வெள்ளி, 26 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ்




சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக இருந்தது என்பதை என் போன்ற வயதானவர்கள் நினைவு வைத்திருப்பார்கள். அப்போது மெட்ராஸ்ஸிலிருந்து கொழும்பு வரையிலும் நேர் ரயில் போக்குவரத்து இருந்தது. அந்த ரயிலுக்கு “போட் மெயில் என்று பெயர். அது தனுஷ்கோடி வரையில் தரைத்தண்டவாளத்தில் செல்லும். அங்கு அந்த தண்டவாளத்தை ஒட்டி ஒரு கப்பல் நிற்கும். அந்த கப்பலிலும் ரயில் தண்டவாளம் போடப்பட்டிருக்கும். இரு தண்டவாளங்களையும் இணைக்க வசதி உண்டு. அப்படி தண்டவாளங்களை இணைத்து விட்டால் ரயிலை கப்பலுக்குள் ஓட்டிச்செல்லலாம். பிறகு தண்டவாளங்களின் இணைப்பை எடுத்துவிட்டு கப்பல் கடலில் செல்லும். தலைமன்னார் சேர்ந்தவுடன் மறுபடியும் இணைப்பு கொடுத்து ரயில் தரைக்கு வரும். பிறகு அங்கிருந்து கொழும்பு செல்லும். ரயில் கப்பலில் (போட்) செல்வதால் அதற்கு போட்மெயில் என்று பெயர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திரம் வந்த பிறகும் அந்த ரயில் போட்மெயில் என்ற பெயரிலேயே தனுஷ்கோடி வரை நிறைய வருடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.



1952 ல் ஒரு நாள் போட்மெயில் தனுஷ்கோடியில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிப்போய்விட்டார்கள். காலியாக இருந்த ரயிலை பரிசோதித்த ஒரு போலீஸ்காரர் ஒரு கம்பார்ட்மென்டில் ஒரு பெரிய டிரங்க் பெட்டி இருப்பதைப்பார்த்தார். யாரோ பயணி மறந்து விட்டுவிட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது என்று பிளாட்பாரம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். அப்படி யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்பவும் வந்து பெட்டியை அருகில் சென்று பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்து ஓரத்தில் தேங்கி இருந்தது.

உடனே பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி எல்லோரும் வந்துவிட்டார்கள். பெட்டி மிகுந்த கனமாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. நான்கு பேர் சேர்ந்து பெட்டியை பிளாட்பாரத்தில் இறக்கி பூட்டை உடைத்து பெட்டியைத் திறந்தால் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. உள்ளே ஒரு தலையில்லாத ஒரு ஆணின் உடல். கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு பெட்டியில் பேக் செய்யப்பட்டிருந்தது. உடலில் எந்த உடையும் இல்லை. உடனே தனுஷ்கோடியே அல்லோல கல்லோலப் பட்டது.

சென்னைக்கு தந்தி போயிற்று. டிரங்க்பெட்டி எந்த ஸ்டேஷனில் ஏற்றப்பட்டது என்பது உடனே தெரியவில்லை. மெட்ராஸ் போலீஸ் உடனே சுறுசுறுப்பாக எக்மோர் ஸ்டேஷனில் விசாரித்ததில் ஒரு போர்டர் அந்த மாதிரி பெட்டியை ஒருவர் கொண்டு வந்தார். நான்தான் அதை இன்ன கம்பார்ட்மென்டில் ஏற்றினேன். அதற்குப்பிறகு நான் வேறு கூலி பார்க்கப்போய்விட்டேன் என்று சொன்னார். உடனே பெட்டியையும் உடலையும் தகுந்த முறையில் பக்குவப்படுத்தி மெட்ராஸ் கொண்டுவரவும் என்று தனுஷ்கோடிக்கு தந்தி போயிற்று.

அந்தக்காலத்தில் இந்த மாதிரி கொலைகள் நடப்பது மிகவும் அபூர்வம். இந்த செய்தி உடனே காட்டுத்தீ போல தமிழகமெங்கும் பரவிவிட்டது.
இரண்டு நாள் கழித்து ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட மனிதத்தலை பேப்பரெல்லாம் கிழிந்து போய் சாந்தோம் பீச்சில் ஒதுங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதை வைத்து கொலை செய்யப்பட்டது யார் என்ற துப்பு துலங்கியது. இறந்தவர் “ஆளவந்தார் என்னும் நபர். சைனாபஜாரில் ஜெம் அண்ட் கோ என்னும் பேனாக்கடையில் சேல்ஸ்மேனாகப் பணியாற்றியவர் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.







கொலைசெய்யப்பட்ட ஆள் யார் என்பது தெரிந்துவிட்டால் கொலையாளியைக்கண்டு பிடிக்க சிரமப்படவேண்டியதில்லை அல்லவா? இரண்டு நாளில் துப்பு துலங்கிவிட்டது. கொலைக்கான காரணம் இன்றைய சுழ்நிலையில் மிக சாதாரணமானது. இந்தக்காரணத்தினால் இன்று சராசரியாக தமிழ்நாட்டில் தினம் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் அன்றைக்கு இது மிகவும் அதிசயமாகப்பேசப்பட்டது. அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?












30 கருத்துகள்:

  1. ஆனாலும் ,., இப்படியா சஸ்பென்ஸ்!!

    சீக்கிரம் .. சீக்கிரம் ..

    பதிலளிநீக்கு
  2. தருமி அவர்களே, துப்பறியும் கதை என்றால் சும்மாவா?

    பதிலளிநீக்கு
  3. ம்ம்.........விறுவிறுப்பாக இருக்கிறது, தொடருங்கள்.
    அந்த போட்மெயில் எனக்கு புதிய தகவல், சுவராசியம்.

    எழுத்து மிக சிறியதாக உள்ளதே, முடிந்தால் பான்ட் சைஸ் கொஞ்சம்
    பெரியதாக்குங்களேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆளவந்தார் இன்னும் உயிரோடத்தான் இருக்காராமே?!

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

    //ம்ம்.........விறுவிறுப்பாக இருக்கிறது, தொடருங்கள்.
    அந்த போட்மெயில் எனக்கு புதிய தகவல், சுவராசியம்.//

    நன்றி

    //எழுத்து மிக சிறியதாக உள்ளதே, முடிந்தால் பான்ட் சைஸ் கொஞ்சம்
    பெரியதாக்குங்களேன், நன்றி.//

    சரி செய்து விட்டேன். சும்மா ட்ரையல் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ஐயா நீங்கள் இந்த போட்மெயில் பயணம் செய்து இலங்கை சென்றது உண்டா

    2. இந்த போட்மெயிலா தனுஸ்கோடி புயலில் கடலில் முழுகியது ? அல்லது அது வேறா ? அந்த சம்பவம் உங்களை எந்த அளவு பாதித்தது.

    3.'' அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?'' - ம் சரிங்க ஆபிசர் . . .

    பதிலளிநீக்கு
  7. ///அந்த போட்மெயில் எனக்கு புதிய தகவல், சுவராசியம்///
    இது எனக்கும் புதிய தகவல் .........

    எப்பிடி சார்....
    ஒவ்வரு episode -உம் இப்படி suspense வச்சு முடிக்குரீர்கள் .....சூப்பர்....
    தொடருங்கள்....காத்திருகிறோம்.....

    பதிலளிநீக்கு
  8. போட் மெயில், ஆளவந்தார் கொலை என நாங்கள் அறியாத தளங்கள். உங்கள் அனுபவங்களை எங்களிடம் பகிர்வதற்கு நன்றிகள்.
    http://ippadikkuelango.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. நல்லபதிவு.

    "அந்த போட்மெயில் எனக்கு புதிய தகவல்" எனக்கும் தான்.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு ,உங்களின் எழுத்து நடை சூப்பர்.அப்படியே ஆட்டோ சங்கர் கொலை பற்றியும் எழுதுங்கள் .வாழ்த்துகள் .

    Visit :http://porunaipayyan.blogspot.com



    Best regards,

    Kumaraguru

    பதிலளிநீக்கு
  11. நெல்லை நண்பன் சொன்னது:

    //ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு ,உங்களின் எழுத்து நடை சூப்பர்.அப்படியே ஆட்டோ சங்கர் கொலை பற்றியும் எழுதுங்கள் .வாழ்த்துகள் .//

    ரொம்ப ரொம்ப நன்றி. ஆளவந்தார் கொலைக்கேஸ் மாதிரி எங்க வயசுக்காரங்களைப் பாதித்த கேஸ் வேற இல்லை. காரணம், அந்தக் காலத்தில் கொலை என்பது மிகவும் ஆபூர்வம்.

    பதிலளிநீக்கு
  12. மாயவரத்தான் சொன்னது:

    //ஆளவந்தார் இன்னும் உயிரோடத்தான் இருக்காராமே?!//

    ஆம். எங்களைப்போன்றவர்களின் மனதில்!

    பதிலளிநீக்கு
  13. புதுவை சிவா சொன்னது:

    //ஐயா நீங்கள் இந்த போட்மெயில் பயணம் செய்து இலங்கை சென்றது உண்டா//
    1947ல் எனக்கு வயது 12. எங்கள் குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம். வெளியூர் செல்வது என்பது 5 கி.மீ. தூரத்திலுள்ள என் பாட்டி வீட்டுக்கு செல்வதோடு சரி.

    //2. இந்த போட்மெயிலா தனுஸ்கோடி புயலில் கடலில் முழுகியது ? அல்லது அது வேறா ?//
    ஆம்.

    //அந்த சம்பவம் உங்களை எந்த அளவு பாதித்தது.//
    அரியலூர் ரயில் விபத்துக்கு அடுத்தபடியாக மனதைத்தொட்டது இந்த விபத்துதான். மிகவும் வருந்தினோம்.

    //3.'' அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?'' - ம் சரிங்க ஆபிசர் . . .//

    ஆபீசர் என்ற எண்ணம் என் மனதில் என்றுமே ஏற்பட்டதில்லை, சிவா. நான் "கந்தசாமி" என்கிற நினைப்புதான் எப்போதும் இப்போதும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. Engineering,Suresh, இளங்கோ, மாதேவி அனைவருடைய பாராட்டுகளுக்கும் நன்றி.

    என்னுடைய நடை நன்றாக வருவதற்கு காரணம் பதிவுலகம்தான்.

    பதிலளிநீக்கு
  15. //சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக இருந்தது //

    அப்படியா!

    //மெட்ராஸ்ஸிலிருந்து கொழும்பு வரையிலும் நேர் ரயில் போக்குவரத்து இருந்தது. அந்த ரயிலுக்கு “போட் மெயில்” என்று பெயர்.//

    உண்மையாகவா!

    //ஆளவந்தார் கொலைக்கேஸ்//

    பயங்கர suspense கேஸ் ஆக அந்த காலத்தில இருந்திருக்கும் போல.

    பதிலளிநீக்கு
  16. போட் ரயில்

    புதுசா இருக்கு


    என்னங்க இப்பிடி சஸ்பென்ஸ் வச்சு விட்டு போயிட்டிங்க

    பதிலளிநீக்கு
  17. இப்பிடி ஒரு சஸ்பென்ஸ்

    பதிலளிநீக்கு
  18. தலைவாசல் விஜய் நடிப்பில் தொலைக்காட்சித் த்தொடராக வந்த கதைதானே தல.., நாங்கள் பார்த்திருக்கிறோம்.


    இருந்தாலும் உங்கள் கோணத்தில் மீண்டும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  19. அடுத்தது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தானே?!

    பதிலளிநீக்கு
  20. பழமை பேசி, முகுந்த் அம்மா,ஏ.சிவசங்கர்,
    எல்லாருக்கும் நன்றி. இந்த போட்மெயில் போன்ற சில செய்திகள் இன்றைய இளைய தலைமுறைக்கு என் பதிவு மூலமாக தெரியவந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. Suresh (பழனியிலிருந்து)

    நீங்கள் சொல்லும் தொலைக்காட்சித் தொடரை நான் பார்த்ததில்லை. ஆனாலும் நாங்கள் அந்தக்காலத்தில் நாளிதழ்களின் மூலமாக அனுபவித்த திகில் ஒரு தனி அனுபவம்.

    பதிலளிநீக்கு
  22. மாயவரத்தான் அவர்களுக்கு,
    லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கின்போது நான் பேப்பர் படிக்க ஆரம்பிக்கவில்லை. அப்போது ஆங்கிலேயர் ஆண்டகாலம். இந்த மாதிரி கொலைக்குற்றங்களைப்பற்றி பேசுவதே குற்றமாக கருதப்பட்ட காலம். வெகுகாலம் கழித்து புத்தகங்கள் மூலமாகத்தான் நான் அந்த கேஸைப்பற்றிய விவரங்களைத்தெரிந்து கொண்டேன். நேரடியாக அனுபவிக்காத ஒன்றைப்பற்றி சுவாரஸ்யமாக எழுதக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  23. arputham train traveling in to a boat very intersting what happent to that boat?

    பதிலளிநீக்கு
  24. coimbatorebalu said:

    //arputham train traveling in to a boat very intersting what happent to that boat?//

    அந்தக்கப்பல் அநேகமாக ஸ்க்ரேப் பண்ணி பல உருக்கள் மாறியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. சம்பவங்களை வெகு சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள். போட் மெயில் பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு