வியாழன், 15 ஜனவரி, 2015

அறிவியல் பதிவு எண் 1

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

                                        

மூடத்தனமான பதிவுகள் எழுதி அலுத்து விட்டது. ஆகவே என்னுடைய படிப்பிற்குத் தகுந்த மாதிரி அறிவியல் பதிவுகளையும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இது முதல் பதிவு.

இந்தப் பதிவிற்குண்டான ஆதாரங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை. லைப்ரரிக்குப் போக முடிவதில்லை. அதனால்தான் இந்த உத்தி.

                                                         

முன்னுரை:

அமெரிக்காவில் பெர்க்கிலி என்னுமிடத்திலுள்ள கலிபோர்னியா யூனிவர்சிடியில் வேலை பார்க்கும்  புரொபசர் ரேங்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி தம்பதியினர் தங்கள் சபாடிகல் லீவில் இந்தியாவிற்கு வந்திருந்தார்கள். சென்னை வந்த அவர்கள் மகாபலிபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாள் அங்கு சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய கைடு, குரங்கு பேன் பார்க்கும் சிற்பத்தை அவர்களுக்கு காட்டினான். இது என்ன என்று கேட்டதற்கு அவன் தன் அரைகுறை ஆங்கிலத்தில் " மங்கி பேன் சீயிங்க்" (குரங்கு பேன் பார்க்குது) என்று சொன்னான். அவர்களுக்கு "பேன்" என்றால் என்னவென்று தெரியவில்லை. "வாட் ஈஸ் பேன்" என்றார்கள்.

நம்ம ஆள் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னென்னமோ சொல்லியும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் கடைசியாக ஒரு பேனைக் காட்டச் சொன்னார்கள். கைடு அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கூப்பிட்டு ஒரு பேனைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டான். அவள் உடனே தன் தலையிலிருந்து ஐந்தாறு பேன்களை எடுத்து அந்த புரொபசர் அம்மாவிடம் கொடுத்தாள்.

                                  

அந்த வெள்ளைக்காரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தலையில் ஒரு பயலாஜிகல் சிஸ்டமே இருக்குதே என்று வியந்தாள். ஆஹா, நம் ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான சப்ஜெக்ட் கிடைத்தது என்று இருவரும் ஆனந்தப் பட்டார்கள். ஊருக்குப் போனதும் இதைப் பற்றி ஆராய்ச்சித் திட்டம் போட்டுவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்து ஊருக்குத் திரும்பினார்கள்.

ஆதாரம்:
George Krucik, MD, MBA
dr george krucik
George provides clinical review consulting services for Healthline.com.  He has a dual career in both medicine and information technology. He practiced primary care medicine in the Bay Area for over 14 years and has served in an executive capacity for several public software companies including Autodesk Australia and EleTel. He has designed and brought to market healthcare applications as a senior product manager atsalesforce.com and Healthline.com.
George graduated with a BS in Computer Science and Mathematics and an MD from the University of Manitoba, in Canada. He recently graduated with an MBA from the University of California

ஆய்வுத்திட்டமும் களப்பணியும்

இந்த ஆராய்ச்சி "தமிழ் நாட்டில் பெண்மணிகளின் தலைப்பேன் ஆராய்ச்சி" என்று பெயர் பெறும்.

களப்பணி இந்திய துணைக் கண்டத்திலுள்ள தமிழ்நாட்டில் நடைபெறும். களப்பணிக்காக 100 உள் நாட்டு உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடைக்கானலில் உள்ள கார்ல்டன் ஓட்டலில் இரண்டு வாரப் பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொருவரும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அனுப்பப் படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 பெண்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆராய்ச்சிக்காக தயாரிக்கப்படும் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் பெற்று அதை பதிவு செய்வார்கள்.

இந்த விவரங்கள் அன்றன்று இணையம் மூலமாக கலிபோர்னியா யூனிவர்சிடிக்கு அனுப்பிவைக்கப்படும். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவல்களைத் தொகுத்து, பகுத்து, வகுத்து, கழித்து, கூட்டி உபயோகமான முடிவுகள் எடுப்பார்கள். இந்த முடிவுகள் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

அவ்வாறு ஒப்புதல் பெற்றபிறகு இந்த முடிவுகள் சர்வதேச விஞ்ஞானக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். இந்த அறிக்கை ஒரு லட்சம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களுக்கும், அனைத்து நாட்டு அரசுகளுக்கும், அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் அனுப்பப்படும். இதில் முடிவு செய்யப்பட்ட சிபாரிசுகளை  அனைத்து அரசு நிர்வாகங்களையும் நடைமுறைப் படுத்த அறிவுறுத்தப்படும். அதற்கு வேண்டிய செலவுகளுக்கான மானியம் உலக வங்கி கடனாக வழங்கும்.

ஆய்வு:

களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

முடிவுகள்.

1. இந்த விஷயத்தைப் பற்றி ஆயிரம் வருடங்களுக்கு முன்னரேயே பாண்டிய மன்னன் காலத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களின் கூந்தலில் பேன்கள் வருவதற்குக் காரணம் அந்தக் கூந்தலில் இயற்கையாகவே உள்ள நறுமணம்தான் காரணமா அல்லது மலர்கள் சூடிக்கொள்வதால் ஏற்பட்ட செயற்கை மணம் காரணமா என்று பாண்டிய மன்னன் கேட்டதாக  செப்பேட்டில் பதிவாகியிருக்கிறது.

அதற்கு சிவனே பாட்டெழுதி கோயில் பூசாரியிடம் கொடுத்தனுப்பியதாகவும்  அதனை ஒத்துக்கொள்ளாத அவைப்புலவர் தருமி என்பவர் (பதிவர் தருமி அல்ல) அந்தப் பூசாரிக்கு கொடுக்கவேண்டிய பரிசை மன்னன் கொடுப்பதைத் தடுத்ததாகவும் அதே செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.

பின்பு சிவனே நேரில் வந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்தி அந்த தருமி மேல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழர்களும் ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர்கள் என்று நிரூபணமாகிறது.

2. தமிழ்நாட்டுப் பெண்களின் தலைகளில் பேன் ஏன் உண்டாகிறது என்று ஆராய்ந்ததில் கீழ்க்கண்ட காரணங்க்ள புலனாகின்றன.

        2.1 தமிழ்நாட்டுப்பெண்கள் வெள்ளிக்கிழமை மட்டுமே தலைக்குக் குளிக்கிறார்கள். மற்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில்லை. அதனால் தலையில் அழுக்கு சேர்ந்து பேன் உற்பத்தியாகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பதால் அவர்கள் தலையில் பேன் பிடிப்பதில்லை.

       2.2 தமிழ்நாட்டுப்பெண்கள் தங்கள் தலைமுடிக்கு நிறைய எண்ணை தடவி இறுக்கமாகப் பின்னிக் கொள்கிறார்கள். அதனால் தலைமுடிக்கு காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்காமல் பேன்கள் நன்றாக இனப்பெருக்கம் அடைகின்றன.

        2.3 தவிர இந்தப் பெண்கள் அலங்காரம் என்ற பெயரில் கூந்தல் நிறைய பலவிதமான வாசனைகள் கொண்ட மலர்களை வைத்துக்கொள்கிறார்கள். இந்த வாசனைகள் பேன்களுக்கு மிகவும் பிடித்த வாசனையாகும். இதனாலும் பேன்கள் பெருகி வளர்கின்றன.

இந்தப் பழக்கங்களையெல்லாம் பாரம்பரிய வழக்கங்கள் என்று தமிழ்நாட்டுப்பெண்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதை அவர்கள் மாற்றவேண்டும். இந்த மாற்றத்திற்கு தமிழ்நாட்டு அறிஞர்களும் பதிவர்களும் உதவ வேண்டும்.

      2.4 தற்கால நாகரிக யவதிகள் இந்தப் பழக்கத்திலிருந்து மாறிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டுக் குளித்து முடியை அப்படியே காற்றோட்டமாக விட்டு விடுகிறார்கள். தவிர தலைக்கு எந்த எண்ணையும் தேய்ப்பதில்லை. எந்த விதமான மலர்களும் வைத்துக்கொள்வதில்லை. இவர்கள் பேன் தொல்லை இல்லாமல் பொடுகுத் தொல்லையினால் மட்டுமே அவதிப்படுகிறார்கள்.
பின்தொடர்ச்சி:

இந்த ஆராய்ச்சி இத்துடன் முடிவு பெறவில்லை. இது சம்பந்தமாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். இதை தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் எடுத்து செய்யுமென்று எதிர் பார்க்கிறோம்.

27 கருத்துகள்:

  1. :)))))

    ஐயா, தருமிக்கு வர இருந்த பரிசை நக்கீரன்தானே நிறுத்தினார்? அவரைத்தானே சிவன் எரித்தார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க, கதையையே மாத்திப் போட்டனுங்க. எத்தனை நாளைக்குத்தான் பழங்கதையையே பேசிக்கிட்டு இருக்கறதுங்க?

      நீக்கு
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சிவன் பெட்ரோல் எங்கே வாங்கினார்...? ஹா... ஹா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையில் அந்தக் காலத்திலேயே பெட்ரோல் பங்க்குகள் இருந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதது ஆச்சச்சரியமே?

      நீக்கு
  4. நல்ல பகிர்வு! :)

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஐயா
    பொங்கல் அன்று அறிவியல் பதிவு என்றவுடன் கரும்பில் எப்படி இனிப்பு உண்டாகிறது என்று பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பேன் ஆராய்ச்சி செய்யப்போயிட்டீங்களே!
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_16.html

      இந்தப் பதிவில் இருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்கவும். நான் ஏன் பேன் ஆராய்ச்சி செய்யப் போனேன் என்பது புரியும்.

      நீக்கு
  7. பேனை பெருமாள் ஆக்குவது என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பழமொழி - "ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது" 16 வயதினிலே சினிமா பார்க்கலையோ? அதில் இந்தப் பழமொழியை பாரதி ராஜா அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

      நீக்கு
  8. ஐயா
    பொங்கல் அன்று அறிவியல் பதிவு என்றவுடன் கரும்பில் எப்படி இனிப்பு உண்டாகிறது என்று பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பேன் ஆராய்ச்சி செய்யப்போயிட்டீங்களே!
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் மேற்கோள் காட்டிய தளங்களும் சென்று வந்தேன்.அன்று பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க இன்று வரை கூந்தல் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது போலிருக்கிறது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    த.ம.5

    பதிலளிநீக்கு
  10. அய்யா ஒரு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவிக்க முடியுமா என்பதைப்பற்றி நீங்கள் விளக்கமாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது. எனக்கு ஒன்னும் புரியலையே

      நீக்கு
    2. //பெயரில்லாவியாழன், 15 ஜனவரி, 2015 ’அன்று’ 11:09:00 முற்பகல் IST
      அய்யா ஒரு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவிக்க முடியுமா என்பதைப்பற்றி நீங்கள் விளக்கமாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்//

      ஆஹா, இது நேற்று வந்த பின்னூட்டமல்லவா? நேற்று பொங்கல் விழாவில் முழுவதுமாக ஈடுபட்டுவிட்டதால் இதைக் கவனிக்கவில்லை. நியாயமாக இதற்கு ஒரு தனிப்பதிவாகத்தான் பதில் எழுத வேண்டும். அப்படி எழுத இந்தப் பின்னூட்டம் போட்டவர் தன் பின்புலத்தைக் கொஞ்சம் தெரிவித்தால் அவருக்குப் புரியும்படியாக அந்தப் பதிவைப் போடலாம். அவர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

      நீக்கு
    3. //பெயரில்லாவியாழன், 15 ஜனவரி, 2015 ’அன்று’ 9:55:00 பிற்பகல் IST
      என்ன இது. எனக்கு ஒன்னும் புரியலையே//

      எனக்குப் புரிஞ்சு போச்சுங்க. ஆனா எனக்குப் புரிஞ்சத இங்கே எழுத முடியாதுங்க?

      நீக்கு
  11. //அந்த தருமி மேல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் சொல்லப்படுகிறது.//

    வேணும் ..வேணும் ... அந்த ஆளுக்கு இப்படித்தான் நடக்கணும் .....!

    பதிலளிநீக்கு
  12. //இந்தப் பழக்கங்களையெல்லாம் பாரம்பரிய வழக்கங்கள் என்று தமிழ்நாட்டுப்பெண்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதை அவர்கள் மாற்றவேண்டும்.//

    சரியா சொன்னீங்க,....

    பதிலளிநீக்கு
  13. அன்புடையீர்!
    வணக்கம்!
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்புடன்/நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா! நல்லா இருக்கு ஆராய்ச்சி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. ஐயா,
    அமெரிக்காவிலும் பேன் இருக்கிறது. குழந்தைகள் பள்ளிகளில் இருந்து கொண்டு வருவார்கள். மருந்து கடைகளில் இன்றும் lice ஷாம்பூ உள்ளது. அமெரிக்க பெண்மணிக்கு பேன் தெரியவில்லை என்பது சிறிது நம்ப முடிய வில்லை.
    மோனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவில் உள்ள மற்ற விஷயங்களை எல்லாம் நம்பும் நீங்கள் ஏன் இதை மட்டும் நம்ப மறுக்கிறீர்கள்? நான் என் பதிவில் உண்மையைத் தவிர வேறு எதையும் எழுதுவது இல்லையென்கிற விரதம் பூண்டிருப்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். உங்கள் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன்.

      நீக்கு