செவ்வாய், 16 மார்ச், 2010
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?
இது காலம் காலமாக விதண்டா வாதக்காரர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப்பதில் கிடையாது. அப்படிச்சொன்னால் “அப்புறம் நீ என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணறே?” அப்படீன்னு மறு கேள்வி வரும்.
இந்த முன்னுரை எதற்கு என்றால், அடுத்து படிக்கவும்.
என்னுடைய ஒரு பதிவில் கோவி கண்ணன் சொன்னது.
//அடுத்த பதிவு எதை பற்றி கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //
“இதற்கு ஹாய் அரும்பாவூர் சொன்னது”
//இது என்ன சார் புது கதை? யார் அவிழ்த்து விட்டார்கள்?
இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?
நானே சொல்லிவிடுவேனே?
இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!
அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை
இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!
கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.
ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.
மீண்டும் சந்திப்போம்.//
அரும்பாவூர் ஏறக்குறைய சரியான பதில் சொல்லிவிட்டார். நானும் கொஞ்சம் சொல்லாவிட்டால் என்னுடைய டாக்டர் பட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடுமல்லவா? அதற்காக.
கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன.
இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?
இல்லே, கோழி வறுவல்தான் முன்னே வந்ததா?
கருவேல மரம் வளர்ந்ததால் மழை குறைந்ததா? மழை குறைந்ததால் கருவேல மரம் வளர்ந்ததா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடசீல போட்டிருக்கீங்களே அந்தப்படம் நல்லாருக்குதுங்கோ! :)
பதிலளிநீக்குமசக்கவுண்டன் சொன்னது:
பதிலளிநீக்கு//கடசீல போட்டிருக்கீங்களே அந்தப்படம் நல்லாருக்குதுங்கோ! :)//
ஏனுங்க கவுண்டரே! எத்தனை பெரிய விஷயத்தைப்பத்தி எழுதியிருக்கிறேன். அதுல உங்களுக்கு அந்தப்படம்தான் புடிச்சிருக்குதுங்களா?
ஏனுங்க, அவுங்கவுங்களுக்குப் புடிச்ச விசயம்தானுங்க மொதல்லெ கண்ணுக்குப்படும்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குசார் அருன்பாவூர் அந்த கேள்வி மட்டுமே கேட்டிருந்தார்.
பதிலளிநீக்குஅவருக்கு அந்த சிறு விளக்கத்தை கொடுத்தது அடியேன் தான்.
//கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன//
இதே போன்ற ஒரு விளக்கத்தை தர இருந்தேன். மேற்கண்ட பண்பு ADAPTATION - தகஅமைவு என்று கூறலாம்.இந்த வகை தாவரங்கள் XEROPHYTES - அதாவது வறண்ட பிரதேச தாவரங்கள் என்று வைத்துகொள்ளலாம். தமக்கு அரிதாக கிடைக்கும் நீரை இவைகள் சிக்கனமாக பயன் பயன் படுத்துகின்றன."நீர் ஆவி ஆதல்" என்ற நிகழ்வை குறைப்பதற்காக இவ்வகை தாவரங்களின் இலைகள் மிகச்சிறியவையாக இருக்கு. சிலவற்றில் இலைகள் மாறு பாடு அடைந்து முட்களாக அமைந்திருக்கும்.வேர்கள் மூலம் போதிய நீர் கிடைக்காதபோது காற்றிலிருந்து ஈரப்பதத்தை( பகல் நேரங்களில் ) எடுத்துக்கொள்கின்றன உண்மைதான்
ஆனால் இதே தாவரங்களில் நீர் ஆவியாவது இரவு நேரங்களை நடைபெறுகிறதே ! இத பற்றி யாரும் வாய்திறக்க மாட்டார்கள் (தெரிந்தால் அல்லவோ) .எந்த வகை தாவரங்களின் அமைப்புக்கும் மழை பொழியாமல் இருப்பதற்கும் துளியும் சம்பந்தமில்லை.எனவே இது போன்ற புருடாக்களை நம்பாதீர்கள்.
சார் என் விளக்கம் சரிதானே!
Thanks for sharing good things doctor P. KANDASAMY
பதிலளிநீக்குதேனம்மைலக்ஷ்மணண் அவர்களுக்கு,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பல.
ஐயா! வரண்ட தாவர விளக்கம் நன்று!கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? அது பற்றி எனக்குத் தெரியாது.எதையோ சட்டியில் வைத்துச் சமைக்கத் தெரியும்.
பதிலளிநீக்குகருவேல மரம்தான் கலப்பைமுட்டி செதுக்கறதுக்கு நல்ல மரம். அதச்சொல்லாம விட்டுட்டீங்களே.
பதிலளிநீக்குயோகன் பாரிஸ் சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயா! வரண்ட தாவர விளக்கம் நன்று!கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? அது பற்றி எனக்குத் தெரியாது.எதையோ சட்டியில் வைத்துச் சமைக்கத் தெரியும்.//
நம்மைப்போன்றவர்களுக்கு எது தேவைன்னு தெரிஞ்சுதான் அந்தக்கடைசி படத்தைப்போட்டிருக்கிறேன்.
ஆகா தட்டில் உள்ள கோழிகூவிக் கூப்பிடுதே!
பதிலளிநீக்குதகவலும் அருமை ம்ம்ம்ம் கோழியும் அருமை டாக்டர்.
http://niroodai.blogspot.com
வருகைக்கு ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குநானும் அந்த தட்டில இருக்கற மாதிரி கோழி வறுவல் செய்வேனே! ஊருக்கு வந்தா, வீட்டுக்கு வாங்க, செஞ்சு காட்டறேன்.
இதற்கு கொஞசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடை நமது மணி மேகலையில் உள்ளது.
பதிலளிநீக்கு"பனை முந்தியதோ முட்டை முந்தியதோ என்றால்,
எப்பனைக்கு எம்முட்டை என்க"
அதேபோல கோழியக் காட்டினால் அது வந்த முட்டை முதலில் வந்தது.
முட்டையைக் காட்டினா அதை இட்ட கோழி முதலில் வந்தது.
ஒரு முட்டையிலிருந்து வந்த கோழி அந்த முட்டையைப் போட்டிருக்க முடியாது.
ஒரு கோழி தான் போட்ட முட்டையிலிருந்து வந்திருக்க முடியாது.
மத வாதிகளைக் கேட்டீங்கன்னா ஆதியில் கடவுள் ஒரு கோழி, ஒரு சேவல், மர்றும் அவங்களை பிரியாணி போட ஒரு மனுஷனையும் படைத்தார் னு சொல்லுவாங்க.
ரங்குடு சார்,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் மேற்கோள் அருமையாகப்பொருந்துகிறது.
நான் ஒரு கேள்வியாகத்தான் இதை கேட்டேன் ஏன் என்றால் எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகத்தில் இல்லை அது உண்மையா இல்லை பொய்யா ?விளக்கவும் இதைதான் நான் கேட்டேன் ஆனால் இதில் என் தவறு என்பது இல்லை
பதிலளிநீக்குஒரு விசயத்தை அந்த துறை சார்ந்த ஒருவர் இடம் கேட்கலாம் என்று தான் அந்த கேள்வியை கேட்டேன்
தவறு என்றால் மன்னிக்கவும்
மற்றபடி உங்கள் வெற்றி பதிவுக்கு நானும் ஒரு காரணாமாக இருப்பதில் மகிழ்ச்சியே
இன்னும் உங்கள் தொடர் வெற்றி பதிவுகளுக்கு வாழ்த்தும் உண்மை நெஞ்சம் முபாரக் (ஹாய் அரும்பாவூர்)
அரும்பாவூர் தம்பி,
பதிலளிநீக்குநான் எதையும் தவறாகவே எண்ணவில்லை, தம்பி அரும்பாவூர்.
என்ன விஷயம் என்றால் இந்த மண்-தண்ணீர்-செடி(Soil-Water-Plant relationship) இவைகளுக்குள்ள உறவுகள் பற்றினதுதான் என்னுடைய Ph.D. ஆராய்ச்சி. அதனால்தான் நானும் உங்கள் விளக்கத்திற்கு மேல் ஒரு விளக்கம் கொடுத்தேன். மற்றபடி வேறொன்றும் தவறு எங்கும் இல்லை.
கடசீல எத்தனை பெரிய ஆவியாவது
பதிலளிநீக்குவாய்திறக்க மாட்டாதா ?
ஏன் என்றால் மண்-தண்ணீர் முட்டையிலிருந்து வந்த கோழி இவ்வுலகத்தில் இல்லை
வரண்ட தாவரம் போன்றவர்களைக் கேட்டீங்கன்னா வாய்திறக்க மாட்டார்கள், பிரியாணி போட அந்த துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் மறு கேள்விக்குப் பதில் கிடையாது.
கண்ணன்
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமுள் மரங்கள் பொதுவாக மருத்துவ குணம் உடைய மரப்பட்டைகள் உடையது என்பதாக என் எண்ணம், எது ஒன்று பயன்பாட்டுடன் இருக்கிறதோ அவற்றின் விரைவான வேட்டையை, அழிவை தடுக்க அதற்கு இயற்கையும் ஒரு பாதுகாப்பை வழங்கி இருக்கும் என்றே கருதுகிறேன். முள் மரங்களை சரியான முறையில் ஆராய்ந்தால் நமக்கு தேவையான அனைத்து மருந்து பொருள்களும் அதிலிருந்து கிடைக்கலாம் என்று முள் மரங்களைச் செடிகளைப் பார்க்கும் போது நினைக்கிறேன். இது சரியா என்று தாங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்
கோவி.கண்ணன் சொன்னது:
பதிலளிநீக்கு//முள் மரங்கள் பொதுவாக மருத்துவ குணம் உடைய மரப்பட்டைகள் உடையது என்பதாக என் எண்ணம், எது ஒன்று பயன்பாட்டுடன் இருக்கிறதோ அவற்றின் விரைவான வேட்டையை, அழிவை தடுக்க அதற்கு இயற்கையும் ஒரு பாதுகாப்பை வழங்கி இருக்கும் என்றே கருதுகிறேன். முள் மரங்களை சரியான முறையில் ஆராய்ந்தால் நமக்கு தேவையான அனைத்து மருந்து பொருள்களும் அதிலிருந்து கிடைக்கலாம் என்று முள் மரங்களைச் செடிகளைப் பார்க்கும் போது நினைக்கிறேன். இது சரியா என்று தாங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.//
முட்கள் அந்த மரங்களின் பாதுகாப்பிற்காக உருவானவையே.மற்ற செடிகொடிகள் இல்லாத சூழ்நிலையில் பிராணிகளிடமிருந்து தற்காப்பிற்காக முட்கள் பிரயோஜனப்பட்டன.
கருவேலம்பட்டையின் கஷாயம் மருத்துவ குணம் உடையது. அதுவும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டுமே. வெள்வேலும் இதே உபயோகம் உடையது. மற்ற முள் செடிகளும் உபயோகமாகலாம். எனக்கு அவ்வளவு தெரியவில்லை.
Dear Mr.KP Sir,
பதிலளிநீக்குI dont know anything about agriculture and cultivation. Since you have done your doct. in that field, why dont you start writing basics of Agriculture.
After 10 years, I wanted to do Agri.
Thanks
Ramudu