டரங்க் பெட்டியும் தலைப்பார்சலும் கிடைத்த பிறகு போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆளவந்தார் வீட்டிலிருந்தும் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளியிடமிருந்தும் ஆளைக்காணவில்லை என்ற புகார் போலீஸுக்கு கிடைத்தது. இருவரையும் கூப்பிட்டு தலையைக் காட்டியதில் இறந்தது ஆளவந்தார்தான் எனபது உறுதியாகியது.
பிறகு என்ன, விசாரணையில் எல்லா விவரங்களும் தெரியவந்தன. வில்லனும் கதாநாயகியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற வரையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வெளியாகிக்கொண்டு இருந்தன. இந்தச் செய்திகளை -யெல்லாம் படித்தவுடன் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இருப்புக்கொள்ளவில்லை. அதிக நாள் தலை மறைவாக இருக்கமுடியாது எனத்தெரிந்தது. இருவரும் மெட்ராஸ் கோர்ட்டில் வந்து சரண்டர் ஆகிவிட்டார்கள்.
போலீஸ் விசாரணை எவ்வளவு நாள் நடந்தது என்பது சரியாக நினைவில்லை. விசாரணை முடிந்து கேஸ் கோர்ட்டிற்கு வந்த பிறகுதான் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 200க்கும் மேற்பட்ட சாக்ஷிகள். 20க்கும் மேற்பட்ட சாதனங்கள். இவைகளையெல்லாம் ஒரு ஆங்கில துப்பறியும் படம் பார்ப்பது போன்று விசாரணை விபரங்கள் பந்திரிக்கைகளில் வெளியாயின. தினத்தந்தியில் வழக்கு விபரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. பத்திரிக்கையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது.
மெட்ராஸ்வாசிகள் அநேகம் பேர் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கேஸ் விசாரணையைப் பார்க்கப் போனார்கள். கேஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. கடைசியாக கேஸ் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் முடிந்து கேஸ் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
தீர்ப்பு நாள் விடியற்காலையிலிருந்தே ஹைக்கோர்ட்டில் கூட்டம் கூடிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜட்ஜ் உள்ளே போவதற்கே போலீஸ் உதவி தேவைப்பட்டது. ஜட்ஜ் தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டது. கோர்ட்டில் மயான அமைதி. தீர்ப்பு படிக்கப்பட்டது. வில்லனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதாநாயகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியாக ஓர் ஆண்டுக்கு மேல் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த கேஸ் முடிவிற்கு வந்தது.
பின் குறிப்பு: தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இருவரும் மக்கள் சமுத்திரத்தில் மறைந்து போனார்கள்.
எப்படி தாத்தா சார் இப்படி எல்லாம்
பதிலளிநீக்குஒரு கிரைம் கதை படித்த திருப்தி உங்களுக்கு தான் நல்ல எழுத்து நடை இருக்கே அப்படியே ஒரு
நல்ல கதை எழுதினா இன்னும் சந்தோஷம் இந்த பேராண்டிக்கு
எப்போ கதை எழுத போறீங்க
சுவாரசியமாத் தொகுத்து வழங்கினீங்க... இந்த மாதிரி இன்னும் நிறைய, நிறைய எதிர்பார்க்குறமுங்க....
பதிலளிநீக்குநன்றி!!
ஹாய் அரும்பாவூர் சொன்னது:
பதிலளிநீக்கு//எப்படி தாத்தா சார் இப்படி எல்லாம்
ஒரு கிரைம் கதை படித்த திருப்தி உங்களுக்கு தான் நல்ல எழுத்து நடை இருக்கே அப்படியே ஒரு
நல்ல கதை எழுதினா இன்னும் சந்தோஷம் இந்த பேராண்டிக்கு
எப்போ கதை எழுத போறீங்க//
என்னை ஒரு Conan Doyle ஆக்கிவிட்டுத்தான் ஓய்வீங்க போல இருக்கு. விதி எப்படியெல்லாம் ஆட்டுவிக்குது பார்க்கலாம் பேராண்டி.
பழமை பேசி சொன்னது:
பதிலளிநீக்கு//சுவாரசியமாத் தொகுத்து வழங்கினீங்க... இந்த மாதிரி இன்னும் நிறைய, நிறைய எதிர்பார்க்குறமுங்க....//
பண்ணிடலாமுங்க. ரிடைர்டு ஆனபிறகு வேற என்ன வேலைங்க? சாப்பிட்டுட்டு தூங்கறதுக்கு பதிலா ஏதாவது ஜனங்களுக்கு உபயோகமா செஞ்சிடலாங்க. உங்க ஆதரவு இருந்தா போதுமிங்க.
நன்றாக இருக்கிறது,
பதிலளிநீக்குஅடுத்த கதை எப்போது.
1956 ஜூன் மாதம் நடந்த பேலூர் சீனிவாசய்யங்கார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூரில் கொலையாயினர். அதில் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனையும் அடைந்தனர். ஆனால் தூக்கு நிறைவேற்றப்பட்டதா என தெரியவில்லை.
பதிலளிநீக்குஇந்த கேசை வைத்து மேதாவி (அல்லது சிரஞ்சீவி?) ரங்கவிலாஸ் படுகொலை என ஒரு புத்தகம் எழுதினார். ஆனால் அதில் தண்டனை அளிக்கப்பட்டது வரைக்கும்தான் இருந்தது. மேல் விவரங்கள் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டாக்டர்சார். கதை விறுவிறுப்பு குறையாமல் சூப்பர். எப்படியெல்லாம் நடக்கு இந்த உலகத்துல அம்மாடியோ..
பதிலளிநீக்குடோண்டு ராகவன் சார்,
பதிலளிநீக்கு//1956 ஜூன் மாதம் நடந்த பேலூர் சீனிவாசய்யங்கார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூரில் கொலையாயினர். அதில் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனையும் அடைந்தனர். ஆனால் தூக்கு நிறைவேற்றப்பட்டதா என தெரியவில்லை.//
இந்தக்கொலைகள் நடந்து சில நாட்கள் கழித்து என் காலேஜில் இருந்து பெங்களூர் டூர் போயிருந்தோம். அப்போது அந்த கொலைகள் நடந்த வீட்டைப்போய் பார்த்தோம்.
அது சொத்து விஷயமாக நடந்த கொலைகள் என்று ஞாபகம். ஏழு பேர் கொலை செய்யப்பட்டார்கள். அதில் ஒரு சிறுமி மட்டும் தப்பித்து அந்த சொத்துக்களுக்கு வாரிசு ஆனாள் என்று கேள்வி. சில ஆண்டகளுக்கு முன் போயிருந்தபோது அந்த வீடு முற்றிலும் இடிக்கப்பட்டு கமர்சியல் பில்டிங்காக மாற்றப்பட்டு இருந்தது.
வருகைக்கு நன்றி.
இந்த மாதிரி சம்பவங்களை வைத்து தான் கதை எழுத படம் எடுக்க செய்கிறார்கள்....
பதிலளிநீக்குஅடுத்து என்ன?
ஓட்டு பட்டை சேர்க்கும் போது என்க்கும் முதலில் சைடு பாரில் தான் வந்து இருந்தது.நான் பதிவில் ஒருவரிடம் கேட்டதில் அவர் அதே லின்ங் தான் தந்தார் தட்டு தடுமாறி சேர்து விட்டேன்...
என்க்கும் கம்புயூட்ர் அறிவு அதிகாம் இல்லை.இவர்தான் என்க்கு சொல்லி கொடுத்தார்..
http://vandhemadharam.blogspot.com/2010/03/html.html#comments
பிள்ளைகளிடம் கேட்டேன் போம்மா உன்க்கு வேலை இல்லை என்று சொல்லிடாங்க....நீங்களும் விசயம் தெரிந்த ஒருவரிடம் கேட்பது தான் நல்லது...
அருமையான நடை... வழக்கை அருகிலிருந்து அலசிப் பார்த்தது போல இருந்தது.
பதிலளிநீக்குதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
//1956 ஜூன் மாதம் நடந்த பேலூர் சீனிவாசய்யங்கார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூரில் கொலையாயினர். அதில் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனையும் அடைந்தனர். ஆனால் தூக்கு நிறைவேற்றப்பட்டதா என தெரியவில்லை.//
இது கூட AMTEVILLE HORROR மாதிரி இருக்கு! இதைப்பற்றியும் எழுதினா நல்லாயிருக்கும்!
-
DREAMER
உங்களுக்கு 75 வயது என்பது உங்களது எழுத்தில் தெரியவில்லை. நன்றி.
பதிலளிநீக்குஉண்மையில் மிக நேர்த்தியாகவே வந்துள்ளது.
பதிலளிநீக்குமுழு நேர so-called எழுத்தாளர்களை விடவும் திறமையான பிளாக்கர்கள் இருப்பது கண்கூடு.
இனி அடுத்து யார் வருகிறார்,யார் துரத்துகிறார், யார் ஒடிபோகிறார், யார் மாட்டுகிறார் .......
குறுகுறுப்புடன் ............தொடருங்கள்.
நல்ல விறுவிறுப்பாக சொல்லியிருந்தீர்கள்.
பதிலளிநீக்குஇதேபோல எங்க பக்கத்தில் அந்த நாளைய கோகிலாம்பாள் வழக்கு ரெம்ப பிரசித்தம்.
கக்கு-மாணிக்கம் said:
பதிலளிநீக்கு//உண்மையில் மிக நேர்த்தியாகவே வந்துள்ளது.
முழு நேர so-called எழுத்தாளர்களை விடவும் திறமையான பிளாக்கர்கள் இருப்பது கண்கூடு.
இனி அடுத்து யார் வருகிறார்,யார் துரத்துகிறார், யார் ஒடிபோகிறார், யார் மாட்டுகிறார் .......
குறுகுறுப்புடன் ............தொடருங்கள்.//
ரொம்ப,ரொம்ப நன்றி மாணிக்கம். ஆனா கடைசிலெ இவ்வளவு பெரிய கல்லை (sorry) பொறுப்பைத் தூக்கி தலைல போட்டுட்டீங்க. தல தாங்குமான்னு தெரியலெ.
அன்புடன் மலிக்கா, சைவகொத்துப்புரோட்டா,
பதிலளிநீக்குஇருவருக்கும் நன்றிகள் பல.
அடுத்த கதை சீக்கிரம் எழுதப்பார்க்கிறேன்.
Dr.எம்.கே.முருகானந்தம் அவர்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஉங்களுடைய வாலிபர்கள் வயதுக்கு வருவது பற்றிய பதிவு படித்தேன். மிக நல்ல பதிவு. அதிக மக்களைப்போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
அந்தக்காலத்தில் இந்த மாதிரி நல்ல கட்டுரைகளைப் பிரசுரம் செய்த ஆ.வி., குமுதம் போன்ற பத்திரிக்கைகள், இன்று சினிமா செய்திகளைத்தவிர வேறு செய்திகளை வெளியிடாதது மிகவும் துரதிருஷ்டமானது.
மன்னார்குடி சொன்னது:
பதிலளிநீக்கு//உங்களுக்கு 75 வயது என்பது உங்களது எழுத்தில் தெரியவில்லை. நன்றி.//
ரொம்ப ஐஸ் வைக்காதீங்க, மன்னார்குடி. வயசான காலத்திலெ ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போகுது.
சீரியஸ் ஆக எடுத்துக்காதீங்க அப்பு. நன்றி.
:-)
பதிலளிநீக்குDreamer அவர்களுக்கு நன்றி. அவருடைய கருத்துக்கு டோண்டு ராகவனுக்கான பின்னூட்டத்தில் பதில் கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமலருக்கு மிக்க நன்றி, கருத்துக்கும், டிப்ஸுக்கும். முயற்சி செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குhttp://media.photobucket.com/image/thank%20you%20emoticons/prestonjjrtr/Christmas/xmas_ty_gift04.gif?o=18
பதிலளிநீக்குமலர்,
பதிலளிநீக்குஒரு மாதிரியாக கஷ்டப்பட்டு தமிழிஷ் ஓட்டுப்பட்டையை சேர்த்துவிட்டேன்.
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
ஆஹா.. இத்தனை நாள் உங்க வலைப்பூவை கவனிக்காமல் விட்டுட்டேனேன்னு வருத்தமா இருக்குங்க.
பதிலளிநீக்குஅருமையான எழுத்து நடை.
1 லட்சம் ஹிட்ஸுக்கு மேல் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்கும்போது பிரமப்பாயிருக்குங்க.
விறுவிறுப்பான பதிவு ,,,பகிர்வுக்கு நன்றி!! இன்னும் நிறைய எழுதுங்கள்!
பதிலளிநீக்குஇராகவன் நைஜீரியா சொன்னது:
பதிலளிநீக்கு//ஆஹா.. இத்தனை நாள் உங்க வலைப்பூவை கவனிக்காமல் விட்டுட்டேனேன்னு வருத்தமா இருக்குங்க.
அருமையான எழுத்து நடை.
1 லட்சம் ஹிட்ஸுக்கு மேல் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்கும்போது பிரமப்பாயிருக்குங்க.//
வாங்க இராகவன், வந்ததிற்கும் கருத்துக்கும் நன்றி.
அந்த 1 லட்சம் ஹிட்ஸ் கவுன்ட்டர் டூப்ளிகேட். சைடு பார்லெ இருக்கறதுதான் ஒரிஜினல். எனக்கு இந்த பதிவுலகத்தின் பேரில் சில கோபங்கள் உண்டு. அதில் இந்த ஹிட் கவுன்ட்டர் சமாசாரம். இதை சிலர் மேனிபுலேட் செய்கிறார்கள் என்ற சந்தேகம் ரொம்ப நாளாகவே உண்டு.
ஒருநாள் கூகுளாண்டவர் கோவிலில் இந்த கவுன்ட்டரை அகஸ்மாத்தாகப் பார்த்தேன். ஆரம்ப எண் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆஹா, இதுதான் சீக்ரெட்டா என்று அதைப்பிடித்துக்கொண்டேன். ஆரம்பம் 5 லடசம் போடலாமா என்று நினைத்தேன். பிறகு ரொம்பவும் பேராசை வேண்டாம் என்று 1 லட்சத்தில் ஆரம்பித்தேன். மனச்சாட்சி உறுத்தியதால் கடைசியில் மறைவாகப்போட்டேன்.
நீங்கள்தான் முதல்முதலாக இந்தக்கவுன்ட்டரை கண்டுபிடித்தவர்கள். உங்களுக்கு கொடுக்க கைவசம் என்னிடம் ஒன்றுமில்லை. ஏமாற்றியதிற்கு இந்த வயசான கிழவனை (75) மன்னித்து விடுங்கள் :-)
பனித்துளி சங்கர் சொன்னது:
பதிலளிநீக்கு//விறுவிறுப்பான பதிவு ,,,பகிர்வுக்கு நன்றி!! இன்னும் நிறைய எழுதுங்கள்!//
நான் கொஞ்சம் சோம்பேறிங்க. வயசும் ஆயிட்டுது. ஏதோ முடிஞ்ச வரைக்கும், உங்க மாதிரி இளைஞர்களை சந்தோஷப்படுத்துவதற்காக எழுத முயற்சி பண்ணுகிறேன்.
அய்யா, நானும் கோயம்பத்தூர்தான்...
பதிலளிநீக்குபழமைபேசி சொன்னது:
பதிலளிநீக்கு//அய்யா, நானும் கோயம்பத்தூர்தான்...//
பாரதி சொன்னான்- செந்தமிழ் நாடெனும்போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே-
இன்றுதான் என் காதில், வாயில், கண்ணில் எல்லாம் தேன் வந்து பாய்ந்தது.
நம்ம ஊட்டுலெ எல்லாரும் சௌக்கியமுங்களா?
ஐயா ட்ரீமர் இன் கையில் உங்கள் பின்னூட்டம் பார்த்து உங்கள் profile பார்த்தேன். ஆச்சர்யப்பட்டேன். இந்த வயதில் எழுதுவதே பாராட்டுக்குரியது அதிலும் கணினியில் superb sir, வயது தெரிய வேண்டாம் என்று இருப்பவர்கள் மத்தியில் சரியான வயதும் அதற்க்கு proof ஆக போட்டோ வும் நிமிர்த்திய புருவம் இன்னும் அப்படியே.
பதிலளிநீக்குகாலம் சம்மதித்தால் என் வலைபூவிற்கு வரவும். http://www.venthayirmanasu.blogspot.com
பின் குறிப்பாய் சொன்ன விஷயம்தான் எப்போதும் நெருடல்.
பதிலளிநீக்குதயவு செஞ்சு நிறைய எழுதுங்க... உங்க அனுபவம், அறிவு எனகளுக்கும் பயன்படட்டும்..
பதிலளிநீக்குரசிச்சு படிக்கிறோம்,.. ( அதாவது உங்க எழுத்தை ... சம்பவங்களை அல்ல )
ராமலக்ஷ்மி சொன்னது:
பதிலளிநீக்கு//பின் குறிப்பாய் சொன்ன விஷயம்தான் எப்போதும் நெருடல்.//
எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை?
பார்வையாளன் சொன்னது:
பதிலளிநீக்கு//தயவு செஞ்சு நிறைய எழுதுங்க... உங்க அனுபவம், அறிவு எனகளுக்கும் பயன்படட்டும்..
ரசிச்சு படிக்கிறோம்,.. ( அதாவது உங்க எழுத்தை ... சம்பவங்களை அல்ல )//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
நாய்க்குட்டி மனசு சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயா ட்ரீமர் இன் கையில் உங்கள் பின்னூட்டம் பார்த்து உங்கள் profile பார்த்தேன். ஆச்சர்யப்பட்டேன். இந்த வயதில் எழுதுவதே பாராட்டுக்குரியது அதிலும் கணினியில் superb sir, வயது தெரிய வேண்டாம் என்று இருப்பவர்கள் மத்தியில் சரியான வயதும் அதற்க்கு proof ஆக போட்டோவும் நிமிர்த்திய புருவம் இன்னும் அப்படியே.
காலம் சம்மதித்தால் என் வலைபூவிற்கு வரவும்.//
நன்றிகள் பல. நாய்க்குட்டிகள் ஏன் பேசுவதில்லை என்று உங்கள் பிளாக்குக்கு போய் கண்டுபிடித்தேன்.
//ரொம்ப,ரொம்ப நன்றி மாணிக்கம். ஆனா கடைசிலெ இவ்வளவு பெரிய கல்லை (sorry) பொறுப்பைத் தூக்கி தலைல போட்டுட்டீங்க. தல தாங்குமான்னு தெரியலெ//
பதிலளிநீக்குDr.K.P.Kandaswamy
இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டத்தை பார்த்துமா இப்படி நினைக்க தோன்றுகிறது உங்களுக்கு??
உங்களை சூழ்ந்து இத்தனை பேர் நிற்கையிலே ஏன் இந்த மனக்கலக்கம் தலைவரே !
தம்பி உடையான் படைக்கஞ்சான் :)
ஐயா,மிக அருமையாக எழுதுகிறீர்கள்.
பதிலளிநீக்குமிகவும் பெருமையாக உள்ளது.
உங்க வயதில் நானும் இப்படி துடிப்புடன் இப்படி இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி
நேரமிருந்தால்
பதிலளிநீக்குஎன் இந்த பதிவை படிக்க வேண்டுகிறேன்.
http://geethappriyan.blogspot.com/2010/03/200718love-in-time-of-cholera.html
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டத்தை பார்த்துமா இப்படி நினைக்க தோன்றுகிறது உங்களுக்கு??
உங்களை சூழ்ந்து இத்தனை பேர் நிற்கையிலே ஏன் இந்த மனக்கலக்கம் தலைவரே !
தம்பி உடையான் படைக்கஞ்சான் :)//
நீங்க இப்படி சொன்னதுக்கப்புறமும் நான் பயப்படுவேனா, தம்பி? இருந்தாலும் அவையடக்கம் கருதி கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டாமா?
கார்த்திகேயனும் அறிவுத்தேடலும் சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயா,மிக அருமையாக எழுதுகிறீர்கள்.
மிகவும் பெருமையாக உள்ளது.
உங்க வயதில் நானும் இப்படி துடிப்புடன் இப்படி இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி//
நிச்சயமாக இருப்பீர்கள். உங்கள் மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள். அது போதும்.
//நேரமிருந்தால்
என் இந்த பதிவை படிக்க வேண்டுகிறேன்.
http://geethappriyan.blogspot.com/2010/03/200718love-in-time-of-cholera.html//
இந்தப்பதிவையும் உங்களது மற்ற இரண்டு தளங்களையும் பார்த்தேன். இசை பற்றிய தளம் என் மனதைக் கவர்ந்தது.
Although the case is interesting, your writing style about the case is exceptional. Good post ayya.
பதிலளிநீக்குThank you முகுந்த் அம்மா
பதிலளிநீக்குஅப்பிடியே ஒரு ராஜேஷ்குமார் நாவல படித்த மாதிரி விறுவிறுப்பாய் இருந்தது.........
பதிலளிநீக்குEngineering said:
பதிலளிநீக்கு//அப்பிடியே ஒரு ராஜேஷ்குமார் நாவல படித்த மாதிரி விறுவிறுப்பாய் இருந்தது.........//
மிக்க நன்றி.
ரொம்ப நாளாய் ஆளவந்தார் கொலை வழக்கு பற்றித் தெரிந்து கொள்ள ஆவல். அது தீர்ந்தது. மனம் திறந்து சொல்கிறேன். மீண்டும்..மீண்டும்..படிக்க ஆவலைத் தூண்டும்படி உள்ளது உங்கள் ப்ளாக்.
பதிலளிநீக்குநன்றியுடன்,
ஆர்.ஆர்.