சனி, 20 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 1





கடவுளைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. அதனால் அதைவிட்டுவிட்டு என் சொந்தக்கதையை ஒரு பதிவாக எழுதலாம் என்று இதை எழுதுகிறேன். முதலில் நான் வேலைக்கு சேர்ந்த கதையில் ஆரம்பிப்போம். நண்பர் அரும்பாவூர் அவர்களும் ஆசைப்பட்டார்கள்.

நான் கோயமுத்தூரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்து, ஓய்வு பெற்று, வாழ்ந்து கொண்டிருப்பவன். நான் பிறந்தது சாதாரண, ஏழ்மைக்கு சற்றே மேம்பட்ட குடும்பம். மூன்று வேளை சாப்பாடு, இரண்டு செட் டிரஸ் உண்டு. அதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது. ஒன்றாம் கிளாஸ் முதல் பிஎச்டி வரை எல்லாம் உள்ளூரிலேயே படித்து முடித்து விட்டேன். காரணம் வெளியூர் படிப்பு என் வீட்டு நிலைமையில் சாத்தியப்படாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் படிப்பு செலவு அன்று அதிகம் இல்லை. முனிசிபல் ஆரம்ப பள்ளி, முனிசிபல் ஹைஸ்கூல், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ், கவர்மென்ட் அக்ரி காலேஜ் என்று எல்லாம் சலீசாக இருந்தன. தவிர எல்லாம் வீட்டிலிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தன. போக்குவரத்து சுலபம். இதைவிட முக்கியமான காரணம், நான் எந்த வகுப்பிலும் பெயில் ஆகாமல் படித்தேன். ஏதாவது ஒரு வகுப்பில் பெயிலாகி இருந்தால் உடனே என் தந்தையார் என்னை ஒரு வொர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டிருப்பார். கோயமுத்தூரில் அப்போது புதிது புதிதாக வொர்க் ஷாப்புகள் தொடங்கிக்கொண்டு இருந்தன. (அப்படி நடந்திருந்தால் ஒருக்கால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ என்னவோ? இப்பவும் ஒண்ணும் பெரிசா குறைவில்லை).

மத்த படிப்பையெல்லாம் விவரிக்கவேண்டியதில்லை. கடைசியாகப் படித்த விவசாயப் படிப்புதான் நான் இப்போது ஏதோ ஓரளவுக்கு மானத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.

தொழில் கல்வி என்று சொல்லப்படுபவை, அன்றும் இன்றும், நான்கு. மருத்துவம் (5 வருடம்), கால்நடை மருத்துவம், பொறியியல் (இரண்டும் 4 வருடம்), விவசாயம் (3 வருடங்கள்). எத்தனை வருடப் படிப்பு என்பதை வைத்துத்தான் அந்தப் படிப்புக்கு மதிப்பு. அப்படிப் பார்க்கும்போது மருத்துவம்தான் முதல் ரேங்கில் இருந்தது. மேலும் அது உயிர்காக்கும் பணி என்பதால் அது தனி சிறப்புடன் விளங்கியது. அடுத்து பொறியியலும் கால்நடை மருத்துவமும். நான்காண்டுகள் படிப்பதால் அவை இரண்டும் மருத்துவத்திற்கு ஒரு படி கீழாகவும் ஆனால் விவசாயத்தை விட மேலானதாகவும் கருதப்பட்டன. விவசாயப்படிப்பு நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையைச் சார்ந்திருந்தாலும் தொழில் கல்வியில் கடைநிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

விவசாயக்கல்லூரியில் நாங்கள் தோட்டவேலை செய்முறை பயிற்சிக்கு போகும்போது மம்முட்டி (மலையாள நடிகர் மம்முட்டியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) எடுத்துக்கொண்டு போவோம். இதனால் விவசாயக்கல்லூரிக்கு “மம்முட்டி காலேஜ் என்று மற்ற தொழில் கல்லூரி மாணவர்கள் கேலி செய்வதுண்டு. நாங்களும் “மம்முட்டி இல்லைன்னா உங்களுக்கு சோத்துக்கு லாட்டரி என்று பதில் கேலி செய்வோம்.

நான் படித்த கால கட்டம்தான் (1953-56) விவசாயத்தில் பசுமைப்புரட்சியின் ஆரம்ப கட்டநிலை. விவசாயம் நிலைப்பட்டால்தான, நாடு வளமாக இருக்கமுடியும் என்று நேரு தலைமையிலான அரசு, கொள்கை ரீதியில் முடிவு எடுத்து நாடு முழுவதிலும் பல விதமான விவசாய முன்னேற்றத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனால் விவசாய இலாக்காவிற்கு அதிக அளவில் விவசாயப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் நான் விவசாயப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் ரிசல்ட் வந்தது. நான் பாஸ். சரி, அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. திறந்து பார்த்தால்.....(கொஞ்சம் பொறுங்க)





என்னுடைய அன்பு மாணவரும், சக ஆராய்ச்சியாளரும் தற்போதைய விவசாயப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான முனைவர் ப.முருகேச பூபதி அவர்கள்















36 கருத்துகள்:

  1. "முனிசிபல் ஆரம்ப பள்ளி, முனிசிபல் ஹைஸ்கூல், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ், கவர்மென்ட் அக்ரி காலேஜ் என்று எல்லாம் சலீசாக இருந்தன"

    அப்போ அது ஒரு பொற்காலம்
    அழகிய நடை ,சிறப்பான விளக்கம் தொடரட்டும் உங்கள் கால எந்திரத்தின் அழகிய பின்னோக்கிய பயணம்
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி, அரும்பாவூர்.

    ரொம்பவும் பாஸ்ட்டா, பர்ஸ்ட்டா வந்துட்டீங்க

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்ல பதிவு. உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

    புத்தகம் பையிலே
    புத்தியோ பாட்டிலே
    பள்ளியைப் பார்த்ததும்
    ஒதுங்குவோம் மழையிலே


    நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்
    உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    இல்லையே நம்மிடம்


    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாசமென்றும் நேசமென்றும்
    வீடு என்றும் மனைவி என்றும்
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?
    அமைதி எங்கே?

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)


    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன் சிறியவன்
    நல்லவன் கெட்டவன்
    உள்ளவன் போனவன்
    உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    :-))

    பதிலளிநீக்கு
  5. என்னையா இடையில நிறுத்தி விட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
  6. இப்பொழுதுதான் ஒருவர் வேலைய விட்ட கதை கேட்டுட்டு வாரேன்.இப்ப நீங்க:)

    நீங்க கோவையா?ஊர் கடைகளை அதிகமா சுத்தறதனால கவனிக்க தவறி விட்டேன்.

    மம்முட்டி காலேஜுக்கும் அப்புறம் மவுசு வந்ததுங்களே.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு அய்யா. எங்களை போன்றவர்களுக்கு உபயோகமான ஒன்று.

    பதிலளிநீக்கு
  8. புதுவை சிவா அவர்களுக்கு, வருகைக்கும் கவிதைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உருத்திரா சொன்னது:

    //என்னையா இடையில நிறுத்தி விட்டீர்கள்?//

    ஆமாம் நண்பரே.நிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது எனக்கருதினேன். நிறுத்தி விட்டேன்.

    காலமறிந்து வினை செயின் ஞாலம் கருதினும் கைகூடும். காலம் மாறி எதையும் செய்யக்கூடாதல்லவா?

    பதிலளிநீக்கு
  10. கல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு நீங்கள் காட்சி.
    உங்கள் மாணவர் துணை வேந்தர் என்பது எத்துணை சிறப்பு! குருவை மிஞ்சிய சீடர்?
    தெரியாது. ஒரு வேளை நீங்கள் இவரை விட மேலாக இருக்க வாய்ப்பு உண்டல்லவா?
    ஆசிரியர் எப்போதும் மேல் தானே?

    பதிலளிநீக்கு
  11. ராஜநடராஜன் சொன்னது:

    //இப்பொழுதுதான் ஒருவர் வேலைய விட்ட கதை கேட்டுட்டு வாரேன்.இப்ப நீங்க:)//

    நான் வேலைக்கு சேர்ந்தது 1956 ல். அன்றைக்கும் இன்றைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடுக்ள உள்ளன.

    //நீங்க கோவையா?ஊர் கடைகளை அதிகமா சுத்தறதனால கவனிக்க தவறி விட்டேன்.//

    ஆமாங்க.சாயிபாபா காலனி, கே.கே.புதூர் 6ம் நெ.வீதி, 450ம் நெ.வீடு. போன்: 2444441

    இந்தப்பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்க.
    நான் உங்க பிளாக்கப்பார்த்துட்டு இருக்கேன்.

    //மம்முட்டி காலேஜுக்கும் அப்புறம் மவுசு வந்ததுங்களே.//
    சாப்பாடு சாப்பிடாம யாரும் இருக்க முடியாதில்லிங்க!

    பதிலளிநீக்கு
  12. ஐயா!
    நீங்க படிக்கும் போது நான் பிறக்கவேஇல்லை. மம்முட்டியா? நீங்க மம்மட்டி-மண்வெட்டியை சொல்கிறீர்களா?
    //கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன்//
    அடடா ஊர் சுற்றியதைக் கூட எவ்வளவு
    சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.
    தபாலைத் திறந்து பார்த்தால்...என வாயைத் திறக்க வைத்து விட்டீர்கள்.அனுபவம் நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  13. நாளும் நலமே விளையட்டும் சொன்னது:

    //கல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு நீங்கள் காட்சி.//

    உண்மை. நான் படிக்கமுடிந்த சூழ்நிலையை வணங்குகிறேன்.


    //உங்கள் மாணவர் துணை வேந்தர் என்பது எத்துணை சிறப்பு! குருவை மிஞ்சிய சீடர்?

    தெரியாது. ஒரு வேளை நீங்கள் இவரை விட மேலாக இருக்க வாய்ப்பு உண்டல்லவா?
    ஆசிரியர் எப்போதும் மேல் தானே?//

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்.
    தன்னைவிட தன் சிஷ்யனின் மேன்மை கண்டு உவப்பவன்தான் உண்மையான குரு.

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ஹூம்... இது சரியில்ல. தலைப்புல போட்டது வர்றதுக்குள்ள தொடரும் போடறது கொஞ்சம் கூட சரியில்ல! 

    சார், எனக்கு சில சந்தேகங்கள் :

    தோட்டக் கலையும், விவசாயமும் வேறே வேறேயா?

    நீங்க படிச்சதில தோட்டக் கலை வருதா?

    அப்படின்னா வீட்டுத் தோட்டம் போடுவது பற்றி நீங்க எழுதலாமே... எல்லாருக்கும் பிரயோஜனப்படும்.

    மண்ணைத் தயாரித்தல், விதையிலிருந்து குழந்தைச் செடி வரவ்ழைத்தல், அதை மேலும் வளர்த்தல் இதெல்லாம் எப்படின்னு தெரிஞ்சிக்க ஆசை. அதுவும் காய்கறிச் செடி, மற்றும் வேகமா வளர்ற நிழல் தரும் மரங்கள் குறித்து எழுதினா எல்லாருக்கும் பயன்படும்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  15. யோகன்-பாரிஸ் சொன்னது:

    //ஐயா!
    நீங்க படிக்கும் போது நான் பிறக்கவேஇல்லை.//

    இப்ப புரிஞ்சுதுங்களா, நானு எப்பேர்ப்பட்ட பழங்கட்டையின்னு.

    //மம்முட்டியா? நீங்க மம்மட்டி-மண்வெட்டியை சொல்கிறீர்களா?//
    மண்வெட்டி என்பதுதான் சரியான சொல். ஆனால் பேச்சு வழக்கிலே மமட்டி, மமுட்டி, மம்மட்டி, மம்முட்டி என்று பலவிதமாக உச்சரிக்கப்படுகிறது.

    //கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன்//
    அடடா ஊர் சுற்றியதைக் கூட எவ்வளவு
    சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.//
    ஆமாங்க, நான் அந்தக்காலத்தில ஊர் சுத்திட்டிருந்தேன் என்று மெடிகல் காலேஜ் படிக்கும் பேரன் முன்னாடி கூறமுடியுமா?

    //தபாலைத் திறந்து பார்த்தால்...என வாயைத் திறக்க வைத்து விட்டீர்கள்.அனுபவம் நல்லாயிருக்கு!//

    ஏனுங்க, என் வாழ்க்கையில் எத்தனை தொடர் கதைகள் படித்திருப்பேன். எங்கே தொடரும் போடவேண்டும் என்பது தெரியாதுங்களா?

    பதிலளிநீக்கு
  16. ஜவஹர் சொன்னது:

    //தோட்டக் கலையும், விவசாயமும் வேறே வேறேயா?

    நீங்க படிச்சதில தோட்டக் கலை வருதா?//

    Agriculture = விவசாயம்
    Horticulture= தோட்டக்கலை

    நான் படித்த காலத்தில் விவசாயப்பட்டப்படிப்பு மட்டுமே இருந்தது.

    நான் படித்தவைகள்:

    விவசாயப்பயிர்கள்
    தோட்டக்கலைப்பயிர்கள்
    சிவில் இஞ்சினீயரிங்க்
    மெக்கானிகல் இஞ்சினீயரிங்க்
    மாட்டு வைத்தியம்
    பயோகெமிஸ்ட்ரி
    ஜெனிடிக்ஸ்
    இன்னும் பல

    ஆகவே விவசாயப்படிப்பு விவசாயிக்கு எல்லாவித ஆலோசனைகளும் வழங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    காலப்போக்கில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பட்டப்படிப்புகள் வந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
  17. படிக்க நல்ல சுவாரசியமாக உள்ளது .தொடருங்கள்....

    இப்போது பல வகையான படிப்புகளும் வந்ததால் எதை எடுத்து படிப்பது என்று குழப்பம்...

    இருந்தாலும் மருத்துவம் அல்லது பொறியியல் எடுத்து படிக்கலாம் என்றால் அதிலும் முடிவு எட்டவில்லை...

    நாங்கள் NRI மருத்துவம் கிடக்குமா ?சந்தேகம் தான்.....

    பதிலளிநீக்கு
  18. Malar said:

    //இப்போது பல வகையான படிப்புகளும் வந்ததால் எதை எடுத்து படிப்பது என்று குழப்பம்...
    நாங்கள் NRI மருத்துவம் கிடக்குமா ?சந்தேகம் தான்.....//

    படிப்பது ஆணா,பெண்ணா, படித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம்,இவைகள் முக்கியம். கல்விக்கு வந்த சோதனை என்னவென்றால், காலேஜ் சீட்டுகள் ஏலம் போடப்படுகின்றன.

    இன்றைய நிலையில் என்னைப்போன்ற பழுத்த பழங்களாலேயே உருப்படியான பரிந்துரைகள் கொடுக்க முடியவில்லை.வருத்தப்படத்தான் முடிகிறது.

    பதிலளிநீக்கு
  19. Jennifer said:

    //படிக்க ஆர்வமாக இருக்கு ஐயா//

    ரொம்ப ரொம்ப நன்றி, ஜென்னிபெர்.

    பதிலளிநீக்கு
  20. வர ,கொஞ்சம் லேட்டா ஆயிபோச்சு.
    பதிவை விறுவிறுப்பாக கொண்டுசெல்ல ஒரு நளினம் வேண்டும்.
    அது அங்கு நிறைய உண்டு போல. உங்களிடம் குறைகாண முடியுமா?
    பின்தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  21. '''படிப்பது ஆணா,பெண்ணா, படித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம்,இவைகள் முக்கியம். கல்விக்கு வந்த சோதனை என்னவென்றால், காலேஜ் சீட்டுகள் ஏலம் போடப்படுகின்றன.'''

    படிப்பது பெண்...வகுப்பில் முதல் 3 ராங்கிர்குள் வருவாள் .அவளும் மருத்துவம் படிக்க ஆசை படுகிறாள்...
    படிப்பது CBSE நாங்களும் பல மருத்துவ கல்லூறிகளில் முட்டிவிட்டோம் அதிகபடியான பணம் டொனைசனாக கேட்கிறார்கள்...

    மதிப்பெண் வந்த பிற்குதான் அரசாங்க கலூரிகளில் முயற்சிக்க வேண்டும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  22. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //வர ,கொஞ்சம் லேட்டா ஆயிபோச்சு.//
    நேரம் கிடைக்கும்போது வாங்க. முகூர்த்தமா தவறிப்போகுது. எப்பவாவது வந்தாப்போதுமுங்க.

    //பதிவை விறுவிறுப்பாக கொண்டுசெல்ல ஒரு நளினம் வேண்டும்.
    அது அங்கு நிறைய உண்டு போல. உங்களிடம் குறைகாண முடியுமா? //

    சின்ன வயசிலிருந்தே எனக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். ஐஸ் சுத்தமா சேராதுங்க. அதனாலெ கொஞ்சம் பாத்து....பக்குவமா...கமென்ட் போடுங்க... :-)

    பதிலளிநீக்கு
  23. "நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையான" விவசாயத்திற்கு இன்றுவரை முக்கியத்துவம் அளிக்காதது முக்கியமான குறைபாடுதான்.
    சுவார்ஸமாக இருக்கிறது உங்கள் படிப்புக் கதை.

    பதிலளிநீக்கு
  24. Dr.எம்.கே.முருகானந்தம் சொன்னது:
    //"நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையான" விவசாயத்திற்கு இன்றுவரை முக்கியத்துவம் அளிக்காதது முக்கியமான குறைபாடுதான்.
    சுவார்ஸமாக இருக்கிறது உங்கள் படிப்புக் கதை.//

    நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  25. //என்னுடைய அன்பு மாணவரும், சக ஆராய்ச்சியாளரும் தற்போதைய விவசாயப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான முனைவர் ப.முருகேச பூபதி அவர்கள்//

    தங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் உங்கள் மாணவர்.........
    பாராட்டத்தக்க விஷயம்......
    நீங்கள் படிக்கும் காலத்தில் (அ) இளம் பிராயத்தில் சந்தித்த
    சுதந்திர தியாகிகளை பற்றிய தகவலையும் குடுத்தால் இன்னும்
    நிறைய விஷயம் (சுதந்திரத்துக்காக சந்தித்த சோதனை...கள்)
    பற்றி தெரிந்து கொள்வோம் இன்றைய தலைமுறையினர்............
    நன்றி....
    மீண்டும் எப்பொழுது தொடரும் என்று எதிர்பார்த்திகும்
    இன்றைய தலைமுறையினர்....!!!!!!

    பதிலளிநீக்கு
  26. அச்சோ அந்த தபாலுக்குள் என்ன என்ன
    டாக்டர் சுவாரசியமாக இருக்கு உங்க கதை.

    படிப்பென்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக முக்கியம். சொல்லுங்க சீக்கிரம் அப்புறம்..

    பதிலளிநீக்கு
  27. விவசாயம் தற்போதைய 3 ராங்கிர்குள் வர ,கொஞ்சம் லேட்டா ஆயிபோச்சு.பழுத்த பழங்களாலேயே காலப்போக்கில் ஒவ்வொன்றிற்கும் தபாலைத் திறந்து பார்த்தால்...கடமையும் கவலையும் வந்தது, இதயமே பாரமாய் தன்னைவிட தன் நூறு சொந்தம் வந்தது,முக்கியமான காரணம்.
    உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்.

    கண்ணன்

    பதிலளிநீக்கு
  28. கண்ணன், வருக்கைக்கு நன்றி.
    அந்தக்காலத்தில் தபாலை கையினால் கிழித்து கடிதத்தை வெளியில் எடுத்துப்படித்தோம். இன்று கம்ப்யூட்டரில் மெயில் பாக்ஸைத் திறந்து லெட்டரைப்படிக்கிறோம். அன்று அந்த லெட்டர்களில் அனுப்புவரின் உணர்ச்சிகள் ஒட்டிக்கொண்டு இருந்தன. இன்று அவை இல்லை.

    பதிலளிநீக்கு
  29. மீதி கதையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்ங்க

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள அய்யா

    1953- 36ல் பொறியியல் நான்காண்டுகள் தானா - நான் 67 - 72 - 5 ஆண்டுகள் படித்தேனே !

    வேலைக்குச் சேர்ந்த கதை நன்று - மாணவர் ஒருவர் துணை வேந்தர் ஆவது ஆசிரியருக்குத்தான் பெருமை.

    நல்வாழ்த்துகள் அய்யா ( வாழ்த்துவதற்கு வயது தடை இல்லை என்ற கொள்கை உடையவன் )

    பதிலளிநீக்கு
  31. சீனா சொன்னது:

    ??1953- 36ல் பொறியியல் நான்காண்டுகள் தானா - நான் 67 - 72 - 5 ஆண்டுகள் படித்தேனே !//

    பெயிலாகி பெயிலாகிப்படிச்சீங்களோ என்னமோ? சும்மா தமாசுங்க.
    நாங்க படிக்கறப்ப "இண்டர்மீடியட்" அப்படீன்னு இரண்டு வருடப்படிப்பு படித்துவிட்டுத்தான் பிறகு புரொபஷனல் கோர்ஸ் வந்தோம். நீங்க படிக்கிறப்ப அந்த இண்டர்' கோர்ஸை இரண்டாப்பிரிச்சு பிபிசி என்றும் பிரிபுரோபஷனல் என்றும் பிரித்து பிரிபிரோபஷனல் கோர்ஸை பிரோபஷனல் காலேஜுக்கு கோண்டுவந்து விட்டார்கள். அதனால் எல்லா புரோபஷனல் கோர்ஸும் ஒரு வருடம் கூடிவிட்டது.

    இப்ப SSLC 11 வருடம் இருந்ததை 10 வருடமாக்கி அந்த ஒரு வருடத்தை பிபிசி கோர்ஸுடன் சேர்த்து +2 வாக ஆக்கியிருக்கிறார்கள். எப்படி செய்தாலும் புரோபஷனல் கோர்ஸுகளின் மொத்த வருடங்கள் இதுவரை மாறவில்லை.


    //வேலைக்குச் சேர்ந்த கதை நன்று - மாணவர் ஒருவர் துணை வேந்தர் ஆவது ஆசிரியருக்குத்தான் பெருமை.//

    ஆம்.

    நல்வாழ்த்துகள் அய்யா ( வாழ்த்துவதற்கு வயது தடை இல்லை என்ற கொள்கை உடையவன் )

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  32. தகவலுக்க்கு நன்றி அய்யா


    நானும் இண்டர்மீடியட் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன் - ஆமா

    பதிலளிநீக்கு
  33. Hello Sir

    Great to know about you. It is a surprise that B.Sc.Agri was a 3 years course those days. I am an Agricultural graduate too. But mine was of 4 years duration. I studied from 1997-2001.

    பதிலளிநீக்கு
  34. Raj Chandrasekharan said:

    //Hello Sir

    Great to know about you. It is a surprise that B.Sc.Agri was a 3 years course those days. I am an Agricultural graduate too. But mine was of 4 years duration. I studied from 1997-2001. //

    Welcome Raj. Happy to know you.
    நமது படிப்பின் காலங்கள் பலவாறு பல்வேறு கால கட்டங்களில் மாற்றியமைக்ப்பட்டன. நான் இன்டர்மீடியட் என்று 2 வருடம் படித்தேன். SSLC 11 வருடம். டிகிரி 3 வருடம். மொத்தம் 16 வருடங்கள். உங்களுக்கும் அப்படித்தான் 16 வருடங்கள் ஆகியிருக்கும்.

    நீங்கள் எந்தக்கல்லூரியில் டிகிரி படித்தீர்கள்?

    பதிலளிநீக்கு