ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஒரு வெள்ளரிக்காய் கதை

                                                     

பழைய காலத்தில் கிராமங்களில் காலைக் கடனைக் கழிக்க ஊருக்கு வெளியில் பொட்டல் காட்டுக்கு செல்வார்கள். அப்படி ஒரு ஊரில் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரித்தோட்டம் இருந்தது. அந்த ஊரில் ஒருவன் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரிக்காயைப் பறித்து அதைத் தின்றுகொண்டே காலைக் கடனைக் கழித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியில் போன அந்த ஊர்க்காரன் ஒருவன் இவனைப் பார்த்து வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்கயைத் திங்கலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தவன் சொன்னான்.        "நான் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டால் உனக்கென்ன?  "நான் வெள்ளரிக்காயை சும்மா சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்,அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், நீ யார் அதைக்கேட்க" என்றானாம். (இங்கு "அதில்" என்றால் எது என்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

இது ஒரு கதை மட்டுமே. இந்தக் கதையை இங்கு சொல்வதற்கான காரண காரியங்களை யோசித்து உங்கள் மூளையை வீணாகக் கசக்கி வருத்தப்படவேண்டாம்.

14 கருத்துகள்:

  1. இதைத்தான் கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பதிவு புரிந்தாலும், இது எதனுடைய குறியீடு என்று புரியவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மூடத்தனமான பதிவுகளின் குறியீடு, ஸ்ரீராம். என் பதிவுகளை அப்படித்தானே ஒரு பதிவர் குறிப்பிட்டார். நல்லதிற்கு காலமில்லை என்பதன் குறியீடுதான் இந்தப் பதிவு.

      நீக்கு
  3. அவர் விருப்பம்போல எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு போகட்டும்.
    ஆனால் மற்றவர் தோட்டத்தில் பறித்து சாப்பிடுவது எந்த ஊர் நியாயமோ.

    அவர்தான் அப்படியென்றால்
    இனி வெள்ளரியை பார்த்தாலே எதையெதையோ நினைக்கும்படி ஆகிவிட்டதே ஆண்டவா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் கிராமங்களில் இப்படியெல்லாம் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள். மாடு வைத்திருக்கும் வீடுகளில் யார் வந்து கைக் குழந்தைக்குப் பால் கேட்டாலும் தவறாது கொடுப்பார்கள். ஒரு வீட்டில் அரசிச்சோறு ஆக்கினால் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு வஞ்சகமில்லாமல் கொடுப்பார்கள். இதெல்லாம் அந்தக் காலத்து பாரம்பரியம். இப்போது பாரம்பரியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்தான் இருக்கிறார்க்ள.

      நீக்கு
  4. அவரவர் விருப்பப்படி கட்டுப்பாடின்றி செல்பவர்களை இவ்வாறு கூறுவதுண்டு. இதுமாதிரி கதைகள் நான் கேட்டுள்ளேன். ஒருவகையில் நீதிக்கதை எனலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் நகைச்சுவைக் கதையைப் படித்தவுடன் கரிசல்மண் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களும் எங்கள் கிராம பெரிசுகளும் மனக்கண் முன் வந்து நின்றனர்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. வந்த சண்டையை விடக்கூடாது என்ற உங்கள் லட்சியம் எனக்குப் புரிகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  7. காக்கா காகானுதான் கத்தூம் அதை போய் குயிலு மாதிரி பாடச்சொன்னா பாடுமா வெள்ளரிக்கா தின்ன என்ன தொட்டுத்தின்னா என்ன ஊருக்குள்ள விபரம் தெரிஞ்சவன் அவனை சேர்க்கமாட்டானே அது போதூம் ஆமா இதையே ஓரு சாமியார் செய்சா ஊரும் செய்யும் இஈ்்்்ாாா

    பதிலளிநீக்கு
  8. மன்னிக்கவும், தரமற்ற மகா மட்டமான ஒரு கதை! இதே கருவை, கருத்தை நாகரீகமாக சொல்லலாம். கதையில் வருகிற "நாயகனுக்கு" அவன் எப்படிச் சொல்லுகிறான் என்பது முக்கியமல்ல, என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமாகப் பட்டுள்ளது. அவனுக்கு அசிங்கம் தெரியவில்லை. அதேபோல் மன அலைகள் ஆசிரியருக்கும் "அந்த நாயகன்" போலவே தன் உதாரணத்தால்/இக்கதையால் தன் தரமும், தன் தளத்தின் தரமும் பாதாளத்தில் விழுகிறது என்பதும் விளங்கவில்லை.என்ன ஒரு பரிதாபம்!

    உங்க கதைக்கு -1 மதிப்பெண் முழுமனதோடு தருகிறேன், பதிவரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வருண், இந்தக் கதை உங்களுக்காகவே எழுதப்பட்ட கதை. அதைப் படித்து பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி. என் தரம் பாதாளத்தில் விழுவதைப் பற்றி எனக்கு எள்ளளவும் கவலை இல்லை வருண் அவர்களே. உங்களுக்கும் என் பதிவுகளுக்கும் ஆகாது என்று சொன்ன பிறகும் வருகிறீர்களே, அந்த வெள்ளரிக்காய் சாப்பிடுகிறவன் சொல்கிற மாதிரி "நான் தொட்டுகிட்டுச் சாப்பிடுவேன்" என்கிற மாதிரித்தான் எனக்குத்தோன்றுகிறது..

      நீங்கள் எத்தனை மைனஸ் மதிப்பெண் கொடுத்தாலும் நான் கவலைப் படப் போவதில்லை. தொடருங்கள்.

      நீக்கு
  9. இதே சொற்றொடரை முன்பு ஒரு காங்கிரசை சேர்ந்த மய்ய அமைச்சர் சொல்லியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘அதில்’ என்பது இலக்கணப்படி இடக்கரடக்கல் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கணம் மறந்து போச்சுங்க நடனசபாபதி. "இடக்கரடக்கல்" எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. இருங்க கூகுள்ல பார்த்துட்டு சொல்றேன்.

      நீங்க சொன்னா அது தப்பாகுமா? சரிதான். ஒரு சபையில் சொல்லக்கூடாததை மறைமுகமாகச் சொல்லுதல். உதாரணம். "கால் கழுவி வந்தான்"

      நீக்கு