என் "மூடத்தனமான பதிவுகள்" என்ற பதிவிற்கு வருண்
அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து ஒரு பகுதி.
வருண்வெள்ளி, 9 ஜனவரி, 2015 ’அன்று’ 3:26:00 முற்பகல் IST
Please dont get mad at me too! It is very hard to understand your separate "scientific" and "cultural" views for anyone like me! It may be my ignorance but I have to tell you my ignorance here so that you can understand lots of "ignorant people" around here. Not just Karthik ammA or, dharumi sir.. There are many more..
இந்தக் குறிப்பிற்கு பின்னூட்டத்திலேயே பதில் எழுதினால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் என்பது என் கருத்து. அப்படியில்லாமல் உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது ஞானிகளுக்கே முடியக்கூடியது.
சில உதாரணங்களுடன் சொல்கிறேன்.
நாம் பலருடன் பழகுகிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலரைப் பிடிக்கவில்லை. பிடிக்காதவர்களுடனும் பழகும்போது நமக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளாமல்தான் பழகுகிறோம்.
நம் உறவினர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் யோசனையைக் கேட்கும்போது அவர்கள் மனதிற்குப் பிடித்ததைத்தான் சொல்கிறோமே தவிர நம் உண்மையான கருத்தைச் சொல்வதில்லை.
நம் முன்னோர்கள் திவசத்தன்று நாம் கொடுக்கும் உணவை காகமாக வந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் நான் தவறாது திவசம் கொடுத்துக்கொண்டு வருகிறேன். முன்னோர்களை நினைக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று எடுத்துக்கொள்கிறேன்.
இது தவிர நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் குடும்பத்தினருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் என் செயல்களினால் மனவருத்தம் அடைந்தால் பிறகு நான் ஒரு நல்ல குடும்பத்தலைவன் அல்ல. குடும்பத்தை விட்டு துறவறம் கொள்ளவேண்டும். அங்கு போனாலும் என் மனதிற்குத் தொன்றியவாறு இருக்க முடியாது. துறவிகளுக்கு என்று இருக்கும் கோட்பாடுகளைத் தழுவியே நான் வாழவேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் இரட்டை வாழ்க்கைதான் வாழ்கிறோம். இதைத்தான் நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
Scientific view என்று நான் குறிப்பிடுவது, எனது படிப்பு, அதன் விளைவான சிந்தனைகள், அதனால் உருவான என் மனதில் இருக்கும் சில கருத்துகள் இவைகள்தான். பதிவுலகில்தான் நான் ஒரு Ph.D. என்பதைத் தெரிவித்திருக்கிறேன். என் உறவினர்களுக்கு இந்தப் படிப்பைப் பற்றி இருபது முப்பது வருடங்களுக்கு முன் எதுவும் தெரியாது. நானும் என் படிப்பைப் பற்றியோ உத்தியோகத்தைப் பற்றியோ யாரிடமும் பேசியதில்லை.
என் உறவினர்களின் நிலைக்குத் தகுந்த மாதிரிதான் நடந்து கொண்டுள்ளேன்.
தடைமுறை வாழ்க்கையில் இந்த வழி அவசியமானது.
Cultural view என்று நான் சொல்ல விழைவது. எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி தினமும் ஒரு மணி நேரம் சாமி கும்பிடுகிறாள். அவளுடைய திருப்திக்காக நானும் சாமி கும்பிடுகிறேன். இது ஒரு குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் ஒரு செயல்.
நானும் என் மனைவியும் எப்படி வாழ்கிறோம் என்பதை என் வாரிசுகள் கவனிக்கிறார்கள். அதிலுள்ள நன்மை தீமைகளை அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன். தவறான பழக்க வழக்கங்களை நான் கடைப்பிடித்தால் அவர்களின் வாழ்வும் சிதறிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நான் குடும்பக் கலாச்சாரத்தை அனுசரித்துப் போகவேண்டிய கடமை இருக்கிறது.
என் குடும்பத்தினரின் வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு, நான் என் மனது சொல்கிற மாதிரிதான் வாழ்வேன் என்று நடைமுறை வாழ்க்கையில் சொல்ல முடியாது.
பதிவுலகம் ஒரு மாயா உலகம். இதில் நடப்பவை எதுவும் என் உலக வாழ்க்கையைப் பாதிக்கப்போவதில்லை. இங்கு நான் என் மனம்போல் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் இருக்க முடிகிறதா? இல்லையே.
//இங்கு நான் என் மனம்போல் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் இருக்க முடிகிறதா? இல்லையே.//
பதிலளிநீக்குஇருக்கலாம் ஐயா. உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுங்கள். மற்றவர்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும். இது ஒரு ஆரோக்கியமான விவாத மேடை. இதில் ஒருவர் சுதந்திரத்தில் மற்றொருவர் தலையிடுவது என்பதே கிடையாது என நினைக்கிறேன்.
நன்றி, நடனசபாபதி.
நீக்குஉலக வாழ்க்கையைப் பாதிக்காம இருந்தால் சரி தான் ஐயா...
பதிலளிநீக்குபதிவுலகம் என் வாழ்க்கையைப் பாதிக்க விடமாட்டேன். பதிவுலகத்தையும் கூகுள்காரன் விரட்டினால் ஒழிய நான் விட்டுப்போக மாட்டேன். அப்போதும் நான் ஒரு தனி டொமைன் வாங்கி என் கருத்துகளைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பேன்.
நீக்குசார்: எல்லாம் சரி, நீங்க உங்களுக்காக மட்டுமன்றி உலகுக்காகவும் வாழ்றீங்க. மறுப்பதற்கில்லை.
பதிலளிநீக்குசரி, "குடும்பப் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை" னு ஒரு பதிவு எழுதினீங்க இல்லையா? அதில் சொல்லப்பட்ட கருத்தெல்லாம் ஒப்புக்காக, ஊருக்காக சொன்னது, உங்க மனம் சொல்லும் கருத்தல்ல என்கிறீர்களா? இல்லைனா அதில் உள்ளவைகள் எல்லாம் உங்க கருத்துக்களா? இல்லைனா உங்க மனைவி உறவினர் நண்பர்கள் நம்பிக்கையை உங்க கருத்தாக சொல்லியிருக்கீங்களா???
பொதுவாக வலைபதிவில் நம் பதிவுகளில் நம் கருத்துக்களைத்தான் வெளியிடுவது வழக்கம். பிறர் பதிவில் நாம் இடும் பின்னூட்டங்கள் வேணா கொஞ்சம் அவர்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்று சொல்லும் கருத்தாக கொள்ளலாம். நாம் எழுதும் பதிவிலும் நம் மனதுக்கு ஒவ்வாத, நம் மனசாட்சியே ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்து விட்டு நமக்கே நம்பிக்கை இல்லாத கருத்துதை நாம் முன் வைப்பது அரிதுனு நான் நினைத்தேன்..I am learning I guess.. :)
திரு. அருண் அவர்களுக்கு,
நீக்குஇந்த வாத த்தை இப்படியே கொண்டு போவதில் எனக்கு விருப்பமில்லை.
//"குடும்பப் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை" னு ஒரு பதிவு எழுதினீங்க இல்லையா? அதில் சொல்லப்பட்ட கருத்தெல்லாம் ஒப்புக்காக, ஊருக்காக சொன்னது, உங்க மனம் சொல்லும் கருத்தல்ல என்கிறீர்களா? இல்லைனா அதில் உள்ளவைகள் எல்லாம் உங்க கருத்துக்களா? இல்லைனா உங்க மனைவி உறவினர் நண்பர்கள் நம்பிக்கையை உங்க கருத்தாக சொல்லியிருக்கீங்களா???//
இந்தக் காரணங்களில் உங்கள் மனதிற்கு எது பிடிக்கிறதோ அதை நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. என் கொள்கையைச் சொல்லிவிட்டேன். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம். என் கருத்துகள் பிடிக்காவிடில் என் தளத்திற்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சார்: நான் உங்களுடைய இன்னொரு பதிவில் இட்ட பின்னூட்டத்தை, ஒரு பதிவாகப் போட்டு, நாம் அனைவைரும் வாழ்வது இரட்டை வாழ்க்கையே என்று சொல்லியிருக்கிறீர்கள். பதிவில் என்னை மேற்கோள் காட்டியிருக்கீங்க.உங்க பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் இரட்டை வாழ்க்கைக் க்கருத்தைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்டால்,
நீக்கு***என் தளத்திற்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*** என்கிறீர்கள். :-))))
உங்க தளத்தில் பெண்கள் என்றும், அவர்கள் எப்படி வாழவேண்டும் என்றும் எழுதினால், பலர் பலவிதமான கருத்தை வைக்கத்தான் செய்வார்கள். மாறாக நான் டாக்டர் கந்தசாமி, நான் இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன்னு உங்களைப் பற்றி எழுதினால் யாரும் உங்களையோ உங்க கருத்தையோ எதுவும் சொல்லப்போவதில்லை!
"பெண்கள்" என்று நீங்க ஊரையே பொத்தாம் பொதுவாக சொன்னால், சில பெண்கள், அவர்கள் உணர்வுகளைப் புரிந்த ஆண்கள் ஏதாவது சொல்லத்தான் செய்வார்கள்.
இதெல்லாம் நான் உங்களுக்கு விளக்கணுமா என்ன? சரி விடுங்க! :)
ஒரு பதிவைத் தொடர்ந்து விளக்கமாகப் பல பதிவுகள். யாரும் யாரையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. மீறி முயன்றால் சில நட்புகளை இழக்க நேரிடும். ஆனால் அதுவே நம் கருத்தைச் சொல்லிப் போவதற்கு தடங்கலாக இருக்கக் கூடாது. உங்கள் மனம் திறந்த பதிவுகள் ரசிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி, ஜிஎம்பி.
நீக்குபதிவுலகம் ஒரு சுதந்திரமான இடம்...
பதிலளிநீக்குஇங்கு யாரும் யாரையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது...
நம் மனதில் பட்டதை நாம் பகிர்கிறோம்...
அதற்கு இருவேறான கருத்துக்கள் வரத்தான் செய்யும்...
நம் எண்ணங்கள் எல்லாவற்றிலும் எல்லாரும் ஒத்துப்போக வேண்டும் என்பது சரியானது அல்ல... அதே போல் அவர்கள் எண்ணங்கள் நமக்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்...
உங்கள் மனம் திறந்த பகிர்வுகளை தொடர்ந்து பகிருங்கள் ஐயா...
நன்றி, குமார்.
நீக்குநான் இரட்டை வாழ்க்கை என்றவுடன் இரண்டு பெண்டாட்டிக்காரன் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று
பதிலளிநீக்குநினைத்தேன்.
--
Jayakumar
நீங்கள் என் பதிவுகளை சரியாக வாசிப்பது இல்லையென்று தெரிகிறது. எனக்கு முன்பே பெண்டாட்டிகள் நான்கு. மூன்று நாளைக்கு முன்பாகத்தான் ஐந்தாவது பெண்டாட்டி கட்டிக்கொண்டு வந்தேன்.
நீக்குமுதல் பெண்டாட்டி - 50 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்த என் சகதர்மிணி.
இரண்டாவது பெண்டாட்டி - கம்ப்யூட்டர்
மூன்றாவது பெண்டாட்டி - ஸ்மார்ட் போன்
நான்காவது பெண்டாட்டி - கிண்டில் ரீடர்
ஐந்தாவது பெண்டாட்டி - ஆட்டோ கியர் உள்ள ஆல்டோ K 10 கார்
இந்த ஐந்து பெண்டாட்டிகளுடன் என் வாழ்க்கையை எழுதினால் அது பெரிய மகாபாரதம் ஆகிவிடும்.
வித்தியாசமான சிந்தனைகள். ஆனால் அனைத்துமே யதார்த்தம். தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎப்போ நீங்க இரண்டாவது பொண்டாட்டி கம்ப்யூட்டர் ஐப் பிடிச்சீங்களோ அதுலே இருந்து வருசத்துக்கு ஒரு புது பொண்டாட்டி ஆயிடுச்சு. எங்கே பொய் நிக்குமோ?
பதிலளிநீக்குபோன் வாங்கிய போது அது மூணாவது என்று சொன்னவனே நான்தான்.
Sorry poy enru agivittathu. mannikkavum.
--
Jayakumar