படியா? ஏற்கெனவே தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன. ஆனால் ஏதோ இந்த நாங்கைந்து வருடத்தில்தான் அழிந்து விட்டது போலப் பேசுவது காளைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

    சமீபத்தில் நாட்டு நாயினங்களை வளர்த்து வரும் கடைசி இடமான சைதாப்பேட்டை அரசு நிறுவனத்தை மூடச்சொல்லி உத்தரவு வந்து விட்டது. பார்த்துக் கொண்டு சும்மாதானே இருந்தோம்?

    வெளிநாட்டு நாயினங்களை வளர்த்து அதிக காசுக்கு விற்கும் நிறுவனங்கள் லாபம் கொழிக்க நமது நாட்டு நாயினங்களை பலி கொடுத்து விட்டோம்.

    வெளிநாட்டுப் பசு இனங்கள் – நமது சீதோஷ்ணத்துக்கு ஒவ்வாத, தரங்குறைந்த பாலைத் தருகின்ற, எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய இனங்களை இறக்குமதி செய்து நம்மிடம் கொழுத்த லாபம் பார்க்க இது ஒரு வழி, தமிழ்நாட்டில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. ஆந்திரா, குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஜல்லிக்கட்டே இல்லையே? அப்போது அந்த மாநிலங்களுக்குச் சொந்தமான காளையினங்கள் அழிந்து போயிருக்க வேண்டுமே? அங்கே மட்டும் எப்படித் தழைத்திருக்கிறது?

    அடுத்தது – இப்போது நடப்பது ஜல்லிக்கட்டா? இதுதான் வீரமா? அடப்பாவிகளா.. ஏறு தழுவுதல் என்ன என்பதை அந்தக் காலத்து எம் ஜி ஆர் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தனி ஒரு மனிதனாக கூண்டுக்குள் விடப்பட்டு அங்கே இருக்கும் காளையைத் தனியாக அடக்குவதுதான் ஏறுதழுவுதல், அதுதான் வீரம்.

    மொத்தமாகப் பத்திருபது பேர் வாசலைத் தாண்டி வெளியே வரும் காளையின் மீது விழுவதும் அது ஓடும்போது கொம்பில் இருப்பதை அவிழ்த்து எடுப்பதுமா வீரம்?

    இப்போது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறியதாக மார்தட்டிக் கொள்கிறோம். மகிழ்ச்சி. அடுத்தது மாணவர்களின் போராட்டம் வலுத்து மத்திய அரசைப் பயமுறுத்திப் பணியவைத்து அவசர சட்டம் பிறப்பிக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதன் பின் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, தமிழகம் சுடுகாடு ஆகும். பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மட்டுமே வாழ முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செத்து சுண்ணாம்பாக வேண்டியதுதான். அதற்கு முன்னாடி விவசாயி என்ற இனமே தமிழகத்தில் இருக்காது. என்ன பயமுறுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா?

    மாணவர்கள் போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என்று நாம் செய்து காட்டினால்.... 1. அடுத்த வாரம் கர்நாடகாவில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் நடக்கும். அதனையடுத்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரத் தேவையில்லை என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்

    2. அதற்கடுத்த வாரம் கேரளாவில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெறும். அதனையடுத்து முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

    3. அதற்கும் அடுத்த வாரம் ஆந்திராவில் மாணவர் போராட்டம் வலுக்கும். அதனையடுத்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் விட வேண்டாம் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

    4. இப்படியே சிறுவாணியில் தடுப்பணை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை என்று தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளையும் அடைத்து விட அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படும்.

    சந்தோஷமா? அப்புறம் எல்லாம் அடுத்தது என்ன படம் ரிலீஸ் என்று ஆவலுடன் திரையரங்கில் வாசலில் ஆயிரம் ரூபாய் குடுத்து டிக்கெட் வாங்கக் காத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. (Contd) இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறதா? இருக்கிறது. உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியதை மதித்தோமா? மதித்தோம். இதுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை.

    போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல... உச்ச நீதிமன்றம். இனிமேல் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை – நீதிமன்ற அவமதிப்பு என்று பேச முடியுமா? நீதிமன்றத்தில்தான் வாதாட முடியுமா?

    மொத்தத்தில் காவிரிப் பாசன விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களைப் படுகுழியில் தள்ளியாயிற்று. மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை அழித்து விட்டு இவர்கள் மாடுகளைக் காக்கப் போகிறார்களாம்.
    விவசாயம் லாபகரமானது இல்லை என்பதோடு வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை என்பதுதான் நிலைமை. இந்த நிலையில் விவசாயிகள் மாடுகளை எங்கே பராமரிப்பது? இதனால் மாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகளையெல்லாம் வெட்டித் தின்று விட்டு காளைகளைக் காப்போம் என்று ஒரு போராட்டம்.

    நம்மாழ்வார் என்று ஒரு கிழவர். விஷத்தை விதைக்காதீர்கள். நமது பாரம்பரிய மாடு இனங்களைக் காப்பாற்றுங்கள். பசுவின் மூத்திரம், சாணம், பால், நெய், தயிர் இதை வைத்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யா மற்றும் பசுஞ்சாண உரங்களே போதும். இதனை விட்டு விட்டு விஷத்தைத் தூவி உண்ணும் உண்வை விஷமாக்காதீர்கள் என்று கத்திக் கத்தியே மாண்டு போனார். ஆனால் இன்னும் வெளிநாட்டுக் குப்பை உணவு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

    உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல். இதில் அரசியல் ஆதாயம் தேட ஒரு கும்பல். பிரிவினைவாதிகளின் ஊடுருவல். கலகம் விளைவிக்க ஒரு கும்பல். இவர்கள் கையில் மாணவர்கள்.

    காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்?

    முதலில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஒதுக்குங்கள். சுதேசி என்று சொன்னால் கெட்ட வார்த்தை மாதிரிப் பார்ப்பவர்கள் இன்று கோக் பெப்சியை எதிர்த்து கோஷம். ஆனால் பிஸாவையும் பர்கரையும் கே எஃப் ஸி யையும் ஏன் எதிர்க்கவில்லை? நமது பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களுக்கு மாறுங்கள். இதனால் மழை பொய்த்தாலும் கர்நாடகம் மறுத்தாலும் விவசாயிக்கு நல்ல தானிய உற்பத்தியும் வாழ்வாதாரமும் உறுதிப்படும். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொட்டமும் அடங்கும்.

    விவசாயி நல்ல நிலைமைக்குத் திரும்பினால் மாடுகளின் வாழ்வும் பெருகும். தினமும் ஒரு வேளையாவது கம்பு கேழ்வரகு என்று பழகுங்கள். எல்லோரும் இப்படி மாறினால் எந்த நாதாரியிடமும் தண்ணீர் வேண்டிக் கை ஏந்த வேண்டியதில்லை.

    கதராடையை உடுத்துங்கள் என்று பிரதமர் கூறியபோது கேலி செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் கிராமத்தில் கதர் உற்பத்தி செய்யும் நெசவாளிக்கு நீங்கள் வாங்கும் கதராடையினால் ஒரு நாள் உணவு கிடைக்கிறதென்றால் அதை விட வேறென்ன வேண்டும்? ஆனால் பன்னாட்டு நிறுவனங்களையும் பெருமுதலாளிகளையும் திட்டிக் கொண்டே இன்னொரு புறம் அவர்களிடமே போய் விழுகிறோம்.

    இனியாவது நமது பாரம்பரியம் என்ன என்பதை உண்மையாக உணர்ந்து தொன்மையான நமது பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள். சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்? //
      நீங்க கேட்ட கேள்விகள் முற்றிலும் மிகவும் சரியானவை. ஆனால் தமிழர்களில் பெரும்பாலோர் சிறிதும் கூட யோசிக்க தான் மாட்டார்கள்!
      உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல். இதில் அரசியல் ஆதாயம் தேட ஒரு கும்பல். பிரிவினைவாதிகளின் ஊடுருவல். கலகம் விளைவிக்க ஒரு கும்பல். இவர்கள் கையில் மாணவர்கள்.
      மிகவும் சரியாக சொன்னீர்கள்! இந்த மாணவர்கள் மீண்டும் திரும்ப வருவார்கள் என்று உசுப்பேற்றவும் ஒரு கும்பல் இருக்கிறார்கள்!

      நீக்கு
  11. அய்யா திரு கந்தசாமி அவர்களே....நீங்கள் விவசாயத்தில் PhD பட்டம் படித்து அதிலேயே விரிவுரையாளராக இருந்தீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, உங்கள் கீழ்க்கண்ட கருத்தினை படித்தபின்...."ஆளும் கட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதியே இது என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக மாணவர்களைத் தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடைபெற்று வரும் யுத்தி."...உங்களுக்கு புரியவில்லை என்றால் விவரம் தெரிந்தவரிடம் கேளுங்கள். எல்லாம் எனக்கு தெரியும் என்று "குப்பை" களை கொட்டாதீர்கள். இது என் Blog...நீ எப்படி என்னை விமர்சிக்கலாம் என்று கேட்டால் பொது மக்கள் போராட்டத்தினை கொச்சை படுத்தவும் உங்களுக்கு உரிமை இல்லை. கடைசியாக ஒன்று....உங்கள் வயது, அனுபவம் , நகைச்சுவைக்காக உங்கள் எழுத்தினை படிப்பது வழக்கம். இனிமேல் அந்த ஆர்வம் இருக்குமா என்பது சந்தேகமே.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப.கந்தசாமிஞாயிறு, 22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:02:00 IST
      //அய்யா திரு கந்தசாமி அவர்களே....நீங்கள் விவசாயத்தில் PhD பட்டம் படித்து அதிலேயே விரிவுரையாளராக இருந்தீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை//

      என்னுடைய பதிவில் கூறியிருக்கும் கருத்திற்கும் இந்தக் குறிப்பிற்கும் என்ன சம்பந்தம்? பதிவுகளில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு யாரும் என்ன விமரிசனம் வேண்டுமானாலும் எழுதலாம். அது அவர்கள் உரிமை. ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதரை விமரிசிக்க பதிவைப் படிக்கும் எவருக்கும் உரிமை இல்லை.

      விவசாயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கூறினால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

      //இனிமேல் அந்த ஆர்வம் இருக்குமா என்பது சந்தேகமே.. மிக்க நன்றி.//

      என் பதிவுகளை நான் என் திருப்திக்காக எழுதுகிறேன். அதைப் படிப்பதும் படிக்காமலிருப்பதும் அவரவர்கள் விருப்பம்.

      நீக்கு
  12. கொஞ்சம் கொஞ்சமாக பாதை மாறிக் கொண்டிருக்கிறது போராட்டம்... எங்கே எப்படி முடியும் என்று பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
  13. அமைதியாகச் சென்று கொண்டிருந்த போராட்டம் பாதை மாறுவதுபோல் தெரிகிறது மக்களின் நாடி த்துடிப்பை அறியாவிட்டால் தமிழகமும் இன்னும் ஒரு ஜம்மு காஷ்மீர் போல ஆகலாம்

    பதிலளிநீக்கு
  14. ஐயா மய்ய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது என்ற எண்ணத்தால் ஏற்பட்ட கோபமே இந்த போராட்டம் என எண்ணுகிறேன். இந்த போராட்டம் ஜல்லிகட்டுக்காக மட்டும் நடப்பதாக நினைக்கவில்லை. ஆனால் இது போன்ற போராட்டங்கள் நடக்கும்போது ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்துவோரின் கையைவிட்டு அது போய்விட வாய்ப்பு உண்டு.

    பதிலளிநீக்கு