சனி, 6 மார்ச், 2010
அப்பாடா, ஒரு வழியாக நித்திய ஆனந்த சுனாமி ஓய்ந்தது!
பெரியவரின் புண்ணியத்தில் ஒரு வழியாக சன் டிவி சுனாமி ஓய்ந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் மேட்டர் கோர்ட்டுக்கு போய்விடும். பிறகு ஒருவரும் வாயைத்திறக்க முடியாது. அதற்குள் நாம் சில விஷயங்களை யோசிப்போம்.
எப்படி இந்த சாமியார்களுக்கு மவுசு வருகிறது? இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனங்கள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். பணம், வீடு, வாசல், மனைவி, மக்கள், தோப்பு, துரவு என்று இருந்தாலும் அவர்கள் ஆழ்மனத்தில் ஒரு வெறுமை அல்லது பச்சாதாபம் அல்லது குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. பல காரணங்களினால் அவர்களால் மனைவி மக்களுடன் வெளிப்படையாகவும் மனம்விட்டு பேசமுடிவதில்லை. உறவினர்களுடன் நல்ல முறையில் பழகமுடிவதில்லை. மனம்விட்டு பேசக்கூடிய நண்பர்களை வளர்க்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவையான மன ஆறுதல் கிடைக்காததால் அதைத்தேடும்போது இந்த சாமியார்கள் அவர்களுக்கு தேவையான ஆறுதலை தருகிறார்கள். சாமியார்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ நிபுணர்கள். இந்த மாதிரி வரும் நபர்களுக்கு எப்படி, எதைச்சொன்னால் அவர்கள் மயங்குவார்கள் என்று நன்றாகத் தெரியும். அந்தந்த பக்தர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அருள் வழங்கி அவர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வலையில் சிக்கியவர்கள் வெளியில் வருவது மிகவும் கடினம்.
இப்படி வலைக்குள் விழுந்தவர்களிடம் அவர்களிடம் இருந்து என்ன கறக்க முடியுமோ அதைக்கறப்பதில் இந்த சாமியார்கள் வல்லவர்கள். பணம் இல்லாதவர்களிடம் உழைப்பைக் கறப்பார்கள். செல்வந்தர்களிடம் பணத்தைக் கறப்பார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்களிடம் என்ன கறப்பார்கள் என்பதை இந்த நான்கு நாட்களாக மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒளி, ஒலி, எழுத்து, போட்டோ, வீடியோ, இன்டெர்நெட் ஆகிய எல்லா ஊடகங்களின் மூலமாகவும் பார்த்து அனுபவித்தோம்(!).
சாமியார்கள் அப்பாவி மக்களை நம்பவைத்து மோசடி செய்வது காலங்காலமாக நடந்து வந்தாலும், நம் மக்கள் அதிலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. பைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அங்கே கொண்டுபோய் பணத்தைப் போடுவதும் அவன் ஏமாற்றி ஓடினபிறகு குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடுவதும் ஆன இந்த டிராமா 6 மாதத்திற்கு ஒரு முறை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அதே மாதிரி இந்த சாமியார்களின் டிராமாவும் நடந்துகொண்டேதான் இருக்கும்.
நம் ஜனங்கள் திருந்தப்போவதுமில்லை. சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க ஐயா. நம்ம ஜனங்க இன்னும் பல காலத்துக்கு சாமியார் பின்னாலயும் பைனான்ஸ் கம்பெனிக்காரம் பின்னாடியும் ஓடிட்டுத்தான் இருப்பாங்க.
பதிலளிநீக்குஇந்தப் பொம்பளைங்க எதுக்கு சாமியார் பின்னால ஓடராங்க
பதிலளிநீக்குஇந்த பெண்கள் ஏன் சாமியார்கள் பின்னால் ஓடுகிறார்கள்?
பதிலளிநீக்குNo the main reason for the popularity fo this news is Ranjithaa.
பதிலளிநீக்குSuppose NItthi would have s-exula relationship with Kovai sarala or vadivukkarasi, the news would not have become this much popular.
நிஜத்தை சந்திக்க, அதனுடன் இசைத்து போக துணிவு வேண்டுமல்லவா? அது இல்லாமல் போயிருக்கலாம்.
பதிலளிநீக்குஏதோ ஒரு" பாவனையில் "அவர்கள் அமைதி காண விழையலாம். அந்த பாவனையே அவர்களின் வாழ்கை முறையாக மாறி விடும்போது இந்த சாமியார்களுக்கு அது மிகவும் சாதகமாகி விடுகிறது. மிக எளிதாக அவர்கள் கடவுளாகி விடுகின்றனர்.98% சதவீத மக்கள் இப்படி பாவனையில் வாழ்வதே விரும்புகின்றனர். ஏன் என் குடும்பத்திலும் கூட இது போன்ற நபர்கள் இருக்கிறார்கள். சினிமா, டி.வி. இவைகளே எல்லாம் என்று அதில் மாய்த்து போகும் படிக்க வேண்டிய பிள்ளைகள்.காலில் முள் தைக்கும் போது மட்டுமே வலிக்கும் அல்லவா?
என்றாவது நிஜம் வந்து நேரில் நின்றால் தாங்க இயலாமல் .............................................
அதெல்லாம் சரி. கீழ அந்த அம்மா எதுக்கு குனிஞ்சிருக்கு ?
பதிலளிநீக்குVels அவர்களுக்கு, நித்தியிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
பதிலளிநீக்குகக்கு-மாணிக்கம் அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை.மனித நாகரிகம் இப்படி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்பதுதான் என் போன்ற கிழடுகளின் ஆதங்கம்.
பதிலளிநீக்குசார், நீங்கள் என் வலை தளம் வந்து கருத்துக்கள் இட வேண்டும் .
பதிலளிநீக்குFollowers இல் இருகின்றீர்கள்.மகிழ்ச்சி,கருத்துக்களை பகிர்வது இன்னமும் சிறப்பானதே !
திரு. மாணிக்கம் அவர்களே,
பதிலளிநீக்குஉங்க ஊருக்கு போய்ட்டு வந்துட்டேன் !!!
உங்களைச் சும்மா மாணிக்கம்னு கூப்படலாமா இல்லை பொதுக்கூட்ட பாணியில் திரு. மாணிக்கம் அவர்களே என்றுதான் கூப்பிட வேண்டுமா?
இது பழக்க தோஷம். 38 வருடங்களாக விவசாயிகளின் மத்தியில் இப்படியே பேசி பழகிப்போய்விட்டது. யாரையாவது கூட்டத்தில் ஒருமையில் அழைத்துவிட்டால் அங்கு ஒரு பிரளயமே ஏற்பட்டுவிடும். அதனால்தான் இந்த முன் ஜாக்கிரதை.(முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஜோக்ஸ் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)
அய்யா! தங்கள் கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், பதிவின் முடிவில் இருக்கும் பெண் படம் தேவையா என்று கேட்க தோன்றுகிறது.
பதிலளிநீக்குமுகுந்த் அம்மா அவர்களுக்கு,
பதிலளிநீக்கு//அய்யா! தங்கள் கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், பதிவின் முடிவில் இருக்கும் பெண் படம் தேவையா என்று கேட்க தோன்றுகிறது.
7 March 2010 06:06//
அம்மா அல்லது அய்யா,
நீங்கள் சொல்லிய கருத்து மிகவும் சரியானதே. இதோ அந்த படத்தை நீக்கிவிட்டேன். உங்கள் மனத்தை புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு உங்கள் மன்னிப்பையும் கோருகிறேன்.
அந்த படத்தை ஏன் போட்டேன் என்பதை என் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
///நம் ஜனங்கள் திருந்தப்போவதுமில்லை. சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை.///
பதிலளிநீக்குஐயா!சுனாமி ஓய்ந்து விட்டதா?இப்போ தானே (ஆ)சாமி சட்டப்படி தான் தவறு இழைக்கவில்லை என அறிக்கைப் போர் தொடங்கியுள்ளீரா? முடியுமா?
பதிலளிநீக்குயோகன்-பாரிஸ் அவர்களே,
பதிலளிநீக்குஎனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
அந்த விடியோவை நன்றாக கவனித்தால் பல முரண்பாடுகள் தெரிகின்றன. முதல் சீனில் அந்தப் பெண் வந்து ஏதேதோ செய்கிறாள்.ஆனால் சாமி அசையாமல் படுத்திருக்கிறார். இது இயற்கையாக இல்லை.
பிறகு ஏறக்குறைய எல்லா சீன்களிலும் சாமியாரின் முகம் அந்தப்பெண்ணால் மறைக்கப்பட்டே காண்பிக்கப்படுகிறது.
எனக்கென்னமோ இது ஒரு மிக மிக சாமர்த்தியமாக எடுக்கப்பட்ட வடியோ மாதிரிதான் தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
//திரு. மாணிக்கம் அவர்களே,
பதிலளிநீக்குஉங்க ஊருக்கு போய்ட்டு வந்துட்டேன் !!!
உங்களைச் சும்மா மாணிக்கம்னு கூப்படலாமா இல்லை பொதுக்கூட்ட பாணியில் திரு. மாணிக்கம் அவர்களே என்றுதான் கூப்பிட வேண்டுமா?//
Dr.P.Kandaswamy said..
சார், வயதிலும், அனுபவத்திலும் நான் உங்களை விட சிறியவன்.மேலும் நான் இவைகளை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. புனே நகரில் பணியாற்றும் நண்பர் ஜெயகாந்த் என்னை "மச்சி " என்று தான் அழைப்பார், எழுதவார்.நான் அவரை "மாப்பிள்ளை" என்று அழைப்பேன்.பிரியமும் அன்பும் இருந்தால் போதும் எப்படி அழைத்தால் என்ன? என் இளைய பிள்ளையிடம் போனில் பேசும்போது சில நேரங்களில் அன்பு அல்லது கொழுப்பு அதிகமாகி அது என்னை "போடா .....வாட....பன்னி....எருமை " என்றெல்லாம் கூப்பிடும். எனக்கு சிரிப்பாய் வரும். அந்த பிள்ளை B.Com முதல் வருடம் படிக்கிறது.
// சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை. //
பதிலளிநீக்குசாமியார்களின் மக்கள் சேவை ஒரு 'அட்டு' ஊழியம் !
:)
கண்ணன்,
பதிலளிநீக்குசுமார் 60 வருடங்களுக்கு முன் வை.மு. கோதைநாயகி என்கிறவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பக்கதை (நாவலகள்) எழுதியுள்ளார்கள். அந்தக்கதைகளிலேயே அந்தக்காலத்து சாமியார்கள் பிள்ளையில்லாதவர்களுக்கு எப்படி பிள்ளை வரம் கொடுத்தார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.
ஆகவே இது ஒன்றும் புதிதாக வந்தது இல்லை. என்ன, டெக்னாலஜி மாற்றம் வந்து இருக்கிறது.